Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all articles
Browse latest Browse all 405

2014 – கணிப்பும் கனவும் : 5

$
0
0

இதற்கு முன்

_62363_indian_democracy300மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் நீங்கள் சொல்லும்படி தில்லுமுல்லுகள் செய்ய முடியுமென்றால், ஆளுங்கட்சிகள் வெகு எளிதில் வெற்றி பெற்றுத் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க முடியுமே. ஏன் அப்படி நடப்பதில்லை. பெரும்பாலான மாநிலங்களிலும், மத்தியிலும் தொங்கு சபைகளே அமைகின்றனவே.

இந்த மோசடிகளை இந்திய கட்சிகள் எதுவும் செய்வதாக நானும் நினைக்கவில்லை.

அப்படியானால் யார்தான் செய்கிறார்கள்?

முதலிலேயே சொன்னேனே… அமெரிக்கா உலகம் முழுவதும் தனது பொம்மை அரசுகளை உருவாக்கி அந்ததந்தப் பகுதி வளங்களைச் சுரண்ட முயற்சிசெய்துவருகிறது. உலகின் அனைத்து பகுதிகளிலும் தனது நலனையும் மதிப்பீடுகளையும் அது மிகவும் தந்திரமான முறையில் நிறைவேற்றி வருகிறது. அவர்கள்தான் தமக்குத் தோதான ஆட்சியை ’ஜனநாயக’ முறையில் உருவாக்கிவருகிறார்கள்.

அப்படியானால், தோற்கும் கட்சிகளாவது மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தின் மீதான புகாரை எழுப்ப முடியுமல்லவா? அதை ஏன் செய்வதில்லை.

பொதுவாக இது மிகவும் புத்திசாலித்தனமாக தந்திரமாக முன்னெடுக்கப்படுகிறது. வெறுமனே மின்னணு வாக்குப் பதிவு எந்திர மோசடியை மட்டுமே வைத்து ஒரு கட்சியின் வெற்றியோ இன்னொரு கட்சியின் தோல்வியோ தீர்மானிக்கப்படுவதில்லை. அதற்குத் தோதான பல விஷயங்கள் பல தளங்களில் முன்கூட்டியே செய்யப்பட்டு இறுதி உத்தரவாதமாக மின்னணு எந்திர மோசடி நடத்தப்படுகிறது. இதில் ஊடகங்கள் முக்கிய பங்குவகிக்கின்றன. அவற்றின் மூலம் ஏதாவது ஒரு கட்சிக்கு எதிரான விஷயங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. மக்கள் மத்தியில் அந்தச் செயல்பாட்டுக்கு எந்தப் பெரிய செல்வாக்கும் இருக்காது. எனினும் அதன் மூலம் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியதுபோல் ஒரு தோற்றம் உருவாக்கப்படும். வாஜ்பாய் அரசு அடுத்து ஆட்சிக்கு வரமுடியாமல் தோற்கடிக்கப்பட்டது, தொடர்ந்து மோடி வெற்றி பெற்றுவருவது, பிரபாகரன் கொல்லப்பட்டு தமிழகத்தில் ஈழ அனுதாப அலை வீசிய நேரத்தில் நடந்த தேர்தலில் திமுக+காங்கிரஸ் கூட்டணிக்கு கணிசமான இடம் கிடைத்தது, ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக எதுவுமே செய்யாத ஜெயலலிதா ஐந்தாண்டுக்கு ஒருமுறை அமோக வெற்றி பெறுவது எனப் பல தேர்தல் முடிவுகள் சந்தேகத்துக்கு இடமானவை. இவ்வளவு ஏன் கெஜ்ரிவாலின் அமோக வளர்ச்சிகூட நம்பமுடியாததாகவே இருக்கிறது. அவருடைய வெற்றிக்கும் கேங் ரேப் நிகழ்வுக்கு ஊடகங்கள் தந்த அதீத முக்கியத்துவத்துக்கும் இடையில் ஒரு வலுவான தொடர்பு இருக்கிறது.

கெஜ்ரிவாலின் வெற்றிக்கு அண்ணா ஹசாரே மூலம் அவருக்குக் கிடைத்த ஆரம்பகட்ட நன் மதிப்பும் ஊழக்கு எதிராக அவர் போராடுவார் என்ற நம்பிக்கைதானே காரணம்.

அவையும் ஒரு காரணம். ஆனால், உணர்ச்சிபூர்வமாக டில்லி ஆளுங்கட்சியின் மேல் பெரும் அதிருப்தி எழ கேங் ரேப் நிகழ்வுக்கு ஊடகங்கள் தந்த அதிகப்படியான முக்கியத்துவமே காரணம். அப்படியாக களம் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டுவிடுகிறது. அதன் பிறகு மின்னணு இயந்திர மோசடி மூலம் தேர்தல் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. இதனால் யாருக்கும் எந்த சந்தேகமும் எழுவதில்லை.

சரி… கெஜ்ரிவால் பற்றி என்ன நினைக்கிறீர்கள்… ஃபோர்டு ஃபவுண்டேஷனால் முன்னிறுத்தப்படும் நபர் என ஒரு விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே…

நிச்சயமாக அதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. ஃபோர்டு ஃபவுண்டேஷன் சில நல்ல காரியங்கள் செய்திருக்கலாம். ஆனால், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு அந்த அமைப்பு வலுப்பெறவே கூடாது. தேர்தலுக்கு முன்புவரை காங்கிரஸின் ஊழலைப் பற்றி வாய் கிழியப் பேசி வந்த கெஜ்ரிவால் ஆட்சி அமைக்க அவர்களின் ஆதரவு தேவை என்றதும் காங்கிரஸ் மீதான விமர்சனத்தை அப்படியே சுருட்டி வைத்துக்கொண்டுவிட்டார். எடுத்த எடுப்பிலேயே மத்திய மாநில அரசுக்கு இடையிலான சண்டையைப் பெரிதுபடுத்தும் முயற்சியில் இறங்கினார். மாநில அரசுக்கு ஜன் லோக் பாலை அமல்படுத்தும் அதிகாரம் கிடையாது என்றதும் நான் மக்கள் முன்னிலையில் சட்டமாக்குகிறேன் என்று மத்திய அரசுடனான விரோதத்தை பெரிதுபடுத்த முனைந்தார்.

மக்களின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய்ய விரும்புவதாக அவர் சொல்வது சரிதானே. ஒரு நியாயமான சட்டத்தை முழு வீரியத்தோடு இன்றைய அரசியல் சாசன சட்டத்துக்குட்பட்டு அமலாக்க முடியவில்லையென்றால், மக்கள் ஆதரவுடன் அதை அமல்படுத்த முன்வந்தது தைரியமான நேர்மையான செயல்தானே. அதிலும் ஒவ்வொரு முக்கிய முடிவையும் மக்களிடம் கருத்துக் கணிப்பு வைத்து அதன்படி முடிவெடுப்பேன் என்ற அவருடைய தீர்மானம் உண்மையான மக்களாட்சியைக் கொண்டுவருமல்லவா..?

நிச்சயமாக. அவருடைய அந்த முயற்சிகள் எல்லாமே பாராட்டத் தகுந்தவையே. காசிக்குச் சென்று வழிபாடு நடத்தியது, சிங்கத்தை அதன் குகையில் சென்று சந்திப்பதைப் போல் வாரணாசியில் போட்டியிடத் தீர்மானித்தது, கன்னத்தில் அறைந்த ஆட்டோ டிரைவரை வீட்டுக்குச் சென்று சந்தித்து பேசியது போன்றவையெல்லம் அவர் மீதான மதிப்பை அதிகரிக்கவே செய்கின்றன. ஆனால், அவர் நல்லவரா கெட்டவரா என்ற பயம் இருந்துகொண்டேயிருக்கிறது. ஒருவகையில் அவர் இந்தியாவின் கோர்பசேவ் ஆக ஆகிவிடுவாரோ என்ற பயம்கூட எனக்கு உண்டு.

ஏற்கெனவே காஷ்மீர் தனியாகப் பிரிந்து செல்ல வெளிப்படையான ஆதரவு அவரால் தரப்பட்டிருக்கிறது.

ஆமாம். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்ற போர்வையில் அவர் பல விஷயங்களை முன்னெடுக்கக்கூடும். அவை இந்திய தேசியத்தை வலுவிழக்கவைக்கக்கூடும்.

ஆனால், அமெரிக்க பன்னாட்டு சக்திகளுக்கு இந்தியா ஒரே தேசமாக இருந்தால்தானே சுரண்டுவது எளிது. ஒவ்வொரு குறு நில மன்னரையும் சமாளிப்பதைவிட ஒரே ஒரு சக்கரவர்த்தியை சரிக்கட்டுவதுதானே அவர்களுக்கு எளிதாக இருக்கும். ஜமீந்தாரி முறையை காலனியவாதிகள் அமல்படுத்தியதன் நோக்கமே அதுதானே. ஒரு பன்னாட்டு நிறுவனம் இந்தியாவில் கால்பதிக்க விரும்பினால் மத்திய அரசுடன் ஒரே ஒரு ஒப்பந்தம் செய்துவிட்டால் போதும். அதுவே அனைத்து மாநிலங்களிலும் அந்த நிறுவனத்துக்கு சிவப்புக் கம்பளம் விரித்துக் கொடுத்துவிடும். மத்திய அரசு வலுவாக இல்லாமல் இருந்தலோ அல்லது இந்தியா ஒவ்வொரு மாநிலமாகப் பிரிந்து சென்றாலோ ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒப்பந்தம் போட்டு ஒரு நிறுவனம் தன் கிளைகளை விரிப்பது மிகவும் சிரமமாக இருக்குமே.

அது சரிதான். சுரண்ட விரும்பும் பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களுக்கு இந்தியா ஒரே தேசமாக இருப்பதுதான் நல்லது. எனவே, அவர்கள் அவ்வளவு சீக்கிரம் இந்தியாவைத் துண்டாக விடமாட்டார்கள். இந்து அம்சத்தை நீக்கிவிட்டு அந்த இடத்தில் கிறிஸ்தவ மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதுதான் அவர்களுடைய இலக்கு. எனவே, அந்தவகையில் ஒரு இந்தியன் கொஞ்சம் ஆசுவாசமடைந்துகொள்ளலாம். இந்தியாவை அவர்கள் துண்டாக விடமாட்டார்கள். ஆனால், இந்த இடத்தில் இன்னொரு சந்தேகம் வருகிறது. பன்னாட்டு ஆயுத நிறுவனங்களும் சுற்றுலா துறைகளும் இந்தியாவை அமைதியான, ஒரே தேசமாக இருக்கவிரும்பமாட்டார்கள். 9/11க்குப் பிறகு இந்தியாவை இஸ்லாமிய தீவிரவாதத்தின் முதல் இலக்காக மாற்ற அமெரிக்கா விரும்புகிறது. இந்தியாவில் இந்து அடிப்படைவாதத்தை கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவியுடன் வளர்ப்பதுகூட அந்த சதியின் ஓர் அங்கமாகவே தோன்றுகிறது. அது உண்மையென்றால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒன்றுபட்ட இந்தியா முலம் கிடைக்கும் பொருளாதார லாபத்தைவிட இஸ்லாமிய தீவிரவாதத்தில் இருந்து அமெரிக்காவுக்குக் கிடைக்கும் பாதுகாப்பே பிரதானமாக இருக்கும். அதற்கு இந்தியாவை அழிவுப் பாதையில் தள்ளுவதே அவர்களுக்கு நல்லதாக இருக்கும்.

மேற்குலகம் இலங்கையில் செய்தார்களே அதுபோல்.

ஆமாம். சிங்கள், ஈழ சக்திகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்து மோதவிட்டு இலங்கையை அழித்தார்கள். இன்று இலங்கையைப் புனரமைக்கும் காண்ட்ராக்டையும் போர்க்குற்ற நடவடிக்கை எடுக்கும் பொறுப்பையும் அவர்களே எடுத்திருக்கிறார்கள். ஆக இரண்டு வகையிலும் லாபம். அழிப்பவனும் அமெரிக்கனே… காப்பவனும் அமெரிக்கனே. அப்படியாக சிவனாகவும் விஷ்ணுவாகவும் அடுத்தடுத்து அவதாரமெடுக்கிறார்கள். இந்தியாவில் மாநிலங்களிடையேயான சண்டை, சாதிகளுக்கிடையிலான சண்டை, வட – தென் இந்திய சண்டை இவற்றையெல்லாம்விட இந்து முஸ்லீம் சண்டைதான் சரியான துருப்புச் சீட்டு. லேசாகக் கொளுத்திப் போட்டாலே பற்றிக் கொண்டு எரியும். எனவேதான் மேடமும் மதச் சார்பற்ற சக்திகள் ஒன்று சேரவேண்டும் என்று முஸ்லிம்களுக்கு வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார். பி.ஜே.பி.யில் மிதவாத சக்திகள் ஓரங்கட்டப்பட்டு நான் ஒரு இந்து தேசியவாதி என கர்ஜிக்கும் மோடி முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறார். இலங்கைத் தமிழர்களுக்கு எப்படி ஒரு பிரபாகரனோ அதுபோல் இந்திய இந்துக்களுக்கு ஒரு மோடி.

மோடி தொடர்ந்து தேர்தலில் வென்றதை நீங்கள் சந்தேகப்பட்டுச் சொல்லியிருந்தீர்கள்.

ஆமாம். இந்துப் பெரும்பான்மை ஒருபோதும் அடிப்படைவாதத்துக்கு ஆதரவாக இருந்ததில்லை… ஒருபோதும் இருக்காது என்பதே என் நம்பிக்கை. இந்த நம்பிக்கைக்குப் பின்னால் ஆயிரம் ஆண்டு கால சரித்திரம் இருக்கிறது. குஜராத்தில் கரசேவகர்கள் படுகொலை செய்யப்பட்டபோதுகூட ஒட்டு மொத்த இந்தியாவில் இந்துக்களின் மத்தியில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் மேல் ஒரு சிறு கீறல் கூட விழவில்லையே. நேர்மாறாக பங்களாதேஷில் என்ன நடந்தது என்று உலகம் பார்க்கத்தானே செய்தது. இந்தியாவில் தொழுகையே நடந்திராத ஒரு கட்டடம், முன்பு வழிபாடு நடந்து வந்த  ஒரு கோயில் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும்பான்மை இஸ்லாமியர்களின் மத்தியில் சிக்கியிருந்த இந்துக்கள் சின்னாபின்னப்படுத்தப்பட்டனர். பங்களாதேசம் முழுவதும் பற்றி எரிந்தது. ஏனென்றால், பங்களாதேசம் முழுவதும் இஸ்லாமியர்கள் இருந்தார்கள்.

இந்தியாவில் கோத்ரா படுகொலை நடந்த பிறகும் குஜராத்தில் அதுவும் சில மாவட்டங்களில் மட்டுமே இந்துக்கள் ஆயுதங்களுடன் தெருவில் இறங்கினார்கள். எஞ்சிய பகுதியில் இருந்த பெரும்பான்மை இந்துக்கள் அவர்களுடைய இயல்பான மத சகோதரத்துவத்துடன்தான் இருந்தார்கள். அந்த குஜராத் இந்துக்கள்கூட மோடிக்குத் தொடர்ந்து ஆதரவு தந்திருப்பார்களா என்ற சந்தேகம் எனக்கு உண்டு. அடிப்படைவாதத்தை நோக்கி நகர்ந்தால்தான் நமக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும் என்ற தவறான பாடத்தை இந்து சக்திகளுக்குப் புகட்ட மின்னணு வாக்கு எந்திர மோசடி மூலம் நடத்தப்பட்ட நாடகமோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு.

இந்து பெரும்பான்மை சாத்விகமானது என்று நம்புகிறீர்களா..?

அதில் என்ன சந்தேகம்? இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த பிறகும் காஷ்மீரில் இஸ்லாமியர்களால் அவர்கள் அடித்துத் துரத்தப்பட்டது தொடர்பாக, எந்த இந்துவாவது ஆத்திரமடைந்து எந்தவொரு இஸ்லாமியரையாவது தாக்கியதுண்டா? குஜராத்தில் இந்து யானைக்கு ஒரே ஒரு முறைதான் மதம் பிடித்தது. காஷ்மீரில் ஆண்டுக்கணக்கில் அல்லவா இஸ்லாமிய யானை மதம் பிடித்து அலைகிறது. இஸ்லாமியர்கள் அதிகமாக இருந்தால்தான் இந்தப் பிரச்னை என்று இல்லை. இந்தியாவில் சுதந்தரத்துக்குப் பிறகு நடந்த 90 சதவிகித குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டது 15 சதவிகிதம் இருக்கும் இஸ்லாமியர்கள்தான். இந்துப் பெரும்பான்மை ஒப்பீட்டளவில் பெரிதும் அமைதியாகவேதான் இருக்கிறது. இந்த மனோபாவத்தைப் பார்க்கும்போது மோடி பெற்ற வெற்றி எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது. அதிலும் அது காந்தி பிறந்த மண். குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு என்ன என்பதுகூட முக்கியமில்லை. இந்துப் பெரும்பான்மை சந்தேகத்துக்கு இடமான ஒருவரைத் தேர்ந்தெடுத்திருக்காது என்றே நம்புகிறேன். இப்போதும்கூட இந்தியா முழுவதிலும் மோடியை ஆதரிப்பவர்களில் 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் அவருடைய நிர்வாகத் திறமையைப் பாராட்டித்தான் அவரை பிரதமராக வேண்டும் என்று சொல்கிறார்கள்.

மோடி நல்லவரா…கெட்டவரா… உங்கள் பார்வை என்ன?

அவர் கெட்டவர் அல்ல. ஆனால், அவருடைய வருகையால் கெட்டது நடந்துவிடும் என்று அஞ்சுகிறேன். மோடியை முன்வைத்து தேசத்தில் ஒருவித பதற்றமான சூழல் வலிந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இது நல்லதல்ல. மோடியினால் இந்து சக்திகள் எந்த அளவுக்கு அடிப்படைவாதம் நோக்கிச் செல்வார்களோ அதைவிட மோடி எதிர்ப்பாளர்கள் திரிபுவாதம் நோக்கிச் செல்கிறார்கள். இது நாளை எளிதில் தீவிரவாதம் நோக்கிச் சென்றுவிடும்.

இந்துப் பெரும்பான்மை அவருடைய நிர்வாகத் திறமையை பார்த்து மட்டுமே வாக்களிக்க விரும்புகிறது. ஆனால், இஸ்லாமிய, முற்போக்குப் போராளிகள்தான் சுற்றிச் சுற்றி அவரை இஸ்லாமிய எதிரியாக முத்திரை குத்தி வருகிறார்கள். என்னமோ குஜராத் கலவரம் முடிந்து நேரடியாக அவர் பிரதமராக வரப்போவதுபோல், அவருடைய பத்தாண்டு கால மாநில ஆட்சியை மறந்துவிட்டுப் பேசுகிறார்கள்.

என்னதான் ஆனாலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் செய்த தவறுக்கு இஸ்லாமிய அப்பாவிகளைத் தண்டித்தது / அதற்குத் துணைபோனது எந்தவகையிலும் சரியில்லையே…

அது தவறுதான். ஆனால், நான் இங்கு சுட்டிக் காட்டவிரும்புவது முற்போக்கு, மதச்சார்பற்ற அறிவுஜீவிகளின் இரட்டை வேடத்தைத்தான். அவர்கள் இந்து அடிப்படைவாதத்தை வளரவிடாமல் தடுக்கிறேன் என்ற பெயரில் இந்துப் பெரும்பான்மையின் உணர்வுகளை காலின் கீழே போட்டு மிதிக்கிறார்கள். நான் உங்களை இன்னொரு விஷயம் கேட்கிறேன். காஷ்மீரில் இந்துக்கள் பட்ட வேதனை குறித்து எந்த முற்போக்கு மேதாவியாவது வாய் திறந்து ஏதேனும் பேசியதுண்டா… காஷ்மீர் இந்தியாவில் இல்லையா… அப்பாவி இந்துக்களின் ரத்தத்துக்கு எந்த விலையும் கிடையாதா? முற்போக்குப் போராளிகளின் உடம்பில் ஓடும் பரந்த மனப்பான்மை கொண்ட இந்து ரத்தம், இஸ்லாமியர் படும் துன்பத்தைக் கண்டு வருந்திப் பேசவைக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், சொந்தத்தின் சோகத்தையும் கொஞ்சமாவது அது புரிந்துகொள்ளட்டுமே என்று எதிர்பார்ப்பது தவறா? ஒரு சில அடிப்படைவாதிகள் செய்யும் தவறுக்காக இஸ்லாமிய சமூகத்தையே பழிக்கக்கூடாது என்று சொல்லும் இந்த போராளிகளில் எத்தனைபேர் அப்பாவிகளான இந்துப் பெரும்பான்மையின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஒரு வார்த்தை பேசியிருக்கிறார்கள். இந்து அடிப்படைவாதிகள்தானே அவர்களுக்காகப் பேசியாக வேண்டியிருக்கிறது. இந்து அப்பாவிகளின் உணர்வுக்கு மதிப்புக் கொடுத்து ஒரு வார்த்தையை இந்தப் போராளிகள் பேசியிருந்தால் அடிப்படைவாதிகள் பக்கம் போக வேண்டிய அவசியமே வந்திருக்காதே… ஒரு எளிய இந்துவை இந்து அடிப்படைவாதம் நோக்கி யார் நகர்த்துகிறார்கள்.  மதச்சார்பற்றவர் என்ற போர்வையில் திரியும் இந்த முற்போக்காளர்கள்தானே. இது ஒருவகையில் பழி தீர்த்தலாகவே இருக்கிறது. ரஷ்யாவிலும் சீனாவிலும் கம்யூனிஸ மாவோயிஸ அராஜகவாதிகள் செய்தவற்றுக்கு இந்திய கம்யூனிஸ்ட்களைத் திட்டித் தீர்த்துவந்த இந்து சக்திகளுக்கு ஒருவித பதிலடியாகவே தரப்படுகிறதோ என்னவோ… கம்யூனிஸ்ட்கள் மிகுந்த பதற்றத்துடன் கண்மூடித்தனமாக மோடியை எதிர்ப்பதைப் பார்க்கும்போது இந்த சந்தேகம்  வலுப்படவே செய்கிறது. ஊரான் தவறை ஊதிப் பெரிதாக்கினால் தன் தவறு தானே மறையும் என்ற மனோதத்துவ அணுகுமுறை இதில் இருக்கிறது என்று நினைக்கிறேன். இதில் வருந்த வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த இந்து சக்திகளும், கம்யூனிஸ சக்திகளும் பரஸ்பரம் இப்படி மிகையாக ஒருவரை மாற்றி ஒருவர் விமர்சித்துக்கொள்வதால், உண்மையான எதிரி எந்த தடையும் இன்றி தன் இலக்கை நோக்கி முன்னேறுகிறான்.

0

Share/Bookmark


Viewing all articles
Browse latest Browse all 405

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!