Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all 405 articles
Browse latest View live

எதிர்மறை கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

$
0
0

mathsஜெயிப்பது நிஜம் / அத்தியாயம் 2

சின்ன வயதிலிருந்தே நான் பார்வையற்றோர் பள்ளியில்தான் படித்து வந்தேன். படிப்பில் ஓரளவு சுட்டிதான் நான். ஆனால் கணக்கில் மட்டும் கொஞ்சம் வீக். நிறைய பேருக்கு இருக்கும் பிரச்னைதான் இது. எல்லா சப்ஜெக்டும் நல்லா வந்தாலும் ஏதாவது ஒரு சப்ஜெக்ட் மட்டும் மக்கர் பண்ணும். எனக்கும் அதே பிரச்னை, கணக்கில்.

அப்போ நான் எட்டாம் வகுப்பு படிச்சிக்கிட்டு இருந்தேன். கணித பாடத்துக்கு அதுவரை இருந்த ஆசிரியர் விடைபெற்று வேறு ஒரு புது ஆசிரியர் வந்திருந்தார்.

இடைநிலைத் தேர்வு (மிட்டெர்ம் டெஸ்ட்) வருகிறது. தேர்வு முடிந்து திருத்தப்பட்ட விடைத்தாள்களை எங்களுக்குக் கொடுத்துக்கொண்டே வருகிறார். எல்லாரையும் இயல்பாக அவரவர் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் வாங்கியிருந்த மதிப்பெண்களை கூறிக்கொண்டே வந்த ஆசிரியர், என் பெயரைக் குறிப்பிடும்போது மட்டும், ‘இப்போ ஒருத்தரோட மார்க்கை நான் சொல்லப்போறேன். அவர் ரொம்ப பெரியவர். நம்ம கிளாஸ்லயே ஹீரோ அவர். அவர் யார் தெரியுமா? யார் தெரியுமா? மிஸ்டர். இளங்கோதான்!’ என்று கிண்டலாக என்னை விளித்து பின்னர், எல்லாரையும் பார்த்து ‘ஐயா எடுத்த மார்க் எவ்ளோ தெரியுமோ? 100 க்கு 35. பெரிய மார்க் இல்லே?’ என்றார்.

மாணவர்கள் மத்தியில் களுக்கென்று ஒரு சிரிப்பொலி.

நான் ஒரு கணம் கூனிக் குறுகிப் போனேன்.

என்னைப் பார்த்துத் திரும்பி, மேற்கொண்டு அவர் தொடர்கிறார். இதே மாதிரி போப்பா… நல்ல வளர்ச்சி. சூப்பரா இருக்கும். இவங்கல்லாம் அடுத்து நைன்த் ஸ்டாண்டர்ட் போய்டுவாங்க. நீ இதுலயே இருக்கலாம்.

இது சின்ன விஷயமா சிலருக்குப் படலாம். ஆனா என்னைப் பொருத்தவரை அவமானத்துக்கு மேல் அவமானம். அவரோட வார்த்தைகள் ஒவ்வொன்னும் ஈட்டியா இருக்கு எனக்கு.
நான் ஒரு பார்வையற்ற மாற்று திறனாளியாய் இருந்தும் நான் ஆறாம் வகுப்பிலிருந்தே எல்லா விஷயத்துலயும் ஒரு முன்மாதிரி மாணவர்னு பேரெடுத்தவன். பள்ளியில் நடக்கும்
போட்டிகள் எதுவாக இருந்தாலும் அது பேச்சுப் போட்டியாக இருந்தாலும் சரி… பாட்டுப் போட்டியாக இருந்தாலும் சரி…. எதுவாக இருந்தாலும் அதில் கலந்துகொண்டு முதல் மூன்று பரிசுகளுள் ஒன்றை தட்டிக்கொண்டு வந்துவிடுவேன்.

இப்படி எல்லாவற்றிலும் நான் அடித்து தூள் செய்யும்போது என்னுடைய கணித பலவீனத்தை மட்டும் குத்திக்காட்டும் முயற்சி தொடர்ந்து நடந்து வந்தது. ஆசிரியர் ஸ்தானத்தில் இருந்து ஒரு மாணவனை சரியாக வழி நடத்தவேண்டியவர்… இப்படிச் செய்தது கொடுமைதான். என்ன செய்வது?

கனத்த மனதுடன் வீட்டுக்குத் திரும்பிய எனக்கு அன்றைய இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. நடந்த இந்த அவமானத்தை நான் யாரிடமும் பகிர்ந்துகொள்ளவும் இல்லை.ஏன் இப்படி? எங்கே தவறு நடந்தது? எப்படி இந்த அவமானத்தைத் துடைப்பது? இப்படி பலவாறாக சிந்தனை ஓடுகிறது.

அடுத்த பத்து நாட்களுக்கு வகுப்பு வரும்போதெல்லாம் இதே சிந்தனைதான் எனக்கு மனத்தில் நிழலாடியது.

கணக்கென்ன பெரிய விஷயமா? அதெப்படி வராமல் போய்விடும்? கணிதத்தின் அடிப்படையே வாய்ப்பாடுதான். எல்லாரும் 16 ஆம் வாய்ப்பாடு வரைதான் அப்போதெல்லாம் மனனம் செய்வது வழக்கம். ஆனால் நான் 20ம் வாய்ப்பாடு வரை மனனம் செய்ய ஆரம்பித்தேன்.

வாய்ப்பாடு ஓரளவு கைவரப்பெற்றதும் நம்பிக்கை கைகூடியது. நம்மால் நிச்சயம் கணிதத்தில் ஒரு நல்ல மதிப்பெண்ணைப் பெற முடியும் என்று நம்பிக்கை உறுதியாக ஏற்பட்டது. வேப்பங்காயாக கசந்த கணிதம் இப்போது இனிக்க ஆரம்பித்தது.

அதற்குப் பின்னர் பல கணக்குகள், கூட்டல்கள், கழித்தல்கள், சூத்திரங்கள் என எல்லாவற்றையும் திரும்பத் திரும்ப ப்ராக்டீஸ் செய்தேன். கணக்குக்கு மட்டும் கொஞ்சம் கூடுதல் நேரம் ஒதுக்கினேன்.

சரியாக ஆறு மாதங்கள் கழித்து திரும்பவும் ரிவிஷன் தேர்வு வந்தது.

இந்த முறை வாத்தியார் விடைத்தாள்களை அவரவர் பெயர்களை கூறிக்கொண்டே கொடுக்கிறார். என்னோட தாளை அளிக்கும்போது. ‘முன்னேற்றம் அப்படின்னா அதுக்கு அர்த்தம் இதுதான். இப்போ ஒருத்தரோட மார்க்கை நான் சொல்லப்போறேன். அதை சொல்றதுக்கு முன்னாடி அவர் முந்திய தேர்வுகளில் எல்லாம் எடுத்த மார்க் எவ்ளோ தெரியுமா? 35, 50. இப்போ எவ்ளோ தெரியுமா? 90!’

‘வெல்டன் இளங்கோ. 100 க்கு 90 மார்க் எடுத்திருக்கிறார் மிஸ்டர். இளங்கோ’ என்று கூற, மாணவர்கள் கை தட்டுகிறார்கள்.

அன்றைக்குதான் நான் தலை நிமிர்ந்தேன். பட்ட அவமானம் துடைத்தெறியப்பட்டது. மேற்படி அனுபவங்களுக்கு பிறகு கணக்குமீது எனக்கு அலாதி பிரியம் ஏற்பட்டது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணிதத்தில் நான் வாங்கிய மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? நூறுக்கு நூறு.

ஒரு காரியத்தை உங்களால் செய்யமுடியாது என்று யாராவது கூறினால், சொன்னவர்கள் மேல் கோபப்படாமல், அவர்கள் ஏன் அப்படிச் சொல்கிறார்கள்? அது ஏன் நம்மால் முடியாது? நம்மிடம் உள்ள பலவீனம் என்ன? என்று யோசியுங்கள்.  நமது மைனஸை ப்ளஸ்ஸாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

Share/Bookmark


சாதி என்றொரு மாயம்

$
0
0

sultanateபறையர்கள் / அத்தியாயம் 2

முல்லை நிலத்து இடையனும், குறிஞ்சி நிலைத்துக் குறவனும், மருத நிலத்து வேளாண் பெண்ணை மணக்க முடியாது. அதைப் போலவே மருத நிலத்து வேளாண் இளைஞன் ஒருவன் நெய்தல் நிலத்துப் பரதவப் பெண்ணை காதலித்தல் இழுக்காகக் கொள்ளப்பட்டது.

தமிழக வரலாற்றில் சங்ககாலம் ஒரு பொற்காலம் எனக் கருதப்படுகிறது. அப்போது மிகச் செல்வாக்காக இருந்ததாகக் கருதப்படும் நான்கு குடிகள் துடியன், பாணன், பறையன், கடம்பன் என்பவையாகும். இந்தக் குடிகளை விடச் சிறந்த குடிகள் வேறு இல என்று அவர்களுடைய தொழிலின் சிறப்பைப் பாராட்டி மாங்குடி கிழார் பாடியுள்ளார்.

பண்டைய காலத்தில் மனித இனம் சிறு சிறு குழுக்களாக அமைந்திருந்தது. உணவுக்கும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் மனித இனம் ஓரிடத்திலேயே நிலைத்து நிற்காமல் உணவு கிடைக்கும் பல்வேறு இடங்களை நோக்கி அலைந்து கொண்டிருந்தது. உணவுக்குரிய இடம் கண்டுபிடிக்கப்பட்டப் பின்னர் அவ்விடத்துக்கு வரும் புதிய குழுக்களின் ஊடுருவலைப் பிறிதொரு கூட்டம் தடுத்து நிறுத்தியது. இந்த உறவு, இதனடிப்படையில் நிலவிய பொதுமை உணர்வுப் பகிர்வு ஆகியன கூட்டங்கள் அல்லது குழுக்களாக இருந்த அமைப்புகளைக் குலக் குழுக்களாக மாற்றம் பெறச் செய்துள்ளன.

அதாவது, கூட்டங்கள் அல்லது குழுக்கள் ஒவ்வொன்றும் குலத் தலைமை, தனிக் குல மரபுச் சின்னம், பொது மண உறவில் தடை ஆகியவற்றின் மூலமாக ஒன்றையொன்று வேறுபடுத்திக் கொண்டன. குலக் குழுக்களிடம் காணப்பட்ட இத்தகைய சிறுசிறு வேறுபாடுகளையே சாதிப்பிரிவினைகள் தோன்றுவதற்குரிய அடிப்படையாக அமைத்துக் கொள்ளலாம். ஆதிகால மனிதன் அல்லது குழுக்கள் உட்கொண்ட உணவுப் பொருள்களே குழுக்களைப் பிரிக்கும் குலச் சின்னங்களாக அமைந்தன.

0

மூவேந்தர் ஆட்சிக்காலத்தில் படிநிலை சமூகம் அமைந்திருந்தது. ஆயர் அல்லது இடையரும், வேட்டுவர் அல்லது வேடரும் உழவருக்கு அடுத்த படியில் உள்ளவர்கள், பொற்கொல்லர், கருமான், தச்சர், குயவர், முதலிய கலைத் தொழிலாளர் ஆயர்களுக்கு அடுத்த படியிலுள்ளவர்கள். அவர்களுக்கு அடுத்தது, படையாச்சியர் அல்லது படைக்கலம் மேற்கொண்டவர்கள். வலையர் அல்லது மீன் தொழிலாளரும் புலையர் அல்லது தோட்டிகளும் கடைசிப் படியிலிருந்தார்கள்.

உயர் வகுப்பினர் தெருவில் சென்றபோது தாழ்வகுப்பினர் அவர்களுக்கு வழிவிட்டனர். பெருமகனைக் கண்ட புலையன் அல்லது தோட்டி வழிபடுபவன் போல இருகைகளையும் கூப்பித் தலைவணங்கினார்.

அடிமைத்தனம் தமிழரிடையே இருந்ததில்லை. தமிழரிடையேயுள்ள மேற்காட்டிய வகுப்பு முறை மெகஸ்தனிஸ் கண்டு தீட்டிய பண்டை மகதப்பேரரசிலுள்ள மக்கள் நிலையைப் பெரிதும் ஒத்துள்ளன.

மெகஸ்தனிஸ் குறித்துள்ளபடி மக்கள் தொகுதி ஏழு வகுப்புகளாகப் பிரிவுபட்டிருந்தது.
முதலாவதாக, அறிவர் வகுப்பு. இவர்கள் தொகையில் மிகமிகக் குறைவானவர்களே. தனிப்பட்ட மனிதர்களால் அவர்கள் வேள்விகளிலும் மற்றத் திருவினைகளிலும் ஈடுபடுத்தப்பட்டார்கள். அறிவர்கள் பொது மக்களுக்கு அந்த ஆண்டின் பஞ்சப்பருவங்கள், மழை, அரசியல் கோளாறுகள் ஆகியவை பற்றி அறிவுரை நல்கினர். இந்த அறிவர்கள் ஆடையற்றவர்களாகவே இருந்தார்கள்.

இரண்டாவதாக, உழவர் வகுப்பு. இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் நேரம் முழுவதையும் நிலம் பண்படுத்துவதிலேயே செலவிட்டனர். ஆயர்களும் வேடர்களும் மூன்றாம் வகுப்பினர். அவர்கள் தங்கள் கால்நடைகளைப் பேணியும், கூடாரங்களில் தங்கியும் நாடோடி வாழ்வு வாழ்ந்தனர்.

நான்காவது, தொழில் வகுப்பு. பொருள்கள் வாங்கி விற்றல், கூலிவேலை செய்தல் அவர்கள் வேலை. படைக்கலத் தொழிலாளரும், கவசத் தொழிலாளரும், எல்லா வகைப்பட்ட கலைத் தொழிலாளர்களும் இதில் அடங்குவர்.

போர் வீரர் ஐந்தாம் வகுப்பினர். அவர்கள் அரசன் செலவில் வாழ்ந்து வந்தனர். ஆறாவது வகுப்பு மேற்பார்வை செய்தது. நாட்டிலும் நகரிலும் நடப்பதை ஒற்றறிந்து அரசனுக்கோ, தண்டலாளருக்கோ அறிவிப்பது அவர்கள் கடமை.

ஏழாவது வகுப்பு தன்னாட்சியுடைய நகரங்களில் பொது ஆட்சிக்காரியங்களில் மன்னன் அல்லது தண்டலாளர்களுக்கு அறிவுரை கூறிய மன்றத்தாரைக் கொண்டது.

ஒரு வகுப்பிலிருந்து மற்றொரு வகுப்புக்கு மாறுவதற்கு அனுமதியில்லை. ஓர் உழவன் இடையனாகவோ அல்லது இடையர் வகுப்பைச் சேர்ந்தவர் கலைத்தொழில் வகுப்பிலிருந்து பெண்கொள்ளவோ முடியாது. அறிவர் வகுப்புக்கு மட்டும் இச்சட்டதிட்டம் முழுவிலக்களித்தது. அவர் எந்த வகுப்பினராகவும் இருக்கலாம். ஏனெனில் அவர் வாழ்வு எளிதான ஒன்றல்ல.

0

இன்று ஒவ்வொரு சாதியும் அகமண உட்சாதிகளாகப் பிரிந்து ஒவ்வொன்றுக்குள்ளும் கரை, கூட்டம், வகையரா, பரம்பரை, வம்சம், குலம் என்று சொல்லக்கூடிய பல புறமணக் குழுக்கள் உள்ளன.

இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு சாதியும் பல கால்வழிக் குழுக்களாகப் (வம்சம்) பிரிகின்றன. ரத்த உறவையும், சந்ததியின் தொடர்ச்சியையும் குறிக்கும் இக்குழுக்கள் குலம், கோத்திரம், கூட்டம், பரம்பரை, வகையரா, வம்சாவளி போன்ற பல சொற்களால் குறிக்கப்பட்டுகின்றன.

தமிழ்ச் சமூகத்துக்கு நேரிட்ட சாதி இன்னல்களைக் கண்டு பல அறிஞர்கள் அவ்வப்போது தமிழருக்கு அறிவுரைகள் வழங்கி வந்துள்ளனர்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா / செய்தொழில் வேற்றுமை யான் என்றார் திருவள்ளுவர். இது மக்கள் சமூகத்தில் வாழவேண்டிய முறைகளை வகுக்கும் புறத்திணை இலக்கணமாகும். திருமூலர் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் திருமந்திரம்) என்று கூறி மக்களைத் திருத்த முயன்றனர்.

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சைவ சமய குரவரான திருநாவுக்கரசர், ‘சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் / கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்?’ (தேவாரம்) என்று வினவுகிறார். ராமலிங்க அடிகளார், சமயம் குல முதல் சார்பெலாம் விடுத்த. அமயம் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி என்றும் சாதி குலமென்றும்…ஓதுகின்ற பேயாட்டம் என்றும் சாதி வேறுபாடுகளை வன்மையாகக் கண்டிக்கிறார்.

0

ஆனால் யார் வந்து என்ன சொன்னாலும் ‘சாதி’ என்ற மாய கௌரவத்தை இங்கு யாரும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

சாதிகளின் இருப்பு ஒருபுறம் இருந்தாலும் சாதிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு காலகட்டத்திலும் பெருகவே செய்தது. கி.பி. 52க்குப் பின் மலபாரில் வந்து குடியேறிய அராபியர்கள் தொடர்பால் ‘மாப்பிள்ளை’ என்னும் சாதியினர் தமிழகத்தில் தோன்றினர். கி.பி. 6ம் நூற்றாண்டில் ஹர்ஷர் காலத்தில் சமூகத்துறையில் சாதிக் கட்டுப்பாடு, தீண்டாமை ஆகியவை வலுவாக மேற்கொள்ளப்பட்டன.

கி.பி. 7ம் நூற்றாண்டில் வர்த்தனர் ஆட்சிக்காலத்தில் சாதிகளின் எண்ணிக்கை மேலும் மேலும் வளர்ந்து வந்தது. பிறப்பால் சாதி தோன்றுகிறது என்னும் கருத்து வேரூன்றலாயிற்று. தொழில் அடிப்படையில் பிறந்திருக்கக்கூடிய சாதி, தொழில் மாறினாலும் மாறாத நிலையில் நிலைபெற்றது. இந்தியாவில் சுல்தான்களின் ஆட்சிக்காலத்தில், சிறுசிறு சாதிகளும் புது சிறு உட்சாதிகளும் தோன்றின. இக்காலக்கட்டத்தில் இந்து சமுதாயத்திலிருந்த சாதிகளின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே போனது.

13ம் நூற்றாண்டில் மன்னன் இறைவனாகவே கருதப்பட்டான். அவன் திருமாலின் அவதாரம் என்ற கருத்து நிலவியது. உடையார், ஆழ்வார், பெருமாள் ஆகிய சொற்கள் இருவருக்கும் பொதுவாக வழங்கப்பட்டன. சமய குருக்கள் அரசவையிலேயே சமயக் கடமைகளில் துணை புரிந்தனர். அவர்களுக்கும் உடையார் எனப் பெயர் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

கல்வி, உயர்மட்டத்திலிருந்த குடிமக்களுக்கே உரியதாக இருந்தது. வேதம், புராணம், இலக்கணம், தர்க்கம் போன்ற வடமொழிக் கல்வியே நிறுவனங்களில் அளிக்கப்பட்டது. பிற தொழில்நுட்பங்கள், கலைகள் ஆகியவை குல மரபில் வழிவழியாகவே கற்றுக் கொடுக்கப்பட்டன.

மக்களின் வேளாண் பெருமக்கள், வணிகப்பெருமக்கள், பிராமணர்கள், தேவரடியார்கள் சமுதாயத்தில் மேல்தட்டில் இருந்தனர். உழுவோர், படைவீரர்கள், தொழில் வினைநர்கள் ஆகியோர் அடுத்த நிலையிலும் விளங்கினர். நிர்வாகம்; நாடு, நகரம், சபை ஆகியவற்றின் கைகளில் இருந்தது. ஏனையோர் அனைவரும் இம்மூன்றைச் சார்ந்து வாழ்ந்தனர். வேளாளரில் இருந்தும் பிராமணரிலிருந்தும் அரசியல் அதிகாரிகளும் படைத்தலைவர்களும் தோன்றினர்.

வேந்தர்கள் குலங்களையும், பிராமணர்கள் கோத்திர, சூத்திரங்களையும் கொண்டிருந்தனர்.
சாதிகள் தொழிலடிப்படையில் வகுக்கப்பட்டிருந்தன. அவரவர்க்குத் தனியான குடியிருப்புகளும் இருந்தன என்பதைக் கம்மாளச் சேரி, பறைச்சேரி, தளச்சேரி போன்ற பெயர்கள் காட்டும். மனுவின் நெறி இன்று சாதியொழுக்கத்தைக் காப்பதை அரசர்கள் தம் பெருமையாகக் கருதினர். அவ்வச் சாதியினர் தம் பெருமையினைப் பறைசாற்றிக் கொள்ள இலக்கியங்களையும் படைத்துக் கொண்டனர்.

0

Share/Bookmark

உங்களோடு நீங்கள் பேசவேண்டும்

$
0
0

seminarபேசு மனமே பேசு / அத்தியாயம் 2

வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சவால்களை, பிரச்னைகளை வெற்றிகொள்ள பலப்பல முறைகளைக் கையாளுகிறோம். நண்பர்களின் யோசனை, சுய முன்னேற்ற நூல்கள், வேண்டுதல்கள், உபதேசிகளின் உரைகள் என்று பட்டியல் நீள்கிறது. இவை எல்லாமே, நம்முள் ஒரு வேகத்தை, கிளர்ச்சியை, மாற்றங்களுக்கான தூண்டுதல் உணர்வை எழச் செய்கின்றன.

தனிப்பட்ட மனிதர்கள் மட்டுமின்றி, எல்லாவகையான வர்த்தக மற்றும் வியாபார நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியனவும் பல காரணங்களுக்காக, மேற்படி முறைகளில் சிலவற்றைக் கையாளுகின்றன. பணியாளர்களின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு என்பதிலிருந்து, பழகு திறன் வரை அனைத்தையும் உயர்த்த முயற்சிகள் செய்கின்றன. பேச்சாற்றலில் சிறந்த வல்லுநர்கள், பிரபலமான உபதேசிகள் ஆகியோரை அதிகம் பணம் செலவழித்து, பணியாளர்கள் மத்தியில் பேச வைக்கின்றன.

இவை தவிர, சாதாரண பொதுமக்களில், மாணவர்களில் இருந்து பெரியவர்கள் வரை, ஒழுங்காகப் படிப்பது எப்படி, நினைவுத் திறன், தொடர்புத் திறன், உறவுத் திறன், பேச்சுத்திறன், மொழித் திறன் ஆகியவற்றை வளர்ப்பது எப்படி போன்ற பல எப்படிகளுக்கு விடை கூற, அந்தந்த விஷயத்தில் பயிற்சி பெற்ற பலர் காத்திருக்கின்றனர்.

பிரச்னைகளுக்கான விடை தேடும் முயற்சி, அவற்றைத் தீர்ப்பது எப்படி என்பதற்கான விடைகள் கூறும் முயற்சி ஆகியன காலங்காலமாக நடந்து வருகின்றன. சமீப காலத்தில் இது அதிகமாகி உள்ளது.

உதாரணமாக 21ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து எடுத்துக்கொள்ளலாம். தொழில் முறையில், சுய முன்னேற்றம் காண உதவுவது ஒரு துறையாகவே வளர்ந்துவிட்டது. இது தொடர்பான புத்தகங்கள், கருத்தரங்கங்கள், பயிலரங்கங்கள், ஒலி நாடாக்கள், வீடியோ பதிவு தட்டுக்கள், போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் வர்த்தகத்தின் மதிப்பு 2000வது ஆண்டின் தொடக்கத்தில் 2.48 பில்லியன் டாலர்களாக இருந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதாவது 2006ம் ஆண்டின் போது 9 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. 2010ம் ஆண்டில் 11.47 பில்லியன் டாலர்களாக ஆனது. முந்தைய ஐந்தாண்டு வளர்ச்சியை விடக் குறைந்ததற்குக் காரணம், 2008-10 ஆண்டு காலக் கட்டத்தில் அமெரிக்கா பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. இந்தத் துறையின் வளர்ச்சியைக் கணக்கிட்டால், ஆண்டுக்கு 5.5.% அதிகரித்து வருகிறது என்று கூற முடியும். இந்தக் கணக்கு அமெரிக்காவுக்கு மட்டும்தான். இதே துறையில் நம்பிக்கையும், ஆர்வமும் உள்ள பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள், சில ஆசிய நாடுகள் ஆகியவற்றின் செலவினங்கள் மற்றும் சந்தை மதிப்பு கணக்கிடப்படவில்லை.

இதனால் புரியவரும் விஷயம், இந்த நூற்றாண்டு வாழ்க்கை முறையில் மக்கள் இந்தத் துறையில் அதிகமாக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதுதான். அதே சமயம் ஒரே வியாதிக்கு பல்வேறு வைத்திய முறைகளும், எண்ணற்ற மருத்துவர்களும் உருவானால், அதற்கு என்ன காரணம்? வியாதியைப் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அதன் தீவிரமும், வேகமும், பரவலும் அதிகமாகி இருக்கின்றன. பல்வேறு முறைகளில் இந்த வியாதியை அணுகினால்தான், இதை வெற்றிகொள்ள முடியும் என்ற தெளிவு ஏற்பட்டு இருக்கிறது என்று கூறலாம் அல்லவா? இதுபோலத்தான் சுய முன்னேற்றம் பிரச்னைகளை சமாளிக்கவும் பல்வேறு வழிகள் உருவாகியுள்ளன.

இதில் முக்கியமான முறை, பேச்சு வழியில் போதனைகள் அல்லது யோசனைகள் ஆகியன முதல் இடம் பிடித்துள்ளன. சமீபத்தில் ஒரு தொழிலகத்தில் பிரபலமான ஆன்மிக குருவும், நல்வாழ்க்கைக்கான வழிகாட்டி என்றும் அறியப்படுகிற ஸ்ரீரவிசங்கர் சொற்பொழிவாற்றினார். அப்போது யாருமே எதிர்பாராத அளவில் 5000 படித்த இளைய தலைமுறையினர் வந்திருந்து பேச்சைக் கேட்டனர்.

உத்வேகம் அளிக்கும் உரையை யார் மூலமாகக் கேட்டாலும், அது தொடர்புடைய செய்கையை உடனடியாகச் செய்தால் பலன் தரலாம். மகாபாரதத்தில் கூட இதுதான் நடந்தது. அர்ச்சுனனுக்கு பகவான் கிருஷ்ணர் கீதோபதேசம் செய்து முடித்தவுடனே அல்லது உணர்த்திய உடனே அர்ச்சுனன் போரில் ஈடுபட்டான். ஒருவேளை இரண்டும் வெவ்வேறு காலகட்டத்தில் நிகழ்ந்திருந்தால், அர்ச்சுனன் போரில் கலந்துகொண்டு வெற்றி கண்டிருப்பார் என்று கூறமுடியாது. ஏனெனில் மற்றவர்மூலம் கேட்கும் பேச்சுக்கு, குறிப்பிட்ட காலம்தான் தூண்டுதல் அல்லது உந்துதல் வலிமை இருக்கும். செவிவழிச் சந்தை முறையைப் பயன்படுத்தும் பல நிறுவனங்கள் பல்வேறு கூட்டங்களை நடத்துகிறார்கள். ஆனால், அந்த உரைகளை கேட்கும்வரை இருக்கும் மனோவேகம், உற்சாகம், உத்வேகம், அரங்கைவிட்டு வெளியே வந்தவுடன் அதே மட்டத்தில் உள்ளதா என்று யோசித்துப் பாருங்கள்.

பல வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நுகர்வோர் பொருள்களை சந்தைப்படுத்த, நுகர்வோரை வியாபாரிகளாக மாற்றும் முறையைக் கையாள்கிறார்கள். இதற்கு மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் என்று கூறுகிறார்கள். இதன் முக்கிய வியாபார நுணுக்கமே, பேச்சுதான். பல்வேறு நபர்களை ஓரிடத்தில் கூட்டி, யாராவது ஒருவர், விற்பனை செய்யவேண்டிய பொருளைப் பற்றியும், அதை விற்பதால் கிடைக்கப் போகும் லாபத்தைப் பற்றியும், விவரமாகவும் அலங்கார வார்த்தைகளிலும் விவரிப்பார். அந்தப் பொருள் அல்லது நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி ஆனதன் மூலம் தான் பெற்ற லாபங்களை விளக்கிக் கூறுவார். அதுபோல் பார்வையாளர்களையும் சேர்ந்து லாபம் காண அழைப்பார். இதைக் கேட்பவர்களில் பலர், இந்த உத்வேக உரையில் மயங்கி, பொருளை வாங்குவதோ, பிரதிநிதியாவதோ நடக்கிறது.

ஆனால் அந்த அரங்கை விட்டு வெளியே வரும்போதுதான், தானும் அப்பொருள்களை விற்கத் தொடங்கும்போதுதான் சந்தேகமே வருகிறது. பொருள்களின் தரம், பயன்பாடு ஆகியன பற்றி சொல்லப்பட்டதற்கும், உண்மை நிலைக்கும், எந்தத் தொடர்பும் இல்லாததை உணர்ந்து ஏமாந்து போனவர்கள், பிரச்னைகளில் மாட்டிக்கொண்டவர்கள் ஏராளம். சில வருடங்களுக்கு முன்னால், ஜப்பான் லைஃப்-ன் காந்தப் படுக்கை, வீட் எண்ட்-ன் காந்தப் படுக்கை, கோனி பயோ நிறுவனப் பொருள்கள் போன்றவற்றை வாங்கி ஏமாந்தவர்கள் நிறைய பேர்கள். இவற்றை வாங்கியவர்களும், வாங்கச் சொன்னவர்களும் ‘உத்வேக உரைகளுக்கு’ பலியானவர்கள்தாம்.

இது போல பல்வேறு விஷயங்களுக்கு உத்வேக உரைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தொடர் பலன்களைத் தராமல், நிரந்தர மாற்றங்களை உருவாக்க முடியாமல் இருப்பதற்குக் காரணங்கள் இருக்கின்றன. அறிவுரைகள், வழிமுறைகள், உத்வேக மற்றும் கிளர்ந்தெழச் செய்யும் உரைகள் ஆகியவை நம்மை வந்து சேரும்போது, அதை எடுத்துக்கொள்ளும் விதம் நபருக்கு நபர் மாறுபடுகிறது. மழை நீர் எந்த நிறமுள்ள மண்மீது விழுகிறதோ, அதே நிறத்தைத் தானும் பெறுகிறது. அதுபோலத்தான், எந்த வகையான உரையாக இருந்தாலும், படிக்கும் நூல்களாக இருந்தாலும், அவை அந்தந்த நபர்களின் மனநிலை, அனுபவம், அறிவு, புரியும் ஆற்றல் போன்றவற்றைப் பொறுத்தே அமையும். மேற்படி உரைகளும், எழுத்துகளும், வாழ்க்கையில் வெற்றி பெற உதவ வேண்டுமானால், இவற்றை வரவேற்பதற்கு நமது மனத்தை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பயிரிடும் முன்னால், மண்ணைப் பதப்படுத்துவதுபோல மனத்தையும் பதமான நிலையில் வைத்திருக்க வேண்டும். பதமான மண்ணுக்கு வெளியிலிருந்து சத்தை தன்னுள் இழுத்துக்கொள்ளும் தன்மை இருக்கும். அது மட்டுமின்றி தன்னுள் இருக்கும் சத்தையும் தொடர்ந்து வளப்படுத்தி மேலும் வளர்க்கவும் செய்யும். அதுபோல மனத்தையும் நேர்மறை சிந்தனைகளால் பதப்படுத்த வேண்டும். இதற்கு வழிமுறைகள் உள்ளன. ஆனால் இந்த வகையான சிந்தனை தொடர்ந்து இருக்கவேண்டுமானால், மனத்தைத் தொடர்ந்து அதற்கான நிலையில் வைத்திருக்க வேண்டும். இதற்கு தன்னோடு பேசுதல் மிக முக்கியம்.

0

Share/Bookmark

மன்னித்துவிடு ஜே!

$
0
0

imagesஒரு கனவின் வரைபடம் / அத்தியாயம் 2

ஜே என்றதும் நமக்கு அவனுடைய அதிரடி வாசகங்கள்தான் நினைவுக்கு வரும். இவற்றைச் சுட்டிக்காட்டி அவன் வெறும் விளம்பரப் பிரியன் என்று அன்பு நண்பர்கள் அடிக்கடிச் சொல்வது வழக்கம். ஆனால், அவனுடைய செயல்களுக்கு அவன்மட்டுமேவா காரணம்?

நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மாமா வேலை பாக்கறவனுக்குத்தான் இங்க டைரக்ஷன் வாய்ப்புக் கிடைக்கும் என்று அவன் ஒரு பத்திரிகை பேட்டியில் சொன்னபோது, வண்டி பிடித்தெல்லாம் அடிக்கவந்தார்கள். அப்படியானால், கிராமத்துப் பெண் கதாபாத்திரத்துக்கு எதற்காக செவப்புப் பெண்களையே தேர்ந்தெடுக்கிறீர்கள்? என்ற எளிய கேள்விக்கு இன்றுவரை யாரிடமும் பதில் இல்லை.

க்ரியேட்டிவாக பங்களிக்காத ஒரு இயக்குநர் வெறும் மேஸ்திரியே என்ற வாசகம் பலவாறாகத் திரிக்கப்பட்டு இன்றும் ஜே வை அடையாளம் காட்டும் வாக்கியமாக விளங்கிவருகிறது. தமிழக இசையமைப்பாளர்களின் இசைபற்றிய சில சாதகமான அம்சங்களைச் சொல்லிவிட்டு, ‘ஆனால் அதில் மண் வாசனை இல்லை, ஒரு நாட்டுப்புறக் குரலைக்கூட அவர்கள் உருப்படியாகப் பயன்படுத்தவில்லை’ என்ற நியாயமான குற்றச்சாட்டை முன்வைத்தபோது அவன் கடும்விமர்சனத்துக்கு ஆளாக நேர்ந்தது. பிற பாடல்களின் மீதான விமர்சனத்தை வைத்தபோதோ இசையின் ‘நுட்பமான’ ஸ்வரக் குறிப்புகளை வரிசையாக அடுக்கிவைத்து, படு பயங்கரமான பண்டித மிரட்டல்கணைகள் பல திசைகளில் இருந்து பாய்ந்து வந்தன. லைஃப் ஆஃப் பை படத்தில் இடம்பெற்றுள்ள தாலாட்டுப் பாடலையும் தமிழ் படங்களில் இடம்பெற்ற தாலாட்டுப் பாடல்களையும் ஒருமுறை கேட்டுப் பாருங்கள் என்ற ஒரு பதிலைத்தான் இவர்களை நோக்கி நாம் சொல்ல முடியும். சுஜாதாவை இலக்கியவாதியாக நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு சுந்தர ராமசாமியின் அருமையைப் புரியவைக்க முடியாது. வைரமுத்துவை கவிப்பேரரசாக கருதிக்கொண்டிருப்பவர்களுக்கு பிரமிளின் பெருமையைச் சொல்லிப் புரியவைக்க முடியாது. தமிழ் இசையமைப்பாளர்களின் ஆராதகர்களுக்கு தரமான இசையின் மகத்துவத்தைச் சொல்லிப் புரியவைக்க முடியாது.

ஆனால், ஜே தன் வாழ்நாள் முழுவதும் இவற்றைப் புரியவைக்கும் பெரும் சிலுவையை தன் தோளில் வலிந்து சுமத்திக்கொண்டான். தான் நம்பிய மதிப்பீடுகளை வெளிப்படையாக முன்வைத்திருக்கிறான். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், அவன் தன்னுடைய துறையாக எதைத் தேர்ந்தெடுத்தானோ அதன்மீதான விமர்சனத்தைத் துணிச்சலாக முன்வப்பவனாக இருந்திருக்கிறான். ஏதாவது ஒரு பாதுகாப்பான இடத்தில் அமர்ந்துகொண்டு, மற்ற எல்லாவற்றைப் பற்றி தர்மாவேசம் கொண்டு வாள் சுழற்றும் சாதுரியத்தை அவன் கடைசிவரை கற்றுக்கொள்ளவே இல்லை. அதுதான் அவன் பலம். அதுவே அவனுடைய பலவீனமாகவும் ஆகிவிட்டது. பலவீனம் என்று எதைச் சொல்கிறேன் என்றால் அவனிடமிருந்து நமக்குக் கிடைத்திருக்க வேண்டிய காத்திரமான படைப்புகள் கிடைக்காமல் போனதற்கு அது காரணமாகிவிட்டது என்ற அடிப்படையில்தான் அதைச் சொல்கிறேன்.

ஒருமுறை ஒரு மன நல காப்பக அமைப்பாளர்கள் நிதி திரட்டும் நோக்கில் ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர்கள் ஆத்மார்த்தமாகச் சேவையில் ஈடுபடுபவர்கள்தான். கூடுதல் நிதி ஆதாரம் இருந்தால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியுமே என்ற நோக்கில் திரையுலகத்தினரை அழைத்திருந்தார்கள். ஆனால், நம் திரையுலகத்தினர் அந்த விழாவில் நடத்திய கூத்து இருக்கிறதே… இழவு வீட்டுக்குப் போனாலும் க்ளிவேஜ் தெரிய, இடுப்பை ஆட்டி ஆட்டித்தான் அழுவார்கள் போலிருக்கிறது.

ஜேவையும் ஒரு நிகழ்ச்சி தயாரிக்கச் சொல்லியிருந்தார்கள். அவனும் மிகுந்த அக்கறையுடன் ‘தூப்’ படத்தைத் தழுவி ஒரு ஸ்கிட்ட் தயார் செய்திருந்தான். தூப் படம் கேள்விப்பட்டிருப்பீங்க இல்லையா… என்.எஃப்.டி.சி. தயாரிச்ச படம். கார்கில் போர்ல ஒரு இளம் ராணுவ வீரர் இறந்துபோய்விடுவார். அவருடைய அப்பா ஒரு கல்லூரியில் பேராசிரியரா இருப்பார். ஓம்புரிதான் அந்த ரோல்ல நடிச்சிருந்தார். ராணுவ வீரரோட அம்மாவா ரேவதி நடிச்சிருப்பாங்க. இறந்துபோன வீரரின் ஞாபகார்த்தமா ஒரு பெட்ரோல் பங்க் வெச்சுக்க அரசாங்கம் இலவச பெர்மிட் கொடுத்திருப்பாங்க. பல லட்சம் லஞ்சமாகப் புரளும் காண்ட்ராக்ட் அது.

ஓம்புரிக்கு முதல்ல அதுல விருப்பம் இருக்காது. ஆனால், அவரோட மகனோட நண்பரான இன்னொரு ராணுவ வீரர் வந்து உங்க பையனோட லட்சியம் அது. அதனால அதை ஏத்துக்கோங்க என்று சொல்வார். சரி தன் மகனோட ஆசை அதுங்கறதுன்னா அதை நிறைவேற்றியாகணும்னு முன்வருவார். ஆனால், அவர் மிகவும் நேர்மையானவர். ஒரு நயா பைசா கூட லஞ்சமாக கொடுக்க மாட்டேன் என்ற பிடிவாதம் கொண்டவர். லட்சங்கள் புரளும் காண்டிராக்ட். நயா பைசா கூட லஞ்சமே தரமாட்டேனு சொல்ற நாயகன். கதை முடிச்சு வலுவாக விழுந்துவிட்டதா?

நம்மோட அரசாங்க அதிகார வர்க்கம் எந்த அளவுக்கு ஊழல் மலிஞ்சதா இருக்குங்கறதை அதைவிட வலுவா சொன்ன படம் இதுவரைக்கும் வரலைன்னுதான் சொல்லணும். எந்தவொரு அதிகாரிகிட்ட போனாலும் காசு காசுன்னு அலைவானுங்க. ஒரு அதிகாரிகிட்ட ஓம்புரி கோபத்துல கத்துவாரு… என் மகன் தேசத்துக்காக உயிரையே கொடுத்திருக்கான். அவனோட ஆசைய நிறைவேத்தப்போய் காசு கேட்கறீங்களேன்னு சத்தம் போடுவார். அந்த அதிகாரி நாற்காலியில் சாவகாசமாகச் சாய்ந்தபடியே அலட்சியமாகக் கேட்பார், உன் மகன் தேசத்துக்காக உயிரைக் கொடுத்தான். எனக்காக என்ன கொடுத்தான்?

இந்தக் கேள்வி இருக்கிறதே… ஊழலை எதிர்த்து ஆயிரம் ஆக்‌ஷன் படங்கள் ஏற்படுத்தும் அதிர்ச்சியை இந்த ஒரு படம் ஏற்படுத்திவிடும். யதார்த்தம் என்பது ஏன் அவசியம். மிகை என்பது விஷயத்தை எப்படி மலினப்படுத்திவிடுகிறது என்பதற்கு இந்தக் காட்சி ஒரு நல்ல உதாரணம். இன்னொரு காட்சியில் காவல்துறை அதிகாரி நோ அப்ஜெக்‌ஷன் சான்றிதழ் தர மறுத்துவிடுவார். எல்லா ஏற்பாடுகளும் கச்சிதமா முடிஞ்சுருக்கு. ஒரு பைசா கூடக் கொடுக்காமலா உன் ஃபைல் இவ்வளவு வேகமா என் டேபிளுக்கு வந்திருக்கும். எனக்குத் தரவேண்டியதைக் கொடு. உனக்கு வேண்டியதை நான் தர்றேன் என்று பேரம் பேசுவார். ஓம்புரி ஒரு பைசா கூடக் கொடுக்காமல் உன்னிடம் இருந்து சான்றிதழ் வாங்குகிறேன் பார் என்று சவால் விடுவார். தினமும் காவல் நிலையத்துக்கு வந்து அதிகாரியின் கண்ணில் படும்படி உட்கார்ந்துகொள்வார். ஓம்புரியின் தொந்தரவு தாங்க முடியாமல் ஒருகட்டத்தில் அந்த காவல்துறை அதிகாரி, செத்துப்போனவனுக்கு நீதான் அப்பான்னு எப்படி நம்பறது என்று கேட்டு விரட்டிவிடுவார்.

அடுத்த காட்சியில் ஓம்புரி, மகனுடைய பிறப்புச் சான்றிதழ், மகன் நடைவண்டியில் இருக்கும் புகைப்படம், பையனுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுக்கும்போது எடுத்த படம், பள்ளியில் அவன் முதல் மதிப்பெண் பெற்றபோது எடுத்தபடம், ராணுவ உடையில் அணிவகுப்பில் இருக்கும் படம், வீட்டில் தாயும் தந்தையும் மகனுடன் இருக்கும் படம் என வரிசையாக மேஜையில் எடுத்துப்போடுவார். கடைசியாக மகனுடைய இறந்த உடல் விமானத்தில் கொண்டுவரப்பட்ட போது எடுக்கப்பட்ட படம், மகனுடைய உடலுக்கு துண்டைத் தோளில் போர்த்தியபடி கொள்ளிவைக்கும் படம் என வரிசையாக மேஜையில் எடுத்துப்போட்டபடியே சொல்வார்: உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருந்தால் இவனுடைய அம்மாவை அழைத்து வந்து சொல்லச் சொல்கிறேன், நான் தான் இவனுடைய தந்தை என்று என்று சொல்வார். காவல்துறை அதிகாரி பேச்சுமூச்சற்று ஒடுங்கிநிற்பார்.

இந்தக் காட்சியில் ஓம்புரியின் குரலில் தென்படும் பாவமும் ஒரு பைசா லஞ்சம் கொடுக்கமாட்டேன் என்ற வைராக்கியமும் அவ்வளவு அழுத்தமாக வெளிப்பட்டிருக்கும். இந்தப் படத்தை நான் எத்தனையோ தடவை பார்த்திருக்கிறேன். அத்தனை தடவையும் இந்தக் காட்சியில் என்னை அறியாமல் அழுதுவிடுவேன். ஒரு நடிகர், தான் அழுது பார்வையாளர்களை அழ வைப்பதைத்தான் நமது திரைப்படங்களில் இதுவரை பார்த்திருக்கிறோம். அது மிக மிக மலினமான, கத்துக்குட்டித்தனமான யுக்தி. யார் எதிரில் வந்து ஓ வென்று அழுதாலும் நமக்கு பரிதாபம் தோன்றி கண் கலங்க ஆரம்பித்துவிடும். ஆனால், இந்தக் காட்சியில் ஓம்புரி அழமாட்டார். நம்மை அழவைப்பார். நடிப்பு என்றால் என்ன… திரைக்கதை என்றால் என்ன… வசனம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளவேண்டுமென்றால் ஒருவர் இந்தப் படத்தை ஒருதடவையாவது பார்க்கவேண்டும். இப்படி ஒரு படம் வந்தது பலருக்குத் தெரிந்திருக்காது. என்.எஃப்.டி.சி.யில் போய் கேட்டால்கூட படத்தின் பிரிண்ட் உங்களுக்குக் கிடைக்காது. தேசிய ஒளிபரப்பில் எப்போதாவது அனைவரும் தூங்கிய பிறகு ரகசியமாக ஒளிபரப்பியிருப்பார்கள். இதுதான் நம் திரையுலகின் நிலை.

ஜே இந்தக் கதையின் கருவை அப்படியே எடுத்துக்கொண்டு பேராசிரியர் கதாபாத்திரத்துக்கு பதிலாக ஒரு பெண்ணை பிரதான கதாபாத்திரமாக்கினான். இப்போது கதைக்குக் கூடுதல் கனம் கிடைத்துவிட்டது அல்லவா? பெண் என்றால் பாலியல்ரீதியான தாக்குதல்களுக்கும் பதில் சொல்லியாக வேண்டியிருக்குமே… அந்தவகையில் தூப் படத்தைவிட பல காட்சிகள் இதில் வலுவாக வந்திருந்தன. மன நல விடுதியினருக்கான நிகழ்ச்சிக்காக உருவாக்கப்பட்ட கதை என்பதால் ஒரு நல்ல மன நல விடுதியை உருவாக்குவதை நாயகியின் லட்சியமாகக் கொண்டுவந்திருந்தான். ஆனால், அந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில் திரையுலகத்தினருடைய ஆட்டம் பாட்டமும், அவர்கள் தயாரித்திருந்த ஸ்கிட்ட்களும் அந்த சேவை மையத்தின் செயல்பாடுகளுக்கு முற்றிலும் நேர் எதிராக இருந்ததோடு சேவையை இழிவுபடுத்துவதாகவும்கூட இருந்தன. அந்த சேவை மையத்தினரோ மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார்கள்.

ஒரு கவர்ச்சி நடிகை தன்னுடைய ஜாக்கெட்டை மேடையிலேயே ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை சேவை மையத்துக்குத் தரப்போவதாகக் கூவினார். கூட்டம் அதைக் கேட்டு ஒரேயடியாக ஆர்ப்பரித்தது. ஏலத்தொகை சரமாரியாக ஏறியது. இதில் ஒரு கொடுமை என்னவென்றால், அடுத்ததாக ஜே.யின் நிகழ்ச்சி. எனவே, அவன் மேடையில் ஓரத்தில் தன் குழுவினருடன் நின்றுகொண்டிருந்தான். ஏலத்தொகை எக்கச்சக்கமாக குவிந்ததும் நடிகை, ”இவ்வளவுபணம் வரும்னு தெரிஞ்சிருந்தா என் உள்ளாடையைக்கூட ஏலம் விட்டிருக்கலாம் போல இருக்கே’ என்று சொன்னாள். ஜேக்கு கோபம் பொத்துக்கொண்டுவந்தது. பாய்ந்து சென்று அவளை ஓங்கி அறைந்துவிட்டான். அவளுடைய தவறு மறக்கப்பட்டுவிட்டது. ஜே-யின் ஆவேசம் பெரிய பிரச்னைக்குரியதாக ஆக்கப்பட்டுவிட்டது. திரையுலகத்தினர் திமு திமுவென மேடையேறி ஜேயைப் புரட்டி எடுக்க ஆரம்பித்துவிட்டனர். காவலர்கள் வந்து சமாதானப்படுத்த வேண்டி வந்தது.

திரையுலகத்தினரோ ஜே மன்னிப்புக் கேட்டால்தான் இந்த அரங்கில் இருந்து உயிருடன் போக முடியும் என்று கூக்குரலிட்டனர். ஜே இன்னும் கொஞ்ச நேரம் பேசாமல் இருந்திருந்தால் ஓரளவுக்கு பிரச்னையை சரிசெய்திருக்கலாம். ஆனால், ஏற்கெனவே ரத்தம் வழியும் முகத்துடன் இருந்த ஜே, மைக்கை வாங்கி, நான் சொன்னது தவறுதான்… உடம்பை விற்றுக் கிடைச்ச காசைக் கொடுக்கக் கூச்சமாக இருந்ததால்தான் இந்த நடிகை தன் ஆடையை விற்று நன்கொடை தர முன்வந்திருக்கிறார். அவருடைய நல்லெண்ணத்தையும் தர்ம சங்கடத்தையும் புரிந்துகொள்ளாதது என் தவறுதான் என்று சொல்லிவிட்டான்.

திரையுலகம் இதைக் கேட்டதும் கொலைவெறியுடன் ஜே மீது பாய்ந்தது. நல்லவேளையாக காவலர்கள் சட்டென்று ஒரு வளையம் போல் அமைத்து அவனை வெளியே கொண்டுசென்று ஜீப்பில் ஏற்றி நேராக காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்றுவிட்டார்கள். இல்லையென்றால் அன்று ஜேயை அவர்கள் கொன்றே போட்டிருப்பார்கள். பிரபல பத்திரிகைகளில் ஜே நடிகையை அடித்தது மட்டுமே பிரதானப்படுத்தப்பட்டிருந்தது. பிற விஷயங்கள் சொல்லிவைத்தாற்போல் அனைத்து பத்திரிகைகளாலும் மறைக்கப்பட்டுவிட்டன.

ஜே அடிப்படையில் நுண்ணுணர்வு உடையவன். ஒரு முழுமை விரும்பி. அவனுக்கு சூழலுடன் தன்னைப் பொருத்திக் கொள்வதில் நிறைய சிக்கல்கள் இருந்தன.

எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டுபோக அவனுக்கு முடிந்திருக்கவில்லை. எனவே போதையை நாடினான். அதை அவன் செய்திருக்கக்கூடாது என்று சகல சீரழிவுகளையும் சகித்துக்கொண்டும் பல நேரங்களில் சீரழிவுக்குக் காரணமாகவும் இருந்துகொண்டிருக்கும் நாம் நியாயஸ்தனின் குரலில் சொல்கிறோம். அவன் குடியில் வீழ்ந்ததற்கு நாமும்தான் காரணம் என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பார்ப்பது நல்லது. அவனுடைய கலை திறமையை மேம்படுத்திக்கொள்ளவும் தீவிரமாகத் தொடர்ந்து ஒரு விஷயத்தில் ஈடுபடவும் முடியாதபடி அது அவனை விழவைத்துவிட்டது. அவனுடைய காலடி நிலத்தைப் பள்ளமாக்கிவிட்டு நாம் சொல்கிறோம் பார்த்து நடந்திருக்கலாமே என்று. என்ன செய்ய? ஜேக்கு நமக்கு மத்தியில் அல்லவா வாழ வேண்டிவந்துவிட்டது. வீ டோண்ட் டிஸர்வ் யூ ஜே. எங்களால் உன்னைப் புரிந்துகொள்ளவும் முடியவில்லை. உன்னைப் பாதுகாக்கவும் முடியவில்லை மன்னித்துவிடு ஜே.

0

Share/Bookmark

புரட்சி என்பது என்ன?

$
0
0

revolution

புரட்சி / அத்தியாயம் 1

‘இது வரலாற்று நூல் அல்ல. சோஷலிசத்தின்மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகளை விவரிப்பதே இதன் நோக்கம்… இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருந்தாலும் சரி, நம் கண் முன்னே இப்போது நடந்திருந்தாலும் சரி. கலகம் ஒன்று நடந்திருந்தால், அதில் சோஷலிசத்தின் சாயல் சிறிதளவு படிந்திருந்தால் அதை இந்தப் புத்தகத்தில் இடம்பெறச் செய்திருக்கிறேன்.’ ஸ்பெயினைச் சேர்ந்த சோஷலிஸ்டும் எழுத்தாளரும் அரசியல் விமரிசகருமான அல்வாரெஸ் (முழுப்பெயர் Julio Álvarez del Vayo) தனது The March of Socialism என்னும் புத்தகத்தின் முன்னுரையில்  இவ்வாறு குறிப்பிடுகிறார்.

பிரெஞ்சுப் புரட்சி, பாரிஸ் கம்யூன், ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளை இந்தப் புத்தகம் உள்ளடக்கியுள்ளது. அல்வாரெஸ் இவற்றில் சிலவற்றை விரிவாகப் படித்து ஆராய்ந்திருந்தார்; சிலவற்றை நேரில் தரிசித்திருக்கிறார். லெனின், ரோசா லக்சம்பர்க் தொடங்கி தான் வாழ்ந்த காலத்தைச் சேர்ந்த அனைத்து முக்கிய கம்யூனிஸ்ட்,சோஷலிஸ்ட் தலைவர்களையும் நேரில் சந்தித்திருக்கிறார்.

அல்வாரெஸின் மேற்சொன்ன புத்தகம் ஸ்பானிஷ் மொழியில் எழதப்பட்டு அவர் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு ஆங்கிலத்தில் வெளிவந்தது. சோஷலிசம் என்னும் பதத்தை முடிந்தவரை மிகவும் விரிவான பொருளில் அவர் இந்தப் புத்தகத்தில் பயன்படுத்தியிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஸ்பார்டகஸ் தொடங்கி லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகர மாற்றங்கள் வரையிலான நிகழ்வுகள் இதில் அலசப்பட்டுள்ளன.

இந்தப் புத்தகத்தின்மூலம் அவர் வந்தடைந்த முடிவு இதுதான். ‘சமூக அக்கறையுடன் நிகழ்த்தப்பட்ட ஒவ்வொரு போராட்டமும், ஒவ்வொரு புரட்சியும் உலகில் பிற இடங்களில் பிற காலகட்டங்களில் நிகழ்ந்த போராட்டங்களோடும் புரட்சிகளோடும் தொடர்பு கொண்டுள்ளது.’

0

இருந்தும், புரட்சி என்னும் வார்த்தையை வன்முறையோடு மட்டுமே இன்றும் பலர் தொடர்புபடுத்தி வருகின்றனர். ஒருவர் புரட்சியாளர் என்றால் அவர் வன்முறையாளராகவும் இருப்பார் என்பது இவர்கள் நம்பிக்கை. மேலும் அவர் மையநீரோட்டத்திடம் இருந்து விலகி, கானகங்களிலும் பள்ளத்தாக்குகளிலும் பிற ஆபத்தான இடங்களிலும் பதுங்கி இருந்து, எந்நேரமும் போர் திட்டங்கள் வகுத்துக்கொண்டு, எந்நேரமும் ஆயுதம் சுமந்தபடி, பயங்கரவாதம் தவிர்த்து வேறொன்றும் சிந்திக்காமல் வாழ்ந்து வருபவர் என்றும் பலர் கற்பனை செய்துகொள்கிறார்கள்.

இன்னும் சிலர், சமூகத் தளத்தில் ஏற்படும் சிறு மாற்றங்களைக்கூட புரட்சி என்று பெயரிட்டுச் சிலாகித்துக்கொள்கிறார்கள். செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களுக்குப்‘புரட்சித் தலைவர்’ என்றும் ‘புரட்சித் தலைவி’ என்றும் பெயர்கள் அளிக்கப்படுகின்றன. ஒடுக்கப்படும் மக்களின் குரலாகச் செயல்படும் அமைப்புகள் மட்டுமல்ல ஒடுக்கும் பிரிவினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘புரட்சிகர’ இயக்கங்களும் அமைப்புகளும்கூட இங்கே உள்ளன.

குழப்பங்கள் இத்துடன் முடிந்துவிடவில்லை.

புரட்சியை இடதுசாரி அரசியலோடும் மார்க்சிய அகராதியின் அடிப்படையிலும் புரிந்து வைத்திருப்பவர்களிடையே கூட பல சமயங்களில் கருத்து வேறுபாடுகளும் மயக்கங்களும் ஏற்பட்டுவிடுகின்றன. லெனின் ஒரு புரட்சியாளர், ஆம். ஆனால், சே குவேராவை எப்படி மதிப்பிடுவது? சீனப் புரட்சியை ஏற்று அங்கீகரிக்கமுடிகிறது. ஆனால், க்யூபாவிலும் வெனிசூலாவிலும் ஏற்பட்ட மாற்றங்களை ‘புரட்சிகர மாற்றங்கள்’ என்று அழைக்கமுடியுமா? மார்க்சியம், கம்யூனிசம், சோஷலிசம் பற்றியெல்லாம் அதிகம் உரையாடாத, அதே சமயம் அடித்தட்டு மக்களுக்காகக் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பலவற்றை மேற்கொண்ட ஃபிடல் காஸ்ட்ரோவையும் ஹியூகோ சாவேஸையும் புரட்சியாளர்கள் என்று அழைக்கலாமா?அவ்வாறு அழைப்பதை மார்க்சியம் ஏற்கிறதா?

எனில், புரட்சி என்பது என்ன? புரட்சியாளர் என்று யாரை அழைக்கமுடியும்?

0

ஒரே செயலை ஓர் அரசாங்கம் செய்தால் ஒரு மாதிரியாகவும், ஆயுதம் தாங்கிய போராட்டக் குழுவினர் செய்தால் இன்னொரு மாதிரியாகவும் அணுகும் போக்கு உலகம் தழுவியது. இந்தியாவிலேயே காந்திய வழி சிறந்தது என்றும் பகத் சிங்கின் வழி தீங்கானது என்றும் சொல்லப்பட்டது; இப்போதும் சொல்லப்பட்டு வருகிறது. பொதுப் புத்தியில் ஆழமாகப் பதிந்துள்ள சில பிம்பங்கள்தான் இப்படிப்பட்ட புரிதல்களை ஏற்படுத்துகின்றன.

உண்மையில் புரட்சியாளர்கள் வன்முறை மீது நம்பிக்கை கொண்டவர்களா? ரத்த வெறி கொண்டவர்களா? உயிரின் மதிப்பை உணராதவர்களா? பகத் சிங் பதிலளிக்கிறார். ‘மனித உயிர்களை வார்த்தைகளால் வடிக்க முடியாத அளவுக்கு புனிதமானதாகக் கருதுபவர்கள் நாங்கள். அது மட்டுமல்ல, மனிதகுல விடுதலைக்காக வெகுவிரைவில் எங்கள் உயிர்களையே நாங்கள் அர்ப்பணிக்க இருக்கிறோம். மனச்சாட்சியின் உறுத்தல் கொஞ்சமும் இன்றி கொலை செய்வதற்கென்றே பயிற்றுவிக்கப்பட்ட ஏகாதிபத்திய ராணுவத்தின் கூலிப் படைகள் போன்றவர்கள் அல்ல நாங்கள். மனித உயிர்களை நாங்கள் உயர்வாக மதிக்கிறோம்.’

நாடாளுமன்ற வெடிகுண்டு வழக்கில் கைதான பகத் சிங், பி.கே. தத் இருவரும் அளித்த வாக்குமூலத்தில் இந்த முழக்கம் இடம்பெறுகிறது. இந்த வாக்குமூலம் 1929 ஜூன் 6 அன்று இந்த இருவர் சார்பாக அசாப் அலி என்பவரால் படிக்கப்பட்டது. (விடுதலைப் பாதையில் பகத்சிங், தொகுப்பு : சிவவர்மா, பாரதி புத்தகாலயம்).

ஏப்ரல் 8, 1929 அன்று நாடாளுமன்றத்தில் பகத் சிங்கும் பி.கே. தத்தும் இரு வெடிகுண்டுகளை வீசியபோது, பிரதான எதிரியான சர் ஜான் சைமன் அங்குதான் இருந்தார். அவர்மீதே அந்தக் குண்டுகளை அவர்கள் வீசியிருக்கலாம். செய்யவில்லை. மாறாக, அவர்கள் சரணடைந்தனர். ஏன்? ‘எங்களை அழிப்பதன் மூலம் இத்தேசத்தை அழிக்கமுடியாது. நாங்கள் செய்த செயலுக்குரிய தண்டனையை ஏற்றுக்கொள்ளவும், தனிநபர்களை அழிப்பதன்மூலம் கருத்துகளைக் கொல்லமுடியாது என்பதை ஏகாதிபத்திய சுரண்டல்காரர்கள் அறியச் செய்வதற்கும் நாங்களாகவே வலிய முன்வந்து கைதானோம். ஒரு தேசத்தின் முக்கியத்துவமற்ற இரண்டு நபர்களை அழிப்பதன்மூலம் அத்தேசத்தையே நசுக்கிட முடியாது. நாங்கள் வலியுறுத்திக் கூற விரும்பும் வரலாற்றுப் படிப்பினை இதுதான்.’

புரட்சி என்ற வார்த்தையின் பொருள் என்ன என்று கேட்கப்பட்டபோது பகத் சிங் அளித்த விடை இது.

‘புரட்சி என்பது ரத்த வெறிகொண்ட மோதலாகத்தான் இருக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை. தனிமனிதர்கள் வஞ்சம் தீர்த்துக்கொள்வதற்கு அதில் இடமில்லை. அது வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல. புரட்சி என்பதன்மூலம், வெளிப்படையான அநீதியை அடிப்படையாகக் கொண்ட இந்தச் சமூக அமைப்பு மாற்றியமைக்கப்படவேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்.

‘சரியான நேரத்தில் காப்பாற்றவில்லையெனில், இந்த நாகரிகத்தின் முழுக் கட்டமைப்பும் நொறுங்கி விழுந்துவிடும். எனவே இந்த நாட்டில் அடிப்படையான மாற்றம் தேவைப்படுகிறது. இதனை உணர்ந்தவர்களின் கடமை, சமுதாயத்தை சோஷலிசத்தின் அடிப்படையில் புதிதாக மாற்றியமைக்கவேண்டியதே ஆகும்.

‘புரட்சி என்பது மனிதகுலத்தின் பிரிக்க முடியாத உரிமை. சுதந்தரம் என்பது அனைவரின் அழிக்க முடியாத பிறப்புரிமை. தொழிலாளர்களே சமுதாயத்தை உண்மையில் தாங்கிப் பிடித்துக்கொண்டிருப்பவர்கள். மக்கள் அதிகாரமே தொழிலாளர்களின் இறுதி இலக்கு.

‘இக்கொள்கைகளுக்காகவும் இந்த நம்பிக்கைகளுக்காகவும் எங்களுக்கு வழங்கக்கூடிய தண்டனையின் மூலம் ஏற்படும் எத்தகைய துன்பத்தையும் நாங்கள் வரவேற்கவே செய்கிறோம். புரட்சியின் பலிபீடத்தில் எங்களது இளமையைக் காணிக்கையாக்குகிறோம். எங்களது மகத்தான லட்சியத்தோடு ஒப்பிடுகையில் நாங்கள் செய்யும் எந்த தியாகமும் பெரிதல்ல. நாங்கள் மனநிறைவுற்றுள்ளோம். புரட்சியின் வருகைக்காக நாங்கள் காத்திருக்கின்றோம்.’

1931 மார்ச் 22 அன்று பகத்சிங் எழுதிய கடைசி கடிதத்தில் காணப்படும் வரிகள் கீழே.

‘வாழ வேண்டும் என்ற ஆசை இயற்கையானதே. அது என்னிடமும் உள்ளது. அதை நான் மறுக்க விரும்பவில்லை. ஆனால், அந்த ஆசை நிபந்தனைக்கு உட்பட்டது. ஒரு சிறைக் கைதியாகவோ நிபந்தனை வரம்புகளுக்கு உட்பட்டவனாகவோ வாழ எனக்கு விருப்பமில்லை… துணிச்சலோடும் புன்னகையோடும் நான் தூக்குமேடை ஏறினால், அது இந்தியத் தாய்மார்களின் உணர்வுகளைத் தூண்டும். தங்களது பிள்ளைகளும் பகத்சிங்கைப் போல் ஆக வேண்டுமென்று அவர்கள் விரும்புவார்கள். இதன் மூலம் நாட்டின் விடுதலைக்காக தங்களது உயிர்களையும் தியாகம் செய்யச் சித்தமாயிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் பிறகு, புரட்சிப் பேரலையை எதிர்கொள்வதற்கு ஏகாதிபத்தியத்தால் முடியாமல் போகும்.’

0

மனித குல வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் புரட்சிகர மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இப்போதும் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. பொருளாதாரம், சமூகம், அரசியல், சித்தாந்தம், கலை, இலக்கியம் என்று ஒவ்வொரு துறையிலும் இப்படிப்பட்ட அடிப்படையான மாற்றங்களைக் காணமுடியும். புரட்சிகர மாற்றங்கள் இல்லாமல் வளர்ச்சி என்பது சாத்தியமில்லை.

புரட்சி என்பது தற்செயலாகவோ தன்னிச்சையாகவே நடைபெறும் நிகழ்வல்ல. ஒரு சில தனி மனிதர்கள் மேற்கொள்ளும் நடடிவடிக்கையும் அல்ல. ஆயுதம் தரித்த ஒரு சிறு குழுவோ முற்போக்கான பெயர்களைக் கொண்ட ஓர் அரசியல் கட்சியோ கானகங்களில் மறைந்து வாழும் ஒரு இயக்கமோ வீறுகொண்டு எழுந்து மேற்கொள்ளும் ஆயுதப் போராட்டம் புரட்சி ஆகாது.

எது புரட்சி என்பதற்கு மார்க்சியம் சில தெளிவான வரையறைகளை வகுத்துள்ளது. இவற்றுக்குப் பின்னணியில் ஒரு தத்துவமும் தெளிவான அரசியல் பார்வையும் இருக்கிறது. ‘புரட்சிகள் கட்டளைப்படி நடப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட தருணத்தையொட்டி நடப்பதுமில்லை. அவை வரலாற்றுப் போக்கில் முதிர்ச்சியடைகின்றன. பல்வேறு உள்நாட்டு, அயல்நாட்டு காரணங்களைப் பொறுத்து உரிய நேரத்தில் வெடிக்கின்றன’ என்கிறார் லெனின்.

புரட்சி எப்போது ஏற்படுகிறது? லெனின் அளிக்கும் விளக்கம் இது. ‘இதுவரை வாழ்ந்தது போல் இனி மேற்கொண்டு வாழ முடியாது என்ற முடிவுக்கு கோடானுகோடி மக்கள் வரும்பொழுது புரட்சிகள் வருகின்றன.’

கம்யூனிஸ்டுகளின் புரட்சிகரத் தத்துவம் மார்க்சிய லெனினியம். கார்ல் மார்க்ஸ், ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் இருவரும் இந்தத் தத்துவத்தின் அடித்தளத்தை வடிவமைத்த ஆசான்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

மார்க்சியத்தைப் பொருத்தவரை புரட்சி பல வகைப்படும். சமூகப் புரட்சி, சோஷலிசப் புரட்சி, தேசிய விடுதலைப் புரட்சி, பூர்ஷ்வாப் புரட்சி, பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சி மற்றும் மக்கள் ஜனநாயகப் புரட்சி. ஒவ்வொன்றுக்கும் தெளிவான வரையறை இருக்கிறது. ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு தத்துவம் இருக்கிறது.

0

The Marchகார்ல் மார்க்ஸ், ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் இருவரும் எழுதத் தொடங்கியதற்கு முன்பே சோஷலிசம் பற்றிய உரையாடல்களும் விவாதங்களும் நிகழ்ந்திருக்கின்றன. தத்துவார்த்தமான உரையாடல்களும் விவாதங்களும் நடைபெறாமலேயேகூட சோஷலிசத்துக்கானப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனால்தான் அல்வாரெஸ் சோஷலிசம் என்னும் பதத்தை நெகிழ்வுத் தன்மையுடன் பயன்படுத்தி ஸ்பார்டகஸிடம் இருந்து தன் புத்தகத்தைத் தொடங்குகிறார்.

இந்தப் புத்தகமும்கூட ஸ்பார்டகஸிடம் இருந்தே தொடங்குகிறது.

சோஷலிசத்தைத் தத்துவார்த்த ரீதியில் செழுமைப்படுத்தியவர்கள் மட்டுமல்ல, அதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தியவர்களும்கூட புரட்சியாளர்கள்தாம். அவர்களைத் தத்துவவாதிகள் என்று ஒருபோதும் அழைக்கமுடியாது என்றபோதும்.

சிலர் சிந்தனையாளர்களாக மட்டுமே அறியப்பட்டிருக்கிறார்கள். சிலர், செயற்பாட்டாளர்களாக மட்டும். வெகு சிலரே இந்த இரு தளங்களிலும் வலுவாகக் காலூன்றியிருக்கிறார்கள்.

0

ஆதாரம் :

1) The March of Socialism, Julio Álvarez del Vayo, Translated by Joseph M. Bernstein, Jonathan Cape.

Share/Bookmark

படிக்கட்டுகள்

$
0
0

stepsஜெயிப்பது நிஜம் / அத்தியாயம் 3

பத்தாம் வகுப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டபிறகு, அடுத்து பிளஸ் 1 சேரவேண்டும்.

பார்வையற்றோருக்கு இரண்டே பள்ளிகள்தான் இருக்கின்றன சென்னையில். ஒன்று
நுங்கம்பாக்கத்தில் உள்ள லிட்டில் ஃபிளவர் கான்வென்ட். மற்றொன்று பூவிருந்தவல்லி அரசு பார்வையற்றோர் பள்ளி. இதில் லிட்டில் ஃபிளவர் கான்வென்ட்டில் ஆண்கள் 5 ஆம் வகுப்புக்கு மேல் படிக்க அனுமதியில்லை. அந்தப் பள்ளியின் சட்ட திட்டம் அப்படி.
பூவிருந்தவல்லிஅரசு பார்வையற்றோர் பள்ளியைப் பொருத்தவரை எனக்கு அங்கு தினமும் போய் வருவதில் நடைமுறை சிக்கல். நிச்சயம் தினமும் சாத்தியமில்லை.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், நான் தேர்ந்தெடுத்தது ராயப்பேட்டையில் இருக்கும் ஸ்ரீ
வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளிதான். போக்குவரத்து மற்றும் இதர
காரணங்களால் இதுவே சரிப்படும் என்று தோன்றியது. ஆனால் இது பார்வையற்றோர் சிறப்பு பள்ளி இல்லை. ரெகுலர் பள்ளிதான். இருந்தாலும் எந்த நம்பிக்கையில் இந்தப் பள்ளியை தேர்ந்தெடுத்தேன்? அவர்கள் எப்படி அட்மிஷன் கொடுத்தார்கள்?

10வது முடித்தவுடன் பிளஸ் 1 அட்மிஷனுக்காக நான் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளிக்குப் போனேன். பார்வையற்ற மாணவர்கள் யாரையும் அவர்கள் அதுவரை சேர்த்ததில்லை.   காரணம், அதுக்கான வசதிகள் அங்கே இல்லே. இரண்டாவது காரணம், பள்ளியின் தேர்ச்சி விகிதத்தில் ஒரு சிறு கீறல்கூட விழுந்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருந்தனர்.

ஆனால், பத்தாவது வகுப்பில் நல்ல ரேங்க் எடுத்திருந்ததால் எனக்கு நம்பிக்கை இருந்தது. இருந்தாலும் அவர்களுக்குத் தயக்கம். எதற்கு அநாவசிய ரிஸ்க் என்று நினைத்திருக்கவேண்டும்.

பள்ளியின் முதல்வர் என்னிடம் பேசினார். ‘நல்ல ரேங்க் எடுத்திருக்கே. ஓகே. ஆனா, உங்களை மாதிரி மாணவர்களை எங்களுக்கு ஹேண்டில் பண்ண தெரியாது தம்பி. நீங்க வேற எங்காவது ட்ரை பண்ணுங்களேன்.’

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. எப்படி பதிலளிப்பது அல்லது பதிலளிப்பதா வேண்டாமா என்பதும் புரியவில்லை.

அப்போதைக்கு வேறு எங்கும் சேரமுடியாது என்றும் தெரிந்தது. இந்த வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்று நம்பிக்கையுடன் வாய் திறந்தேன்.

‘சார்… எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. நான் நல்லா படிச்சி, நல்ல ரேங்க் வருவேன்.’

‘படிக்கிறதைப் பத்தி பிரச்னை இல்லேப்பா. நீ நல்லா படிப்பே என்பது உன்னோட சர்டிஃபிகேட்ஸை பார்த்தாலே தெரியுது. அது இல்லே விஷயம். How will you manage?

மேனேஜ் என்று அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது பிறகே புரிந்தது. அதாவது பிளஸ் 1 வகுப்புகளில் சில 3வது மாடியில் நடக்கும், இன்னும் சில நான்காவது மாடியில். அங்கெல்லாம் எப்படிச் செல்வாய்?

நான் சிறிதும்  தாமதிக்காமல் பட்டென்று பதிலளித்தேன். ‘ஸ்டெப்ஸ் ஏறிப் போகிறதுக்கு கால்தான் நல்ல ஸ்ட்ராங்கா இருக்கணும் சார். எனக்கு கண் தானே தெரியாது? என்னோட கால் ரெண்டும் நல்லா ஸ்ட்ராங்கா இருக்கு. அது போதும் சார் எனக்கு.’

ஒரு கணம் சிலிர்த்துப்போன முதல்வர் எழுந்து வந்து என் தோளைத் தட்டிக்கொடுத்தார்.  ‘ஓ.கே. இந்த ஸ்கூல்ல உன்னைச் சேர்த்துக்கறேன்.’

என்னைப் பொறுத்தவரை அவருடைய இந்த முடிவு எனக்கு மிகப் பெரிய திருப்புமுனை.

என்னை நம்பி அட்மிஷன் போட்ட அவர் பெயரைக் காப்பாற்றவேண்டுமே என்ற அக்கறையுடன் மிக நன்றாகப் படித்து அனைத்துத் தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்தேன். பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் ரேங்க் வாங்கி பள்ளிக்குப் பெருமை சேர்த்தேன்.

மற்றவர்கள் நம்மீதும் நம் திறமைமீதும் கொண்டுள்ள நம்பிக்கையைவிட நாம் நம்மீது கொண்டுள்ள நம்பிக்கை மிக மிக முக்கியம். நமது திறமைகளைப் பற்றியோ தகுதிகளைப் பற்றியோ எந்தச் சூழ்நிலையிலும் நாம் அவநம்பிக்கை கொள்ளக்கூடாது.

உன்னையறிந்தால்…. நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்…. உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்.

 

Share/Bookmark

காந்தியை கோட்சே கொல்லவில்லை

$
0
0

mahatma-gandhi-origional-wallpaper-1-8மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 29

உலகில் நடக்கும் எந்தவொரு புரட்சியிலுமே யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுடைய மதிப்பீடுகளின் அடிப்படையில்தான் புதிய அரசு அமைவது வழக்கம். ரஷ்யாவில் ஜார் மன்னரை எதிர்த்து பாட்டாளிவர்க்கம் போராடி ஆட்சி அமைத்தபோது பாட்டாளிகளின் மதிப்பீடுகள்தான் புதிய ஆட்சியின் அடிப்படையாக அமைந்தன (அதை நடைமுறைப்படுத்துவதில் இருந்த சர்வாதிகாரத்தன்மை தனியாகப் பேசப்படவேண்டிய ஒன்று). அடிமை முறைக்கு எதிரான போராட்டமாக நடைபெற்ற அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிறகு அமைந்த அரசு சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் உருவானது.

ஆனால், இந்தியாவில் மட்டும்தான் ஒரு விபரீதமான விசித்திரம் நடைபெற்றது. பிரிட்டிஷாரின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக நாம் போராடினோம். ஆனால், அவர்களை விரட்டியடித்துவிட்டு நாமே பிரிட்டிஷாராகிவிட்டோம் (அதுவும் அரைகுறையாக). அதாவது, பிரிட்டிஷாரை விரட்டிவிட்டு அந்த இடத்தில் நம்மிடம் இருந்தவர்களில், யார் கூடுதல் பிரிட்டிஷ் அடிமை மனோபாவம் கொண்டவர்களாக இருந்தார்களோ அவர்களிடம் ஆட்சியை அமைக்கும் பொறுப்பையும் அரசியல் சாசனத்தை எழுதும் பொறுப்பையும் கொடுத்தோம். பிரிடிட்ஷாருக்கு எதிராக எந்த காந்தியின் வழியில் போராடினோமோ அவருடைய மதிப்பீடுகளை முற்றாக ஒதுக்கித் தள்ளினோம். எஜமானர் மாறிவிட்டார். ஆனால், அடிமைத்தனம் மாறவில்லை. அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்துவிட்டது. ஆனால், நோயாளிதான் இறந்துவிட்டார்.

சுதந்தரம் பெற்ற பிறகு இந்தியா எப்படியான நாடாக இருக்கவேண்டும் என்று காந்தி ஒரு கனவை முன்வைத்திருந்தார். கிராம ஸ்வராஜ்ஜியம் என்று அவர் அதை எளிய வார்த்தைகளில் அடையாளப்படுத்தியிருந்தார்.

“இந்தியாவின் அதிகாரமையமாக டெல்லியோ பம்பாயோ கல்கத்தாவோ இருக்காது. அதிகாரமானது லட்சக்கணக்கான அதன் கிராமங்களிடம் இருக்கும். மக்கள் தன்னர்வத்துடன் ஒன்றுகூடிச் செயல்படுவார்கள். நாஜிக்களின் ஜெர்மனியைப் போலவோ கம்யூனிஸ்ட்டுகளின் ரஷ்யாவைப்போலவோ சர்வாதிகாரத்தால் அந்தக் கூட்டுறவு பெறப்பட்டிருக்காது.

ஏழு லட்சம் கிராமங்கள் இந்தியாவில் இருக்கின்றன. ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு வாக்கு. அதாவது ஒவ்வொரு கிராமத்தினரும் ஒரு நபரைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த கிராமப் பிரதிநிதிகள் மாவட்ட நிர்வாகியைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த மாவட்ட நிர்வாகிகள் மாநிலப் பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த மாநிலப் பிரதிநிதிகள் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பார்கள். அவர் அனைவருக்குமான தலைமை நிர்வாகியாக இருப்பார்.

ஒவ்வொரு கிராமமும் தன்னுடைய அடிப்படைத் தேவைகளைத் தானே பூர்த்தி செய்துகொள்ளும் திறமை கொண்டதாக இருக்கும். அதேநேரம் தேவையான பிற விஷயங்களில் பிற கிராமங்களைச் சார்ந்ததாகவும் இருக்கும். உணவு, உடை ஆகியவற்றைத் தானே உற்பத்தி செய்துகொள்ளும். கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலம் இருக்கும். பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் மன மகிழ் நிகழ்வுகளுக்கும் விளையாட்டுக்கும் தேவையான இடங்கள் இருக்கும். அதற்கும் மேலாக நிலம் இருந்தால் அங்கு கஞ்சா, புகையிலை போன்றவை அல்லாமல் பிற உணவுப்பயிர்கள் பயிரிடப்படும். கிராமத்தின் சார்பில் ஒரு பொது கலையரங்கம் இருக்கும். பள்ளிக்கூடம் இருக்கும். பொது நலக்கூடம் இருக்கும். சுத்தமான குடிநீர் வசதி இருக்கும். நிலங்களுக்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகள் இருக்கும். அனைவருக்கும் கட்டாயக் கல்வி தரப்படும். முடிந்தவரை எல்லா செயல்பாடுகளும் கூட்டுறவாகச் செய்யப்படும். இன்று தீண்டாமையின் அடிப்படையில் சாதிகள் மேல் கீழ் என படிநிலைப்படுத்தப்பட்டிருப்பதுபோல் இருக்காது. அங்கு போராடும் வழி முறை என்பது சத்யாகிரக, ஒத்துழையாமை இயக்க வடிவில் அகிம்சை முறையிலேயே இருக்கும்.’

காந்தியின் இந்த கிராம ராஜ்ஜியம் என்பது அப்படியொன்றும் முற்றிலும் புதியதொரு கண்டுபிடிப்பு அல்ல. காலகாலமாகவே இந்தியாவில் இருந்துவந்த கிராம நிர்வாக வழிமுறைதான். அதில் புதிய அறமாக சாதி சார்ந்த சமத்துவத்தை காந்தி அழுத்தமாக முன்வைத்திருந்தார். குழந்தை ஒன்று இளைஞராவது என்றால் குழந்தைப் பருவத்தில் இருந்த கைகளும் கால்களும் பலம் பெற்று வளர்வதுதானே. நேற்றில் கால் ஊன்றி நாளையை எட்டிப் பிடிக்கும் ஒன்றாகத்தானே எந்தவொன்றின் வளர்ச்சியும் இருக்கவேண்டும். யாராக இருந்தாலும் அப்படித்தான் யோசித்திருக்கவேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. இந்தியாவின் கடந்த கால வாழ்க்கையைச் சரியாகப் புரிந்துகொள்ளாதவர்களிடம்தான் அதன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் சாதியை இந்தியாவின் சாபமாகப் பார்த்தார்கள். கிராமத்தை அதன் கோட்டையாகப் பார்த்தார்கள்.

மனிதர்களைத் தனித்தனியாக அடையாளப்படுத்தும் சாதி, மதம், கடவுள் நம்பிக்கை போன்றவையெல்லாம் ஆதிக்க சக்திகளின் கண்டுபிடிப்புகள் அல்ல. எளிய மக்களின் பல ஆண்டுகால நம்பிக்கைகள், மதிப்பீடுகள் ஆகியவற்றின் விளைவாக உருவானவை. ஆனால், ஆதிக்க சக்திகள் எளிய மக்களின் அந்த நம்பிக்கைகளையும் மதிப்பீடுகளையும் தங்கள் ஆதாயத்துக்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அந்த அதிகாரத்தை அவர்கள் கைகளில் இருந்து பறிப்பதுதான் நியாயமான செயலாக இருக்கமுடியும். ஏனென்றால் அந்த மதிப்பீடுகளுக்கு சாதகமான ஒரு பங்களிப்பும் உண்டு.

உதாரணமாக சாதி என்பதை எடுத்துக்கொண்டால், பிற சாதியினரிடம் விலகலை ஏற்படுத்தும் அதே நேரத்தில்  குறிப்பிட்ட சாதியினருக்குள் நட்பையும் ஸ்நேகத்தையும் அது உருவாக்கவும் செய்கிறது.  மனிதன் அடிப்படையில் சுய நலம் மிகுந்த ஒரு விலங்குதான். அப்படிப்பட்டவன் சக மனிதர்களுடன் நட்புறவு கொள்ள குலம், சாதி என்ற மனோபாவம் மிகவும் அவசியமாக இருந்தது. அந்தவகையில் சாதிக்கு ஒரு ஆக்கபூர்வமான பங்களிப்பு உண்டு. எனவே, சாதி மதிப்பீடுகள் முழுவதுமே தவறு என்று சொல்லி அவற்றின் அடிப்படையில் உருவான அமைப்புகளை அழிக்க முற்படுவது சரியாக இருக்காது. இதனால்தான் எளிய மக்களின் நலனில் அக்கறைகொண்டு செயல்படும் பல போராட்ட இயக்கங்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாமலும் அவர்களைச் சுரண்டும் சக்திகளுக்கு பெரும் ஆதரவும் கிடைத்துவருகிறது.

ஒரு மனிதன் தன் கைகளால் கொலை செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். கைகள் இருக்கும்வரை மனிதர்கள் கொலை செய்யத்தான் செய்வார்கள். எனவே, அந்தக் கைகளை வெட்டி எறிய வேண்டும் என்று சொல்வது போல் இருக்கிறது சாதி இருக்கும்வரை ஏற்றத்தாழ்வும் ஒடுக்குமுறையும் இருக்கும் என்று சொல்வது. உண்மையில் கைகளைக் கொண்டு ஒருவன் கொலை செய்யாமல் தடுக்க என்ன வழி உண்டோ, நல்ல செயல்களைச் செய்யவைக்க என்ன வழிகள் உண்டோ அதைத்தான் செய்யவேண்டும். அந்தவகையில் சாதி, மதம், தெய்வ நம்பிக்கை போன்ற அமைப்புகளை அவற்றின் தீய அம்சங்களை அகற்றிச் சீர்திருத்தத்தான் ஒருவர் முயற்சி செய்யவேண்டும். ஏனென்றால் அடிப்படையில் அவை ஆதிக்க சக்திகளின் கண்டுபிடிப்புகள் அல்ல. மனிதர்களின் அதி இயல்பானவை.

காந்திக்கு இந்தப் புரிதல் இருந்தது. எனவேதான் சாதி சார்ந்த கெட்ட குணங்களை விட்டொழித்துவிட்டு சேரிகளுக்குச் சென்று பிராயச்சித்தம் செய்யுங்கள் என்று ஆக்கபூர்வமாகத்தான் அறைகூவல்விடுத்தார். அம்பேத்காரியவாதிகள், பெரியாரியர்கள் தங்களுக்கு மேலாக இருக்கும் சாதி மீது வெறுப்புடன் விமர்சனம் வைத்தனரேதவிர தமக்குக் கீழான சாதியினர் மீதான அடக்குமுறையை அப்படி ஒன்றும் விட்டொழித்திருக்கவில்லை. முதலில் பிராமண-பனியாவை ஒழிப்போம். அதன் பிறகு நம் பிரச்னையைப் பார்ப்போம் என்றுதான் சிந்தித்தார்கள். அது எவ்வளவு பிழையான சிந்தனை என்பதை காலம் நமக்குத் தெளிவாகக் காட்டிவிட்டிருக்கிறது. இந்த இடத்தில்தான் ஒட்டுமொத்த சாதி வெறியை விட்டொழிக்கச் சொன்ன காந்தியின் அணுகுமுறை துலக்கம் பெறுகிறது. காந்தியின் போதனைகளை ஏற்றுக்கொண்ட மேல் சாதியினர் தங்களுக்குக் கீழே இருக்கும் சாதியினருக்கு சேவை செய்ய முன்வந்ததன் மூலம் சாதி வெறியை விட்டொழிப்பது எளிதுதான் என்பதையே உணரவைத்திருக்கிறார்கள்.

இந்த உண்மையைப் புரிந்துகொள்ளும் பக்குவமும் வெளிப்படையாக அதைச் சொல்லும் தைரியமும் உள்ளவர்களைத் தலைவர்களாகப் பெறும்போதுதான் ஒரு சமூகம் முன்னேற்றத்தின் பாதையில் செல்லமுடியும். ஆனால், துரதிஷ்டவசமாக இந்தியாவுக்கு அப்படியான கொடுப்பினை இருந்திருக்கவில்லை. அடிமை இந்தியாவை விழித்தெழ வைக்க ஒரு காந்தி இருந்தார். ஆனால், சுதந்தர இந்தியாவை வழி நடத்த நேருவும் அம்பேத்கரும்தான் நமக்குக் கிடைத்தார்கள்.

சுதந்திரம் பெற்ற புதிய இந்திய அரசு தீவிர ஆய்வுகளுக்குப் பிறகு முன்வைத்த அரசியல் சாசன முன்வரைவின் ஆயிரக்கணக்கான பக்கங்களில் கிராமம் என்ற ஒற்றை வார்த்தைகூட இருந்திருக்கவில்லை (கிராம அலகுகளுக்கு உரிய அதிகாரம் கொடுக்க வேண்டும் என்ற பரிந்துரையைப் பெயரளவில் சேர்க்கவே பெரும்பாடு படவேண்டியிருந்தது).

இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. ஏனென்றால் இந்தியாவின் நவ சிற்பிகளில் முதன்மையானவர்களாக இருந்த நேருவுக்கும் அம்பேத்கருக்கும் இந்திய கிராமம் பற்றி பிரிட்டிஷாரைவிடப் பெரிய வெறுப்பே இருந்தது. அவர்கள் பிறப்பால் நிறத்தால் இந்தியர்களாக இருந்தார்கள். சிந்தையாலும் செயலாலும் பிரிட்டிஷரின் தாசர்களாக, சொன்னதைச் செய்துமுடிக்கும் குமஸ்தாவர்க்கத்தின் தலைமைப் பணியாளர்களாக இருந்தனர்.

நேரு கிராமங்களை அறிவுபூர்வமாகவும் கலாசாரபூர்வமாகவும் பின்தங்கிய இடமாகக் கருதினார். அங்கிருப்பவர்கள் எல்லாரும் குறுகிய ம்னோபாவம் கொண்டவர்கள். எனவே, உண்மையற்றவர்களாகவும் வன்முறையாளர்களாகத்தான் இருப்பர்கள் என்று கருதினார். கிராமங்களைப் புகைப்படங்களில் பார்த்திருக்கும் தைரியத்தில் இந்த அபாரமான கண்டுபிடிப்பை வெளிப்படையாக, தைரியமாக, கூச்சமில்லாமல் முன்வைத்தார். இயற்கை வளங்கள் அதிகமாகவும் மக்கள்தொகை குறைவாகவும் இருந்த மேற்குலகுக்கு தொழில்மயமாதல் மிகவும் அவசியமானதாக இருந்தது. ஆனால், புலியைப் பார்த்து யானையும் சூடு போட்டுக்கொள்வதுபோல் மக்கள்தொகை அதிகமாக இருக்கும் இந்தியாவுக்கும் அதையே முன்வைத்தார். அவர் விரும்பிய நவீன கோயில்களைக் கொண்ட ஓர் இந்தியா உருவாகவேண்டுமென்றால் அதற்கு மையப்படுத்தப்பட்ட வலுவான ஓர் அரசுதான் தேவை என்பதில் உறுதியாக இருந்தார். இந்தியாவின் வளர்ச்சி என்பது அது எந்த அளவுக்கு மேற்குலகின் நகலாக ஆகிறதோ அதில்தான் இருக்கிறது என்று கருதினார். எனவே, அவருடைய உலகில் கிராமங்களுக்கு இடமே இல்லை என்பதில் ஆச்சரியமே இல்லை.

நவீன இந்தியாவின் இன்னொரு சிற்பியான அம்பேத்கரின் உலகிலும் கிராமங்களுக்கு இடமில்லை. அவர் கிராமங்களை சாதிவெறியின் அடையாளமாகக் கண்டார். சாதி சார்ந்த ஏற்றத் தாழ்வு மறைய வேண்டுமானால், கிராமங்கள் அழியவேண்டும் என்று நம்பினார். அவருடைய தீர்மானம் ஒருவகையில் சரியானதுதான். ஏனென்றால், அனைத்து கிராமங்களுமே அந்தப் பகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் சாதியின் அதிகாரமையமாகவே இருந்தன. எனவே, சமத்துவமான சமூகம் உருவாகவேண்டுமென்றால் கிராமப்புற நிர்வாக அமைப்பு மாற்றி அமைக்கப்பட்டாகவேண்டிய தேவை இருந்தது.

ஆனால், இவர்கள் இருவருமே கிராமத்தை வலுவிலக்கச் செய்ததன் மூலம் நகரத்தை வலுவானதாக ஆக்கிவிட்டார்கள். நாய்க்கு பதிலாக ஓநாயைக் காவலுக்குக் கொண்டுவந்து வைத்ததைப் போன்ற ஒரு செயல் இது.

இந்தியாவுக்குத் தேவையான தொழில் வளர்ச்சி என்பது மேற்குலகில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று காந்தி சொன்னது வெறும் அலங்கார வாக்கியம் அல்ல. இன்றும் பெருமளவிலான மக்கள் கிராமங்களில்தான் வாழ்கிறார்கள். விவசாயம்தான் இந்தியாவின் பிரதான தொழிலாக இருக்கிறது. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை முன்னேற்றத்தின் பாதையில் கொண்டு செல்வதென்றால், விளைநிலங்களின் பரப்பை அதிகரித்தல், ஏராளமான ஏரிகளையும் குளங்களையும் வெட்டி நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்குதல், உற்பத்தி அளவைப் பெருக்குதல், கடின வேலைகளை எளிமைப்படுத்துதல், உற்பத்திப் பொருட்களைப் பதப்படுத்துதல், நியாயமான முறையில் பகிர்ந்தளித்தல் என நடந்தேறியிருக்க வேண்டும். அதுதான் உண்மையான இந்தியத் தொழில் வளர்ச்சியாக இருந்திருக்கும். ஆனால், நேருவோ, மேற்குலகுக்கு நன்மை தரும் முறையில் இந்தியாவைத் தகவமைப்பதையே தன் பொருளாதார லட்சியமாக முன்வைத்தார். அடுத்துவந்த அரசுகள், இந்தியாவின் கனிம வளங்களில் ஆரம்பித்து உழைப்பு சக்திவரை அனைத்தையும் சூறையாடிக்கொள்ள பன்னாட்டு முதலைகளுக்கு கதவுகளை அகலத் திறந்துவைத்துவிட்டிருக்கிறது. சுதேசி இயக்கம் என்பது இன்று அனைத்துத் தளங்களிலும் முற்றாகத் துடைத்தெறியப்பட்டிருக்கிறது. நேரு இதை விரும்பியிருக்கமாட்டார். ஆனால், அவர் ஆரம்பித்துவைத்த தொழில்மயமாக்கம் இதைத்தான் சாத்தியப்படுத்தும் என்பது காந்திக்குத் தெரிந்திருந்தது. எனவேதான் அவர் பலமுறை நேருவை அவருடைய மேற்கத்திய மோகம் குறித்து எச்சரித்திருக்கிறார். ஆனால், காந்தியின் கிராம ராஜ்ஜியம் ஒரு கற்பனைக் கனவு என்று எள்ளி நகையாடினார் நேரு.

காந்தி தன் கிராம ராஜ்ஜியத்தின் ஆதார அம்சத்தை ராம ராஜ்ஜியத்தில் இருந்து எடுத்திருந்தார். அம்பேத்கருக்கு கிராம ராஜ்ஜியத்தை எதிர்க்க அது ஒன்றே போதுமானதாக இருந்தது. ‘தவம் செய்யும் சூத்திரனின் தலையைக் கொய்வதுதான் ராம ராஜ்ஜியம்’ – இதுதான் இந்தியாவில் தோன்றிய அனைத்து மேதைகளின் போராளிகளின் ஏகோபித்த கண்டுபிடிப்பு.

உத்தர ராமாயணத்துக்கு மக்கள் மத்தியில் என்ன மரியாதை இருந்தது? அது பிற்சேர்க்கையா, இடைச்செருகலா? சரீரத்துடன் மேலுலகம் செல்ல விரும்பித்தான் சம்புகன் தவம் செய்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறதே… துவிஜர்களை எதிர்த்துப் போராடியதாகவா சொல்லப்பட்டிருக்கிறது. உன்னோடு ஐவரானோம் என்று வேடனை ஆரத் தழுவிய ராமன், பழங்குடிக் கிழவி கடித்துக் கொடுத்த பழத்தை ருசித்து உண்ட ராமன், இன்று போய் நாளை வா என்று பகைவனுக்கும் அருளிய ராமன், சிற்றன்னை சொன்ன ஒற்றை வார்த்தைக்காக நாட்டைத் துறந்து சென்ற ராமன்… இந்த ராமன்கள்தானே எளிய மக்களின் மனத்தில் இடம்பிடித்திருக்கும் ராமன். இந்திய மக்கள் தங்கள் சாதி உணர்வுக்கு ராமனையா முன்மாதிரியாக வைத்திருக்கிறார்கள்? வேண்டுமானால், இன்றைய பெண்ணிய அளவுகோல்களை வைத்து ராமனை ஆணாதிக்கவாதி என வேண்டுமானால் சொல்லமுடியுமே தவிர சாதி வெறிக்கு ராமனை முன்வைப்பதில் எந்த நியாயமும் இருக்கமுடியாது. ஆனால், அம்பேத்கரில் ஆரம்பித்து பெரியார் வரை அனைவரும் ராமராஜ்ஜியம் என்றால் அது சாதி வெறி பிடித்தது என்ற முடிவுக்கு சம்புகவதம் என்ற ஒற்றைக் கதையை முன்வைத்து வந்துவிட்டிருக்கிறார்கள்.

எனவேதான் அம்பேத்கர் கிராமங்களிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது என்பது சாதி இந்துக்களிடம் அதிகாரத்தைக் கொடுப்பதாகவே முடியும். இந்தியாவுக்கு மையப்படுத்தப்பட்ட வலுவான அரசாங்கமே தேவை என்று நினைத்தார். ஆனால், எண்ணிக்கை பலமே அரச அதிகாரத்தைத் தீர்மானிக்கும் தேர்தலமைப்பில் (விகிதாசார பிரதிநிதித்துவத்துக்கு மாற்றாக) அதே சாதி இந்துக்களே மிகப் பெரிய அதிகார மையமாக உருவாக வாய்ப்பு உண்டு என்பதைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார். அதாவது, தாழ்த்தப்பட்ட சாதியினரை கலகம் செய்யச் சொல்லிவிட்டு, கம்பைப் பிற்படுத்தப்பட்ட சாதியிடம் கொடுத்துவிட்டார். கிராமப்புற அலகாக இருந்த வரையில் ஆதிக்க சாதிகளுக்குக் குறைவான அதிகாரமே இருந்தது. இன்றோ அவை பூதாகாரமாகப் பெருகிவிட்டிருக்கின்றன.

உண்மையில் பழங்கால கிராமங்களில் இருந்த மேல் சாதி ஆதிக்க மனோபாவத்தை நீக்க என்ன செய்திருக்கவேண்டும். உதாரணமாக, ஆலமரத்தடியில் நடக்கும் பஞ்சாயத்து சாதி வெறி மிகுந்ததாக இருக்கிறது என்றால் அதை மாற்ற என்ன செய்திருக்கவேண்டும். வாதிக்கும் பிரதிவாதிக்கும் நாற்காலியைக் கொண்டுவந்து போடு என்பதில் இருந்து ஆரம்பித்திருக்கலாம். குற்றம் நிரூபிக்கப்படும்வரை எல்லாரும் நிரபராதிகளே. அவர்களை நிறக வைத்துக் கேள்வி கேட்கக்கூடாது. ஒரு கிராமத்தில் எத்தனை சாதிகள் இருக்கின்றனவோ அத்தனை பிரதிநிதிகள் நீதி வழங்கும் குழுவில் இருக்கவேண்டும். என்ன தவறுக்கு என்ன தண்டனை என்பதை மக்கள் தீர்மானித்து வடிவமைத்துக் கொடுக்கவேண்டும். அதை இம்மி பிசகாமல் ஒப்பிக்கும் பொறுப்பு மட்டுமே நீதிபதிகளுக்கு உண்டு என நீதி அமைப்பில் ஆக்கபூர்வமான மாற்றங்களைக் கொண்டுவந்திருக்க வேண்டும்.

ஆனால், பஞ்சாயத்து ஆலமரத்தை அடியோடு பிடுங்கி எறிவதுதான் சாதி வெறியை ஒழிக்க ஒரே வழி என்று அம்பேத்கர் நினைத்தார். கிராமங்களை அரசியல் சாசனச் சட்டத்தில் செல்லாக்காசாக ஆக்கினார். ஆனால், அதற்கான விலையை நாம் இன்றும் கொடுத்துவருகிறோம். ஒருவேளை ஒவ்வொரு கிராம சபைக்கும் அதனதன் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் அதிகாரம் தரப்பட்டிருந்தால், விளைநிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டிருக்காது. ஏரிகள் தூர்ந்துபோயிருக்காது. கிணறுகள் மண்ணிட்டு மூடப்பட்டிருக்காது. மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்பட்டிருக்காது. அனைத்து சாதியினரையும் உள்ளடக்கிய நிர்வாக முறை அமலாகியிருந்தால் மேற்கத்திய அடிமைகளிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டுப் புலம்பும் நிலை வந்திருக்காது.

இன்றைய நம் அரசின் ராணுவ பலமும் காவல்துறை பலமும் நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு பெருகிவிட்டிருக்கிறது. இன்று நம் ஊழல் மிகுந்த தலைவர்களைச் சரிக்கட்டுவதன் மூலம் தேச விரோத சக்திகள் ஒட்டுமொத்த தேசத்தையே சூறையாடிவிட முடிகிறது. அதிகாரக் குவிப்பு நமக்கு எந்த நன்மையையும் இதுவரை செய்திருக்கவில்லை. அல்லது அதன் மூலம் நமக்குக் கிடைத்த நன்மையைவிட தீமையே அதிகம். காந்தி இதையெல்லாம் முன்பே யூகித்துவிட்டிருந்தார். அதனால்தான் மையப்படுத்தப்பட்ட அரசை  ஆதிமுதல் அந்தம்வரை எதிர்த்தார். கிராமங்களின் குடியரசு ஒன்றை முன்வைத்தார். அதை மறுதலித்ததன் மூலம் நேருவும் அம்பேத்கரும்தான் காந்தியைக் கொன்றிருக்கிறார்கள். கோட்சே அல்ல.

0

Share/Bookmark

ஆப்பிரிக்கத் தாய்

$
0
0

africaபறையர்கள் / அத்தியாயம் 3

இந்தியா முழுமைக்கும் மக்களுக்கு நற் கருத்துக்களை கூற வந்த சமூக அமைப்புகளும் சாதி வடிவைப் பெறத் தொடங்கின. சமத்துவத்துக்காகவும் விடுதலைக்காகவும் பக்தி நெறிகளை ஏற்றுக்கொண்ட வீர சைவர்கள் (கர்நாடகத்தில் தோன்றியவர்கள்) கடைசியில் தனியொரு சாதியாக அமைந்து போயினர். கொள்வினை, கொடுப்பினை முதலியவற்றைத் தமக்கிடையே மட்டுமே செய்து கொண்டனர். அகமண முறையை அனுசரித்து தமது சாதி அடையாளத்தை நிலைநிறுத்திக் கொண்டனர். கபீர்தாசர் வழிவந்த சத்நாமிகளும் எதிர் மரபாகத் தொடங்கி இன்று தனி ஒரு சாதியாக வாழ்கின்றனர்.

குஜராத்துக்கு அருகிலுள்ள சிந்த் பகுதியில் வாழும் ‘ஜாட்’ வகுப்பினர் 8ம் நூற்றாண்டில் ‘சண்டாளர்’களாகக் கருதப்பட்டனர். இப்பகுதியை பின்னாட்களில் ஆளவந்த முகமது காஸிம் போன்ற இஸ்லாமிய அரசர்கள் ஜாட் மக்களைத் தாழ்ந்த நிலையிலேயே வைத்திருந்தனர். ஆனால் 11ம் நூற்றாண்டில் ஜாட்டுகள் பஞ்சாப், ஹரியானா நோக்கி இடம் பெயரத் தொடங்கியதும் அவர்களது தலைவிதியும் மாறியது. 17ம் நூற்றாண்டு வாக்கில் அவர்கள் மதிப்பும் மாண்புமுடைய குடியானவ சாதியாக உருமாறியிருந்தனர். அதே நூற்றாண்டில் ஜாட் வகுப்பாரில் சிலர் மேற்கொண்டு செயல்படுத்திய கிளர்ச்சிப் போராட்டத்தின் விளைவாக அவர்கள் தங்களைப் போராளிகளாக உணர்ந்தனர். தாம் ராஜபுத்திரர்களுக்கு இணையானவர் என்று பெருமை பேசத் தொடங்கினர்.

சிவாஜி, தன்னை சத்திரியனாகக் காட்டிக்கொள்ள உத்தரப் பிரதேசத்திலிருந்து சில பார்ப்பனர்களைத் தருவித்து அவர்களது ஆசியையும், அங்கீகாரத்தையும் பெற்றுக் கொண்டார். மராத்தியப் பார்ப்பனர்கள் அவனுக்கு வழங்க மறுத்த தகுதியை இவ்வாறு அவன் பெற்றுக் கொண்டான்.

மராத்தியத்தில் தையல் தொழில் புரியும் சாதியில் சிலர் சாயம் வெளுக்கும், தோய்க்கும் பணியை மேற்கொண்டபோது வேறொரு சாதியாக உருமாறினார்கள். சில சமயங்களில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் அச்சாதிக்குரிய பழக்க வழக்கங்களை அனுசரிக்காதபோது ‘கீழ்’ நிலைக்குத் தள்ளப்பட்டு ‘கீழ் சாதி’யான சம்பவங்களும் உண்டு. ராஜஸ்தானைச் சேர்ந்த மால்வா பகுதியில் ராஜபுத்திர வகுப்பார் விதவைகளை மறுமணம் புரிய அனுமதிப்பதில்லை. அவ்வகுப்பைச் சேர்ந்த ஒருசில குடும்பங்களில் இவ்வாறு விதவை மணங்கள் நிகழ்ந்தபோது அவர்கள் சாதியிலிருந்து நீக்கப்பட்டனர். இவ்வாறு பிரிந்து மால்வா ராஜபுத்திரர்கள் இரு சாதிகளாகப் பிரிந்தனர்.

நாடு முழுமைக்கும் சமணம், பௌத்தம், ஆசிவகம், சைவம், வைணவம் ஆகிய வைதிக சமயங்களின் தொகைக்கேற்ப வருண வேற்றுமையும், சாதிப் பிரிவுகளும் வலுப்பெற்று வளர்ந்தன. ஒவ்வொரு பெருங் கோயிலைப்பற்றியும், ஊர்ப்புராணங்கள் தோன்றின. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்று பெருமைகளுடன் இந்திரன் சாபம் இங்கு தீர்ந்தது, சந்திரன் சாபம் அங்கு தீர்ந்தது என்னும்  கதைகளும் அந்தக் கோயிலுக்கு வந்து பயன்பெற்ற முனிவர்கள், அரசர்கள், தேவர்கள் முதலியவர்களுடன் குறிப்பிட்ட சாதி மக்களையும், தெய்வ சம்பந்தம் உடையவர்களாக அப்புராணங்கள் சித்தரித்தன.

இதனால் பல சாதியர்களும் தங்களை உயர்ந்த சாதியினராகக் காட்டிக் கொள்ளத் தங்களை மேலான தெய்வங்களுடன் சம்பந்தப்படுத்தும் கதைகளைப் புனைந்தனர். இதனால் சாதி எண்ணிக்கை பெருகத் தொடங்கியது. இந்த நிலையில் பட்டினவர், செம்படவர், பரவர், வன்னியர் முதலியோர் பற்றிய புராணக் கதைகளும் பெருகின.

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நாட்டை ஆங்கிலேயர் ஆண்டு கொண்டிருந்தபோது எட்கர் தர்ஸ்டன் தென்னிந்தியச் சாதிகளும் குலங்களும் என்னும் தலைப்பிட்ட ஆங்கிலப் பெருநூலை அரசிடம் ஒப்படைத்தார். அந்த ஆய்வறிக்கையில் ஒவ்வொரு சாதியினரும், குலத்தவரும் தம்மைத் தெய்வத்தோடு தொடர்பு கொண்டவர் என்று கூறியதை குறிப்பிட்டிருந்தார்.

1910ல் அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியபோது ஒவ்வொரு சாதியரும் தங்கள் கோத்திரங்களைக் குறிப்பிட வேண்டும் என்று கூறியது. அப்பொழுதுதான் ஒவ்வொரு சாதியினரும் தம்மை இந்திரன் குலமென்றும், சந்திரன் குலம் என்றும், அக்கினிக் குலம் என்றும், சூரியன் குலம் என்றும் பெருமையாகக் கூறிக் கொள்ளத் தொடங்கினர்.

கள்ளர், மறவர், அகம்படியார் தம்மை இந்திர குலம் என்று கூறிக் கொண்டனர். கல் தச்சர், பொன் வேலை செய்யும் ஆசாரிகள் தம்மை விசுவகர்மா பிராமணர்கள் என்று கூறிக் கொண்டனர். நாடார், வன்னியர் தம்மை ‘சத்திரியர்’ என்றும் ‘பள்ளர்’ தம்மை தேவேந்திரகுல வேளாளர் என்றும் கூறிக் கொண்டனர்.

இதனால் சோழப் பேரரசு காலத்தில் மேற்சாதியினர் (வலங்கையினர்) 98 பிரிவினராகவும், கீழ்ச்சாதியினர் (இடங்கையினர்) 98 பிரிவினராகவும் இருந்த சாதிப்பிரிவு 1901ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 2378 சாதிகளாகப் பெருகின. 1955ம் ஆண்டுக் கணக்கெடுப்பில் பின்தங்கிய வகுப்புக்கான குழு (பேக்வர்ட் க்ளாஸ் கமிஷன்) பின் தங்கிய சாதிகள் மட்டும் 2399 என்று கணக்கிட்டது. அப்படியென்றால் முன்னேறிய சாதிகள் (ஃபார்வர்ட் க்ளாஸ்)

எத்தனை? தாழ்த்தப்பட்ட சாதிகள் எத்தனை? இவற்றைக் கணக்கிட்டால் தமிழ்நாட்டில் சாதிப்பிரிவுகள் மட்டும் நாலாயிரத்தை நெருங்குமா? தாண்டுமா?

ஆங்கிலேயர் ஆட்சியில் தங்களை உயர்ந்த குலத்தார் என்று கூறிக்கொண்டவர்கள், நாடு விடுதலைப் பெற்றபின் தங்களைத் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கத் தொடங்கி விட்டனர்.

0

மனிதர்களைப் பற்பல சாதிகளாகப் பாகுபடுத்தும் பழக்கம் வருணாசிரமம் என்னும் சதுர்வண முறை நம் துணைக்கண்டத்தை ஆக்கிரமித்து நம் சமூக போராட்டங்கள் அனைத்துக்கும் – சிப்பாய்க் கலகத்திலிருந்து அயோத்தி காலம் வரை காரணமாக இருந்திருக்கிறது.

மருத்துவ நோக்கில் சாதிகளைப் பிரிக்க வேண்டுமென்றால் ரத்த க்ரூப் ஏ,பி,ஓ பாஸிட்டிவ், நெகட்டிவ் என்றுதான் பிரிக்க முடியும். ரத்த தானம் செய்யும்போது பொருத்தமான ரத்தம் தானா? என்று பார்த்துக் கொடுக்க வேண்டும். அவ்வளவுதான் மருத்துவத்தின் சாதி.

மானுடவியலில் மனித சாதியை ஆப்பிரிக்கன், ஏசியன், ஆஸ்திரேலியன், நியூ கினியன், காகேசியன் என்று ஐந்து வகைகளில் அடக்கிவிடுகிறார்கள். நாமெல்லோரும் ஆசிய வகை.

இந்த வகைகளிடையே சரும நிறம், கண்களின் அளவு, அமைப்பு, தலைமயிர் சுருட்டை போன்ற வெளித் தோற்றங்களில் வேறுபாடுகள் தெரிகின்றன. ஆனால் உள்ளுறுப்புகளின் அமைப்பில் வித்தியாசம் இல்லை. ஓர் ஆப்பிரிக்கனின் இதயத்தை ஒரு ஆசியனுக்கு வைக்க முடியும்.

ஆசியனின் சிறுநீரகத்தை ஒரு காகேசியன் ஏற்கலாம். இறைச்சித் தோல் எலும்பிலும் இலக்கமிட்டிருக்குதோ என்று சிவவாக்கியர் கேட்டதற்கு பதில் ‘இல்லை’ என்பதே.

நவீன மனிதன் எப்போது உண்டானான் என்பது பற்றிச் சுவாரஸ்யமான சர்ச்சைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 1987ம் ஆண்டு அமெரிக்க பெர்கல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அலன் வில்ஸன் என்பவர் நேச்சர் இதழில் எழுதிய ஒரு கட்டுரையில் ஒரு புதிய சித்தாந்தம் கொண்டு வந்தார்.

‘நம் முன்னோர்கள் ‘நியண்டர்தால்’ என்னும் இனமல்ல. நவீன மனிதன் சுமார் ஒரு லட்சத்திலிருந்து ஒரு லட்சத்து நாற்பதாயிரம் வருடங்களுக்கு முன் ஒரு ஆப்பிரிக்கக் குழுவிலிருந்து தோன்றினான். இன்றைய மனித சமுதாயம் அத்தனை பேரும் அந்த ஆப்பிரிக்கக் குழுவிலிருந்து தோன்றியவர்கள்தான்’ என்று ஆதாரம் காட்டி எழுதியிருக்கிறார் வில்ஸன். இதற்காக அவர் பயன்படுத்திய அறிவியல் வளர்ச்சி முறை மாலிக்யுலர் பயாலஜி என்னும் இயலைச் சார்ந்தது.

இந்த ஆய்வின்படி அம்மா, பாட்டி, கொள்ளுப்பாட்டி, எள்ளுப்பாட்டி, என்று தாய் வழியிலேயே வம்சாவளியைப் பின்னால் தள்ளிக் கணக்கிட முடிந்தது. அவ்வாறு கணக்கிட்டால் நாம் எல்லோரும் ஒரு லட்சத்து சொச்சம் வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஒரே பெண்மணியின் வாரிசுகள். உலகில் உயிர் வாழும் அத்தனை மனிதர்களும் இந்த மகாமகா பாட்டியிடமிருந்து மைட்டோ காண்ட்ரியா பெற்றவர்கள் என்ற ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அந்தப் பெண்மணிக்கு ‘மைட்டோ காண்ட்ரியல் ஈவ்’ என்றும் பெயரிட்டார்.

பைபிளின் ஏவாள் இந்த மாதிரி இருக்க விரும்பவில்லை. இந்த ஒரே தாய் சித்தாந்தத்துக்கு எதிராக அவர்கள் மற்றொரு சித்தாந்தம் சொல்கிறார்கள். அது ‘நோவாவின் படகு’ சித்தாந்தம். இதன்படி ஆப்பிரிக்காவிலிருந்து மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற பகுதியிலிருந்து வந்த நவீன மானிடர்களால் இடம் பெயர்க்கப்பட்டனர். பிறகு  ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் அவர்கள் பரவினார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் ஆப்பிரிக்க ஏவாள் சித்தாந்தம் பலரை வசீகரித்துள்ளது. அதன் சமூகவியல் அர்த்தங்கள் மிக மிக ஆழமானவை. மனித இனத்தில் எல்லோரும் ஒரே தாயிடமிருந்து ஜனித்தவர்கள் ஆவார்கள்.

ஆராய்ச்சிகளும், மருத்துவ உண்மைகளும் என்ன சொன்னாலும் சாதி பிடியிலிருந்து இறங்கி சமூக தளத்தில் ஒன்றாக இருக்க இங்கு யாரும் தயாராக இல்லை என்பதே உண்மை.

0

Share/Bookmark


அணுகுமுறையும் நம்பிக்கையும்

$
0
0

பேசு மனமே பேசு / அத்தியாயம் 3

beliefநேர்மறை சிந்தனை என்றால் நேராக, நேர்மையாக சிந்திப்பது என்று அர்த்தமல்ல. பிரச்னைகள் வரும்போது, அவற்றுடன் கூடவே, ‘என்னாகுமோ’ என்ற பயம், பரிதவிப்பு, ஒருவிதமான ஆத்திரம், போன்றவையும் கூடவே பயணம் செய்யும். இந்தச் சமயத்தில் நமது மனத்தில் அடிப்படை மாற்றம் ஒன்றைக் கொண்டுவரவேண்டும். அதாவது நமக்கு ஏற்பட்டது பிரச்னை என்பதை, ‘சவால்’ என்பதாகக் கருதவேண்டும். இதற்குத்தான் ஆங்கிலத்தில் ‘பாசிடிவ்’ மனோநிலை என்று கூறப்படும் நேர்மறை சிந்தனை தேவைப்படும்.

நமது நடத்தைகள் அனைத்தும், புரிதல்களின்படி அமைகின்றன. உதாரணமாக ‘மலர்’ என்றால் உடனே நமக்குப் புரிவது என்ன? அழகானது, மணமுள்ளது, மிருதுவானது, இவை சார்ந்த புலன்களைத் தூண்டக் கூடியது என்பன போன்ற புரிதல்களும், இவை சார்ந்த நம்பிக்கைகளும்தான். இது மட்டுமின்றி, ‘மலர் போன்ற மென்மை’ என்ற உருவகங்களும், கற்பனைகளும். மேற்கண்ட அணுகுமுறையைப் பின்பற்ற வைக்கும்.

இது போலவே அனைத்து விஷயங்களிலும் நிகழ்கிறது. எவை பற்றிய தகவல்களாக இருந்தாலும், மனத்தில் செல்லும்போது, வார்த்தைகளாக, சொற்களாக அல்லது மௌனப் பேச்சாகவே இருக்கும். இவைதான் எண்ணங்களாக மாறுகின்றன. இவற்றின் அடிப்படையில்தான் செயல்களும், அவற்றை வெளிப்படுத்தும் அணுகுமுறைகளும் அமைகின்றன. நேர்மறை சிந்தனையும், அதை ஒட்டிய செயல்பாடுகளும், இதே விதத்தில்தான் இருக்கின்றன.

பிரபலமான ஆங்கில செய்தி சேனலில் பணி புரிந்த பெண்மணி, மந்தாகினி மல்லா. சிறு வயதிலிருந்தே அவரது தந்தையின் ஊக்குவிப்பால், வீர விளையாட்டுகளான, மலையேற்றம், படகுப்போட்டி, உடல்திறன் போட்டிகள் போன்றவற்றில் ஆர்வமாக ஈடுபட்டு வந்தார். அவரது 16ம் வயதில் மலையேற்றம், படகு சவாரி ஆகியவற்றில் தொழில்முறை போட்டியாளர் என்ற தகுதியைப் பெற்றார். அந்த சமயத்தில் ஒருமுறை மலையேற்றத்தின்போது நடந்த விபத்தினால், கீழே விழுந்து தோள்பட்டை எலும்பு முறிந்து போனது. அத்துடன் மலையேற்றக் கனவு சிதைந்தது.

ஒரு வருடம் சிகிச்சை பெற வேண்டியிருந்ததால் வீட்டிலேயே இருந்தார். குறிப்பிட்ட ஒருநாளில், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுற்றுலா பயண நிகழ்ச்சியின் ஒளிபரப்பைக் கண்டார். நிகழ்ச்சியின் படப்பிடிப்பு மற்றும் திறன், மந்தாகினியின் மனத்தில் புதிய யோசனையை உருவாக்கியது. தானும் ஒளிப்பதிவாளராக ஆக வேண்டும் என்பதுதான் அந்த எண்ணம்.

உடல்நிலை தேறி, கல்லூரி படிப்பை முடித்த பின், முனைப்புடன் முயற்சி செய்து ஒரு தொலைக்காட்சியில் வேலைக்கு சேர்ந்தார். அவருக்கு முதலில் அளிக்கப்பட்ட பணி, குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு வேண்டிய தகவல்களைத் திரட்டுவதுதான். ஆனாலும், எப்படியாவது ஒளிப்பதிவாளராக வேண்டும் என்ற எண்ணம் வலுத்துக்கொண்டே வந்தது. அதற்கான வேலை வாய்ப்புகளையும் தேடினார். சிறிது காலத்திலேயே, நினைத்தபடியே வேறொரு தொலைக்காட்சியில், ஒளிப்பதிவாளருக்கு உதவியாளராக வேலை கிடைத்தது.

அங்கே ஏற்கெனவே ஒளிப்பதிவாளராக இருந்த பெண்மணிக்கு உதவியாளராகச் சேர்ந்து, சிரத்தையுடன் உழைத்தார். சில வருடக் கடின உழைப்பிற்குப் பின், மந்தாகினி மல்லா, தனியாக நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்யும் அளவுக்கு உயர்ந்தார். இந்தத் துறையில், அதுவும் தொலைக்காட்சியில், பணியாற்றுபவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருப்பார்கள். அந்தத் துறையில் பெண் தனது திறமையை நிரூபித்து, ஒளிப்பதிவாளராக ஆவது சாதாரண விஷயமே அல்ல. அதை மந்தாகினி மல்லா சாதித்துக் காட்டினார்.

இதற்கு முக்கியக் காரணம், தான் விரும்பிய ஒரு துறை, அதிலும் தகுதி மற்றும் திறமையை நிரூபித்த ஒரு துறையில் புகழ் பெற ஆரம்பிக்கும்போது, விபத்தினால் பாழ்பட்டு போனால், நொந்து சோர்ந்து, முடங்குபவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள். ஆனால் மந்தாகினி மல்லாவைப் போன்று இதுவரையில் நம்பியது, விரும்பியது, இனி இல்லை. இனி என்ன செய்ய முடியும்? என்ற கேள்வியைக் கேட்பவர்கள் சாதிக்கவே செய்கிறார்கள். இதற்கான மனப் பக்குவம் மந்தாகினிக்கு 16 வயதினிலே ஏற்பட்டதுதான் குறிப்பிடத்தக்கது.

இந்த மாற்றம் நிகழ, முதலில் மனத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். மற்றும் செய்திகள், எண்ணங்களாக நம்பிக்கைகளாக உள்ளே செலுத்த வேண்டும். உற்றார், உறவினர் ஆகியோர், பிரச்னைக்குரிய சந்தர்பங்களில் தைரியமும், ஆதரவும் தர முடியும். ஆனால் அவையெல்லாம், நேர்மறை செய்திகளாக மனத்திற்குள் செல்ல வேண்டும். இப்படிச் செய்ததால்தான் மந்தாகினிக்கு வாழ்க்கையில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தீர்மானம் செய்ய முடிந்தது. அதுவுமின்றி, இனி எதையாவது எடுத்து சாதிப்பேன் என்ற எண்ணம் மனத்தில் இருந்தால்தான், மாற்று வழிகூட கண்ணுக்கும் மனத்துக்கும் புலப்படும்.

குறிப்பிட்ட காலம்வரை இந்தச் சூழ்நிலையில் இருந்தேன்; இப்போது மாறியிருக்கும் சூழ்நிலையை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பதன்மூலம், அதன் விளைவிலிருந்து தப்பிக்க முடியாது என்ற தெளிவு வேண்டும்.

‘ஐயோ இனி செய்ய என்ன இருக்கிறது?’ என்று நினைத்தால் மனத்தில் அது தொடர்பான எண்ணங்கள்தான் உள்ளே செல்லும். நமது அடுத்த கட்ட நடவடிக்கைகளும் அதையொட்டியே இருக்கும். புதிய சூழ்நிலை என்னவாக இருந்தாலும், அதிலுள்ள கஷ்டங்கள் மட்டும்தான் கண்ணுக்குத் தெரியும். அப்படி இல்லாமல், ‘அடுத்து எதையாவது செய்து வெற்றி பெற வேண்டும்’ என்று நினைத்தால், புதிய சூழ்நிலையில் உள்ள சாதகமான அம்சங்கள் கண்ணுக்குப் புலப்படும். இதன் மூலம் நம்முள் ஏற்கெனவே உள்ள எதிர்மறைப் பதிவுகளை அழிக்கலாம். புதிய தகவல்களைச் சேர்க்கலாம். அதன் அடிப்படையில் நமது செயல்கள் இருக்கும். இவற்றுக்கெல்லாம் அடிப்படைத் தேவை, மாற வேண்டும், அதன் மூலம் சூழ்நிலையை, தற்போதைய நிலைமையை மாற்ற வேண்டும் என்று ஆழமாக விரும்ப வேண்டும்.

இந்த நேர்நிலை மனப்பாங்குதான், மனத்தில் இது தொடர்பான எண்ணங்களை ஏற்படுத்தும். வெளி சூழ்நிலையிலிருந்து தேவையான, அதாவது நமக்கு சாதகமாக இருக்கக்கூடிய அம்சங்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் மனநிலை, இதனால் ஏற்படும். சூழ்நிலை மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாமல், நாம் மாற வேண்டும் என்ற ரீதியில் செயல்பட்டால் அது பலன் தராது. சூழ்நிலை மட்டும் மாறினால் போதும், நான் மாற மாட்டேன் அல்லது என்னால் மாற்றிக் கொள்ள முடியாது என்ற அணுகுமுறையும், பலனைத் தராது. நமக்குள்ளே செலுத்தப்படும் எண்ணங்கள் சம நிலையில் இருக்க வேண்டும். இந்த எண்ணங்களில் மாற்றம் இருக்கிறது என்றால், அதற்குக் காரணம், மேற்குறிப்பிட்ட குழப்படியான அணுகுமுறைதான்.

எதிர்மறை எண்ணங்கள் ஏற்பட அனுமதித்தால், நம்பிக்கைகளும் அதே ரீதியில்தான் இருக்கும். இவ்வகையான எண்ணங்களை கண்டறிவது மிகவும் முக்கியம். நாம் இருக்கும் சுற்றுப்புறத்தில் கெட்ட வாடை வருகிறது என்றால், அந்த வாசனையை, அதை அறிந்து உணர்த்தும் மூக்கை குறை சொல்வதால் எந்தப் பலனும் இல்லை. அதற்கான காரணத்தை தேடிக் கண்டுபிடித்து, அதை அப்புறப்படுத்த வேண்டும். அது போலத்தான், அணுகுமுறைகளில், செயல்களில் அவநம்பிக்கை, சோர்வு, சலிப்பு ஆகியவை வெளிப்பட்டால், இவற்றைக் குறித்து அலுத்துக் கொள்வதால் பலனில்லை. இவற்றை உருவாக்கிய எதிர்மறை எண்ணங்கள் மற்றும் பதிவுகள் ஆகியவற்றை அடையாளம் கண்டு, அவற்றை நீக்க வேண்டும். இதை எப்படிச் செய்வது?

0

Share/Bookmark

தொழிலாளர்கள் பற்றி கார்ல் மார்க்ஸ்

$
0
0

 

Karl-Marxதொழிலாளர்களின் இன்றைய நிலை என்ன? முன்பைவிட இப்போது அவர்களுடைய வாழ்நிலை உயர்ந்திருக்கிறதா? அவர்களுடைய பிரச்னைகள் குறைந்திருக்கின்றனவா? பணிச்சூழலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? இல்லையெனில் அவர்கள் என்ன செய்யவேண்டும்? ‘போராடவேண்டும்’ என்று பலரும் சொல்கிறார்கள். உண்மைதான். ஆனால் யாரை எதிர்த்து? எதை வேண்டி? எந்த லட்சியத்துடன்?

முதலில், தொழிலாளர்கள் எதற்காகப் போராடவேண்டும்? முதலாளிகள் அனுபவிக்கும் சுகங்களையும் செல்வத்தையும் தாம் அடையவேண்டும் என்பதற்காகவா? உல்லாசமான கேளிக்கையான வாழ்வைப் பெறுவதற்காகவா? அல்ல என்கிறார் கார்ல் மார்க்ஸ். ’வர்க்கத் தனி உரிமைகளுக்கும் ஏகபோகங்களுக்கும் நடைபெறும் போராட்டம்’ அல்ல இது. ‘சமத்துவமான உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் எல்லா வகையான வர்க்க ஆதிக்கத்தை ஒழிப்பதற்கும் நடைபெறுகின்ற போராட்டமே’  தொழிலாளர்கள் மேற்கொள்ளவேண்டிய போராட்டமாகும்.

அதற்கு முன்னால், ஒரு தொழிலாளர் தாம் ஒடுக்கப்படுகிறோம் என்பதை உணர்வுபூர்வமாக உணரவேண்டும் அல்லவா? அதற்கு, தன்னுடைய நிலை என்ன என்பதை ஒரு தொழிலாளர் புரிந்துகொள்ளவேண்டும். எது அடிமைத்தனம்? ‘உழைப்புச் சாதனங்களை அதாவது வாழ்க்கையின் ஆதாரங்களை ஏகபோகமாக வைத்திருப்பவரிடம் உழைக்கும் மனிதன் பொருளாதார ரீதியில் கீழ்ப்பட்டிருப்பது.’ சமூகத் துன்பத்துக்கும் அறியாமைக்கும் அரசியல் அடிமைத்தனத்துக்கும் அடியில் இருப்பது இதுவே என்கிறார்.

எனவே, தொழிலாளர்களின் பிரச்னை என்பது குறிப்பிட்டதொரு பிரதேசத்தின் பிரச்னையல்ல. இது உலகம் தழுவிய சமூகப் பிரச்னை. அந்த வகையில், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர் பிரிவு பிற நாடுகளில் உள்ள தொழிலாளர் பிரிவினருடன் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். தொழிலாளர் வர்க்கத்தினரிடையே சகோதரப் பிணைப்பு இருந்தால் மட்டுமே அடிமைத்தனத்துக்கு எதிராகப் போரிடுவது சாத்தியமாகும் என்கிறார் மார்க்ஸ். அதே சமயம் இவ்வாறு தொழிலாளர்கள் ஒன்றுபடுவது இதுவரை சாத்தியமாகாமல் இருப்பதற்குக் காரணம் தொழிலாளர்களேதான்; அவர்களிடைய ஒன்றுமை இல்லாததுதான் என்றும் சொல்கிறார் மார்க்ஸ்.

இந்தச் சவாலை எதிர்கொள்ள சர்சதேசத் தொழிலாளர் சங்கத்துக்குச் சில விதிமுறைகளை மார்க்ஸ் உருவாக்கினார். 1871ம் ஆண்டு ஆங்கில மொழியில் வெளிவந்த அந்தப் பிரசுரத்தில் காணப்படும் சில முக்கிய அம்சங்கள் கீழே.

  • பிரசுரத்தின் தொடக்க வாசகங்கள். ‘இதில் சேர்கின்ற எல்லாச் சங்கங்களும் மற்றும் தனி நபர்களும் தங்களுக்கிடையேயும் எல்லா மனிதர்களுக்கு இடையிலும் நிறம், மதம், தேசிய இன வேறுபாடுகளைக் கடந்து உண்மை, நீதி, அறநெறி ஆகியவற்றைத் தம் நடத்தையின் அடிப்படையாகக் கொள்வர்.’
  • கடமைகள் இல்லாமல் உரிமைகள் இல்லை. உரிமைகள் இல்லாமல் கடமைகள் இல்லை.
  • தொழிலாளர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அடிப்படையில் அவர்களுடைய லட்சியம் ஒன்றாக இருக்கவேண்டும். தொழிலாளி வர்க்கங்களின் பாதுகாப்பு, முன்னேற்றம் மற்றும் பரிபூரண விடுதலை.
  • ஒரு தொழிலாளர் மற்ற பிரதேசங்களிலும் மற்ற நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களைப் பற்றியும் அவர்களுடைய பிரச்னைகள் பற்றியும் தெரிந்து வைத்திருக்கவேண்டும். அதற்குச் சர்வதேசச் சங்கம் உதவிட வேண்டும்.
  • தொழிலாளர்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.  இந்த ஆய்வறிக்கைகளை வைத்துக்கொண்டு தொழிலாளர்களுடன் சங்கம் உரையாடவேண்டும். பொதுநலன் சார்ந்த பிரச்னைகளை அனைவரும் விவாதிக்கவேண்டும்.
  • சங்கத்தின் கிளைகள் ஒன்றிணைந்து ஒரு சர்வதேச அமைப்பாக ஒரே சமயத்தில் ஒரே மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
  • ‘சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் கோட்பாடுகளை அங்கீகரித்து, அவற்றைக் காத்து நிற்கும் ஒவ்வொருவரும் இதன் உறுப்பினராகத் தகுதியுடையவர். ஒவ்வொரு கிளையும் அது சேர்த்துக்கொள்ளும் உறுப்பினர்களுடைய நேர்மைக்குப் பொறுப்புடையதாகும்.’
  • ‘சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் ஒவ்வொரு உருப்பினரும் தன் குடியிருப்பை ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு மாற்றிக் கொள்ளும்பொழுது அங்கேயுள்ள இணைக்கப்பட்ட சங்கத் தொழிலாளர்களுடைய சகோதர ஆதரவைப் பெறுவர்.’

தொழிற்சங்கங்களின் நோக்கம் என்னவாக இருக்கவேண்டும் என்பதை மார்க்ஸ் வேறோரிடத்தில் குறிப்பிடுகிறார்.

  • தொழிலாளி வர்க்கத்தின் முழுமையான விடுதலையை மாபெரும் நோக்கமாகக் கொள்ளவேண்டும்.
  • தொழிலாளி வர்க்கத்தைத் திரட்டும் அமைப்பாகவும் உணர்வுடன் செயலாற்றும் மையமாகவும் திகழவேண்டும்.
  • இந்தத் திசையில் செல்ல விரும்பும் ஒவ்வொரு சமூக, அரசியல் இயக்கத்துக்கும் உதவிட வேண்டும்.
  • ‘அனைத்து தொழிலாளர் வர்க்கத்தின் ஆதரவாளர்களாகவும் பிரதிநிதிகளாகவும் தம்மைக் கருதி அவ்விதமாகச் செயலாற்றும்பொழுது அவை, சங்கத்தில் இல்லாத தொழிலாளர்களைத் தங்கள் அணிகளில் சேர்க்குமாறு செய்யவேண்டும்.’
  • ‘மிகவும் மோசமான கூலி கொடுக்கப்படுகின்ற தொழில்களை, உதாரணமாக, பாதகமான நிலைமைகளின் காரணமாக சக்தியில்லாதவர்களாக இருக்கும் விவசாயத் தொழிலாளர்களுடைய நலன்களுக்காக தொழிற்சங்கம் அதிகமான கவனத்துடன் பாடுபடவேண்டும்.’
  • ‘தொழிற்சங்கங்களின் போராட்டங்கள் குறுகிய நோக்குடையவையோ அல்லது சுயநலமானவையோ அல்ல, கீழே மிதிக்கப்பட்டுக் கிடக்கும் கோடிக்கணக்கான மக்களின் விடுதலையே அவற்றின் நோக்கம் என்பதை உலகத்தினர் நம்புகின்ற வகையில் அவை நடந்துகொள்ளவேண்டும்.’

 

தொழிலாளர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்களையும் தொழிற்சங்கங்கள் கற்கவேண்டிய விஷயங்களையும் மார்க்ஸ் மீண்டும் மீண்டும் பல இடங்களில் பட்டியலிடுகிறார். ஓர் அமைப்பாக தொழிலாளர்கள் திரளவேண்டிய அவசியத்தையும் அவர் தொடர்ச்சியாக வலியுறுத்துகிறார். ’தொழிலாளி வர்க்கத்தினரின் விடுதலையைத் தொழிலாளி வர்க்கத்தினரே வென்றெடுத்துக்கொள்ளவேண்டும். ‘ என்கிறார்.

இன்றைய உலகமயமாக்கல் சூழலில் ஒரு நாட்டின் தொழிலாளர் பிரிவுக்கு இன்னொரு நாட்டின் தொழிலாளர் பிரிவினரே தொழில்முறைப் போட்டியாளராக உருவாகியிருப்பதை நாம் காண்கிறோம். இது பற்றிய மார்க்ஸின் விவாதங்கள் முக்கியமானவை. சர்வதேச ரீதியில் தொழிலாளர்கள் ஒரு வர்க்கமாகத் திரளவேண்டும் என்று மார்க்ஸ் சொன்னது ஏன் என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். அது பற்றிய அவருடைய விவாதங்களை  தேடிப்படித்து வாசிப்பதோடு அவற்றைத் தொழிலாளர்களிடமும் கொண்டு சென்று சேர்ப்பிக்கவேண்டும்.

ஒன்று நிச்சயம். தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக்காட்டிலும் சிக்கலானவை அல்ல மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் சிந்தனைகள். எனவே இந்த மே தினத்தை அவர்களுடைய படைப்புகளை வாசிப்பதன்மூலம் தொடங்குவோம். நம் உலகையும் சக மனிதர்களையும் புரிந்துகொள்ள இதைக் காட்டிலும் பொருத்தமான வேறு வழிமுறை இல்லை.

மேலதிகம் வாசிக்க :

  1. சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் பொது விதிமுறைகள், கார்ல் மார்க்ஸ், மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள், தொகுதி 5. முன்னேற்றப் பதிப்பகம்
  2. தற்காலிய மத்தியக் கவுன்சிலின் பிரதிநிதிகளுக்கு சில பிரச்னைகளைப் பற்றிய ஆணைகள், கார்ல் மார்க்ஸ், மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள், தொகுதி 5. முன்னேற்றப் பதிப்பகம்

Share/Bookmark

தேரோடும் வீதி

$
0
0

ஒரு கனவின் வரைபடம் / அத்தியாயம் 3

kalaiyarநிகழ் திரைப்பட இயக்கத்தின் சார்பில் நெல்லையில் நடைபெற்ற திரைப்பட விழா ஒருவழியாக நடந்து முடிந்தது. ஜே, லைட்டரால் குத்துவிளக்கை ஏற்றிவைத்ததில் இருந்தே களைகட்டத் தொடங்கிய விழா அதிக சேதாரம் இல்லாமல் முடிந்ததில் வழக்கம் போலவே காவல்துறையின் பங்கு கணிசமானது. தோழர் பாரதி மார்க்ஸ், கூட்டங்களில் கலகம் செய்யும் நபர்களை மேடையில் ஏற்றிவிட்டதன் மூலம் விழா சுமுகமாக நடக்க வழி ஏற்படுத்தியிருந்தார். என்றாலும் அவரால் அவ்வளவுமட்டும்தானே முடியும். இந்த விழாவிலும், ஆதலினால் காதல் செய்வீர் (பை லைன் :  உலகக் காதலர்களே… ஒன்று சேருங்கள்) திரையிடப்படமுடியாமல் போனது. விழாபற்றிய விளம்பரங்களில் அந்தப் படம் திரையிடப்போவதாக அறிவித்திருந்தபோதிலும் இருந்த ஒரே படச்சுருளைக் கொண்டுவரவே இல்லை என்றுதான் நினைக்கிறேன். திரையிடப்படும் படங்களைவிட மக்களின் கண்ணிலேயே காட்டப்படாத அந்தப் படம் அதிக கவனத்தை ஈர்த்துவருவது இனியும் நல்லதல்ல.

உண்மையில் அந்தப்படம் ஆரோக்கியமான ஒரு சமூகத்தில் நல்லமுறையில் எதிர்கொள்ளப்படவேண்டிய ஒன்றுதான். இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ, மார்க்ஸிய அமைப்புகள் என எல்லாமும் சேர்ந்து அந்தப் படத்தை எதிர்ப்பதில் இருந்து ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளமுடியும்: எந்த நாயாக இருந்தாலும் வெறி பிடித்தால் கடிக்கத்தான் செய்யும். சரி, நாம் விழாவில் திரையிடப்பட்ட படங்கள் பற்றிப் பார்ப்போம்.

முதலாவது படம் தேரோடும் திருவீதி.

ஒரு தேரோட்டத்தில், சிற்பி தேர்க்காலில் சிக்கி இறந்துவிடுகிறார். அது விபத்தா… கொலையா என்பது பற்றி மூன்று வெர்ஷன்கள் சொல்லப்படுகின்றன.

முதலாவதாக, அந்தத் தேரைச் செய்யச்சொன்ன மன்னரின் பார்வையில் இருந்து கதை சொல்லப்படுகிறது. தேர் செய்ய ஆரம்பிக்கும்போது பிள்ளையார் சிலையின் தும்பிக்கை உடைந்துபோய்விடுகிறது. அது அபசகுனம் என்பதால் சிற்பி, ஜோதிடரை அழைத்து விஷயத்தைச் சொல்கிறார். அவர் கிரஹ நிலைகளை ஆராய்ந்து பார்த்துவிட்டு தேரோட்டத்தின்போது யார் மன்னராக இருப்பாரோ அவருடைய உயிருக்கு ஆபத்து என்று சொல்கிறார். மன்னருக்கு இந்த விஷயத்தைச் சொன்னால் தேர் செய்வதை நிறுத்திவிடுவார் என்பதால், சிற்பி சொல்லாமல் மறைத்துவிடுகிறார். கிட்டத்தட்ட தேர் பணிகள் முடிவடையும் தருணம் வருகிறது. தேரோட்டத்துக்கான நாளும் குறிக்கப்படுகிறது. அப்போது மன்னருக்கு எப்படியோ உண்மை தெரிந்துவிடுகிறது.

தேரோட்டத்தை நிறுத்தவும் முடியாது. அதே நேரத்தில் உயிரைப் பணயம் வைக்கவும் முடியாது. சிற்பியின் செயலால் கோபம் கொண்ட மன்னர் என்ன செய்வது என்று யோசிக்கிறார். மந்திரி ஒரு யோசனை சொல்கிறார். தேரோட்டத்தன்று சிற்பியையே மன்னராக நியமித்துவிடுங்கள். சகுனம் பலிக்குமென்றால் சிற்பியின் உயிர்தானே போகும். நீங்கள் தப்பிவிடலாம் என்று சொல்கிறார். அதன்படி, ”உலகிலேயே மிக அபாரமான தேரைச் செய்திருக்கிறார். அதைப் பாராட்டும்வகையில் சிற்பியைத் தேரோட்டத்தின்போது  மன்னராக நியமிக்கிறேன்’ என்று மன்னர் அறிவிக்கிறார். சிற்பியால் எதுவும் சொல்ல முடியவில்லை.

தேரோட்ட நாளும் வருகிறது. பரிவட்டம் கட்டி, தேரை மூன்று முறை வலம் வந்து சிற்பி துண்டை அசைத்து தேரோட்டத்தை ஆரம்பிக்கிறார். தேர் மூன்று தெருக்களைச் சுற்றி முடிக்கிறது. நான்காவது தெருவின் வழியாக வரும்போது தேரின் மேல் விதானத்தில் இருந்த கூர்மையான அலங்கார விளக்கு அறுந்து கீழே நின்றுகொண்டிருக்கும் சிற்பியின் தலைமீது விழுகிறது. சிற்பி ரத்த வெள்ளத்தில் மிதக்கிறார். போதாத குறையாக கீழே விழுந்த அவர் மீது தேரின் சக்கரங்கள் ஏறிவிடுகின்றன. தனக்கு துரோகம் இழைத்தவனை தெய்வமே தண்டித்துவிட்டது என்று மன்னர் மந்திரியிடம் சொல்கிறார். மந்திரியும் அர்த்தபுஷ்டியுடன் சிரிக்கிறார்.

இது முதல் வெர்ஷன். இரண்டாவது வெர்ஷனைச் சிற்பியின் காதலி சொல்கிறார்.

தனது காதலனின் மரணம் ஒரு தியாகம் என்கிறார். அதாவது அந்த நாட்டு மன்னர் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் ஒரு கோயிலுக்குப் புதிய தேர் செய்துதர முன்வருகிறார். சிற்பி தேர் செதுக்க ஆரம்பிப்பதற்கு முன்பாக, விநாயகர் சிலை ஒன்றைச் செதுக்குகிறார். எதிர்பாராதவிதமாக அந்தச் சிலையின் தும்பிக்கை உடைந்துவிடுகிறது. அதை அபசகுனமாகக் கருதும் சிற்பி, ஜோதிடர் ஒருவரை அழைத்து விஷயத்தைச் சொல்கிறார். அவரும் சோழிகளை உருட்டிப் பலன் பார்க்கிறார். தேரோட்டத்தின் போது யார் அரசராக இருப்பாரோ அவர் உயிர் துறக்க நேரிடும் என்று தெரியவருகிறது.

மன்னரிடம் சொன்னால், தன் உயிர் போனாலும் பரவாயில்லை தேர் பணிகளை நிறுத்தக்கூடாது என்று சொல்லிவிடுவார். சகுனத்தை அலட்சியப்படுத்தவும் தைரியமில்லை. மன்னரையும் காப்பாற்ற வேண்டும். தேரோட்டமும் நடக்க வேண்டும். என்ன செய்ய என்று தவிக்கிறார். ஜோதிடர் ஒரு வழி சொல்கிறார். அதாவது, தேரோட்டத்தன்று மட்டும் வேறு யாராவது ஒருவரை மன்னராக ஆக்குவது; அதன் மறுநாள் மன்னரே ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்வது என்று ஒரு வழி சொல்கிறார். தன் உயிர் போனாலும் பரவாயில்லை. மன்னரின் உயிரைக் காப்பாற்ற வேண்டும். தேரோட்டமும் நடக்கவேண்டும் என்று சிற்பி தேரோட்ட தினத்தன்று தானே மன்னராக இருப்பது என்று முடிவெடுக்கிறார். இப்போதும் மன்னரிடம் சொன்னால் சிற்பி தன் உயிரைப் பணையம் வைப்பதை மன்னர் ஏற்றுக்கொள்ளமாட்டார். எனவே நேரம் பார்த்து சொல்லிக் கொள்கிறேனென்று சிற்பி சொல்லிவிடுவார்.

நாட்கள் உருண்டோடுகின்றன. தேர் செய்து முடிக்கப்படுகிறது. தேரோட்ட நாளும் நிச்சயிக்கப்படுகிறது. மிகச் சிறப்பாக தேரைச் செய்த சிற்பியைப் பார்த்து மன்னர் சந்தோஷத்தில் உமக்கு என்ன வரம் வேண்டுமோ கேளுங்கள். தருகிறேன் என்கிறார். சிற்பியும் தேரோட்ட நாளன்று நான் மன்னராக இருக்க வேண்டும் என்று கேட்கிறார். முதலில் தயங்கும் மன்னர் பிறகு சந்தோஷத்துடன் சம்மதிக்கிறார்.

தேரோட்ட நாளும் வருகிறது. பரிவட்டம் கட்டி, தேரை மூன்று முறை வலம் வந்து சிற்பி துண்டை அசைத்து தேரோட்டத்தை ஆரம்பிக்கிறார். தேர் மூன்று தெருக்களைச் சுற்றி முடிக்கிறது. நான்காவது தெருவின் வழியாக வரும்போது தேரின் மேல் விதானத்தில் இருந்த கூர்மையான அலங்கார விளக்கு அறுந்து கீழே நின்றுகொண்டிருக்கும் சிற்பியின் தலை மீது விழுகிறது. சிற்பி ரத்த வெள்ளத்தில் மிதக்கிறார். போதாத குறையாக கீழே விழுந்த அவர் மீது தேரின் சக்கரங்கள் ஏறிவிடுகின்றன. சிற்பியைச் சிகிச்சைக்குத் தூக்கிச் செல்கிறார்கள். அப்போது சிற்பி நடந்ததைச் சொல்கிறார். விநாயகர் சிலை உடைந்ததையும் தேரோட்டத்தின்போது மன்னரின் உயிருக்கு ஆபத்து என்று தெரியவந்ததால் தன் உயிரைக் கொடுத்து மன்னரைக் காப்பாற்றியதாக சிற்பி சொல்லிவிட்டு உயிர் துறக்கிறார்.

இது இரண்டாம் வெர்ஷன்.

மூன்றாம் வெர்ஷன் சிற்பியால் சொல்லப்படுகிறது. தேருக்கான வரைபடத்தை சிற்பி உருவாக்கிக் கொடுக்கிறார். அதன் கம்பீரத்தையும் அழகையும் பார்த்து மன்னர் வியக்கிறார். அதே நேரத்தில் இதுபோல் வேறு எங்கும் ஒரு தேரை சிற்பி செய்துவிடக்கூடாது என்ற கெட்ட எண்ணமும் அவர் மனதுக்குள் வருகிறது. தேர் செய்து முடித்ததும் சிற்பியைக் கொன்றுவிட வேண்டும் என்று மன்னர் திட்டமிடுகிறார். இது சிற்பிக்குத் தெரியவருகிறது. ஒருவகையில் அந்த சிற்பியும் அரச பட்டத்துக்கு தகுதி உடையவரே. அவருடைய தாய் பட்டத்து மகிஷி இல்லை என்பதால் அந்த ஆட்சிப் பொறுப்பு அவருக்கு கிடைக்காமல் போகிறது. இந்நிலையில் எதிரி நாட்டு மன்னன் சிற்பியை சந்தித்துப் பேசுகிறான். என் படையை அனுப்பி நீ ஆட்சிக்கு வர நான் உதவுகிறேன் என்று சொல்கிறார். சிற்பியோ தன் பொருட்டு மக்கள் சாகவேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். அதேநேரத்தில் மன்னரைக் கொல்லாவிட்டால் தன்னைக் கொன்றுவிடுவாரே என்று பயப்படவும் செய்கிறார். ஆக, மன்னருடன் போருக்குப் போனால் மக்கள் இறப்பார்கள். இல்லையென்றால் தன் மரணம் உறுதி. இந்த இக்கட்டில் இருந்து எப்படித் தப்பிக்க என்று யோசிக்கிறார். மன்னரோ சிற்பியை எப்படி ரகசியமாகக் கொல்ல என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் விநாயகர் சிலையின் தும்பிக்கை உடைந்து போகிறது. தேரோட்டத்தன்று மன்னராக இருப்பவர் இறந்துபோவார் என்று ஜோதிடர் சொல்கிறார். இதைச் சாக்காக வைத்து மன்னரும் சிற்பியும் தனித்தனியாக ஒருவரை ஒருவர் கொல்ல சதித்திட்டம் தீட்டுகிறார்கள். மன்னர் சிற்பியைத் தற்காலிக மன்னராக ஆக்க முன்வருகிறார். அடுத்ததாக ஆட்சியைப் பிடிக்க அது உதவும் என்று சிற்பியும் அதற்கு சம்மதிக்கிறார். தேரோட்டத்தின்போது சிற்பியைக் கீழே விழ வைத்து தேர் சக்கரத்தில் சிக்கவைத்துக் கொன்றுவிடலாம் என்று மன்னர் தீர்மானிக்கிறார். தேரின் மேல் விதானத்தில் இருக்கும் அலங்கார விளக்கு மன்னரின் மேல் விழுந்து அவரைக் கொல்லும்வகையில் சிற்பி வடிவமைக்கிறார்.

சிற்பியின் காதலி இந்த ரகசியத்திட்டத்தில் முக்கிய ஆலோசகராக இருக்கிறார். ஆனால் கடைசியில் மன்னரின் பக்கம் சாய்ந்து, அவருக்கு விரிக்கும் வலையில் சிற்பியைத் தந்திரமாகச் சிக்கவைத்துக் கொன்றுவிடுகிறாள்.

அப்படியாக சிற்பியின் மரணத்துக்கு மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. மன்னர் தான்தான் கொல்ல நினைத்திருந்ததாகவும் விபத்தில் அவர் இறந்துவிட்டதாகவும் சொல்கிறார். காதலி சிற்பியின் தியாகம் என்கிறாள். சிற்பியோ காதலியின் சதியால் கொல்லப்பட்டதாகச் சொல்கிறார்.

kalai 2ஜே எதற்காக இப்படி ஒரு சிக்கலான திரைக்கதையை வடிவமைத்தார் என்று தெரியவில்லை. உண்மையில் காளையார் கோவில் தேரை மையமாகக் கொண்ட கதை இது. அது ஒரு சரித்திர நிகழ்வு. மன்னரின் உயிரைக் காப்பாற்ற சிற்பி தன் உயிரைத் தியாகம் செய்தார் என்பதுதான் இன்றும் நம்பப்படும் வரலாறாக இருக்கிறது. இந்த இடத்தில் வரலாற்றை மறு வாசிப்பு செய்தல் என்ற கோணத்தில் இன்னொரு வெர்ஷனை யூகிக்க இடமிருக்கிறது. மருது வந்தாலும் தேரோடாது… அவன் மச்சினன் வந்தாலும் ஓடாது; தேருக்குடையவன் குப்பமுத்து ஆசாரி தேர்வடம் தொட்டால்தான் தேர் ஓடும் என்ற வரிகள் நாட்டுப்புறப்பாடலில் இருக்கின்றன. இதிலிருந்து மன்னருக்கும் சிற்பிக்கும் இடையில் ஏதோவொரு காரணத்தை முன்னிட்டு சண்டை ஏற்பட்டிருக்கிறது என்பது தெரியவருகிறது. மன்னர் சிற்பியைத் தந்திரமாகக் கொன்றுவிட்டிருக்கிறார். அதை மறைப்பதற்காக சிற்பியே உயிரைத் தியாகம் செய்ததுபோல் ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார்கள் என்று யூகிக்க இடம் உண்டு.

இந்த இரண்டு நிகழ்வுகளை மட்டுமே மையமாக வைத்து திரைக்கதையை மாற்றி அமைத்திருந்தால் சரியாக இருக்கும். ஆனால், என்ன காரணத்தாலோ இங்கு ரொஷோமான்போல் உண்மையின் பன்முக சாத்தியக்கூறு என்ற வடிவத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். உண்மையில் இந்தக் கதைக்கு சரித்திரத்தை மறு வாசிப்பு செய்தல் என்ற பாணிதான் பொருத்தமாக இருக்கும்.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ஜே.

0

Share/Bookmark

லஞ்சம் வளர்த்தெடுக்கும் விதிமீறல்கள்

$
0
0

India-Tops-In-Bribery-List-Surveyசமீபத்தில், கோவை அவிநாசி சாலையில் ஒரு வணிக வளாகக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டு நான்கு பெண்கள் பலியான செய்தியை வாசித்திருப்பீர்கள். இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். விபத்து குறித்து புலனாய்வு ஒரு புறம் தொடங்கும் முன்னர், கட்டட வரைபட அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவசர கதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட நிர்வாகம் சில விதிமீறல்களைச் சுட்டிக்காட்டியுள்ளது. அனுமதிக்கு மேலாக இரண்டு தளங்கள் கட்டப்பட்டுள்ளன. அவசரகால வெளியேறும் வழி அமைக்கப்படவில்லை. தீயணைப்புச் சாதனங்கள் இல்லை.

சாதாரண நடுத்தர வர்க்க சாமானியன் ஒரு கட்டடம் கட்டத் தொடங்கினால் அல்லது வங்கிக் கடன் வாங்கப் புறப்பட்டால் அல்லது தன் கட்டடத்தில் ஒரு சிறு பகுதியை விரிவாக்கம் செய்ய முயன்றால் உடனே,  வார்டு உறுப்பினர், வருவாய் ஆய்வாளர் முதல் மின்வாரிய பொறியாளர் வரை மாறி மாறி வந்துவிடுவாரக்ள். வரைபட அனுமதி உள்ளதா, வரி திருத்தியமைக்கப்பட வேண்டாமா, மின் இணைப்பு பெற பத்திர நகல் கொடு, வீட்டு வரி ரசீது கொடு என கெடுபிடிகள் பெருகிவிடும்.  ”நாங்கள் இரண்டு, மூன்று பேர் சார், பார்த்து கவனிங்க”  என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படும்.

ஆனால் அதுவே கோடிக்கணக்கிலான திட்டம் எனில் உரியவர்களை உரிய முறையில் “கவனித்து”விட்டு வேலை தொடங்கப்படுவதால் விதிமீறல்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை. மலிவாகிப்போன மனித உயிர்கள் இழப்பு ஏற்பட்டவுடன் இது போன்ற விதி மீறல்கள் 3-4 நாட்கள் தலைப்பு செய்தியாகி பின்னர் மறந்து போகப்படுவது தொடர்கதையாகிறது.

சில மாதங்களுக்கு முன்பாக பள்ளி / கல்லூரி பேருந்து ஒன்றில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டவுடன் தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. ஒரு வாரம் பரபரப்பாக பேசப்பட்டது. அதோடு அந்த பிரச்னையை மறந்துவிட்டோம்.  பெரும்பாலான வாகனங்கள் உடனடியாக வர்ணம் பூசப்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சென்று காண்பித்து தகுதிச்சான்று பெறுவதற்கு சில (*)சலான் வெட்டுவதோடு அது மறந்து போகப்பட்டது. (சலான் – என்றால் கருவூல செலுத்துச்சீட்டு என எண்ணிக்கொள்ள வேண்டாம். அனைத்து வ.போ.அலுவலகத்திலும் கணிணிமூலம் அரசாங்கத்திற்கு ஒவ்வொரு மனுவுக்கும் கட்டணம் வசூலிக்கும் வழக்கம் வந்தாகிவிட்டது – பின்னர் இந்த சலான் என்பது? இன்றும் வ.போ.அ-களில் லஞ்சம் என்பதற்கு பயன்படுத்தப்படும் பரிபாஷை). விதிகள் நெருக்கிப்பிடிக்கப்படும் போது “கவனிப்பும்” அதிகரிக்கிறது.

பேருந்துகளில் எதிரில் வரும் வாகன ஓட்டியை கண்கூச வைக்கும் விதத்தில் 4 முகப்பு விளக்குகள் பயன்படுத்தக்கூடாது என்பது விதி. ஆனால் ஒரு வருடத்துக்கு ஒரு முறை தனியார் பேருந்துகள் தகுதி்சான்று புதுப்பிக்க (ஆர்டிஓ) வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வரும் போது மட்டும் பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு ஹெட் லைட்டை கழற்றி ஒரு தகடால் மறைத்து ஸ்குரூ போட்டு மூடிவிட்டு, ஆய்வு முடித்து தடத்தில் செல்லும் போது மீண்டும் பளீரென்ற லைட்டுகள் மாட்டப்பட்டுவிடும். இந்த இரண்டு மணி நேர நாடகத்துக்கு சற்று சலான் அதிகம் கொடுக்க வேண்டும்.

மதுரையில் சில தினங்களுக்கு முன்பாக ஷேர் ஆட்டோ ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். அன்று முதல் 3 தினங்கள் நகர் முழுவதும் ஷேர் ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றியதாக காவல்துறை, மோட்டார் வாகன ஆய்வாளர்கள்என வளைத்து, வளைத்து குற்றக் குறிப்பாணை, அபராதம் என்ற கெடுபிடிகள், ஆட்டோக்களின் பக்கவாட்டில் இந்த ஆட்டோவில்3 பேர்களுக்கு மேல் ஏற்றப்படமாட்டாது என பெயின்டினால் வாசகங்கள் என அமர்க்களப்பட்டது. 3 நாட்கள் கழிந்தவுடன், தினமும் வடக்கு, தெற்கு என ஒரு சரகத்துக்கு 3-4 ஆட்டோக்களை மட்டும் அபராதம் விதித்துக் கொள்கிறோம், மற்றபடி அதிக பயணிகளோடு செல்பவர்கள் அவ்வப்போது எங்களை ‘கவனித்து’ விடுங்கள் என்ற எழுதப்படாத உடன்பாட்டோடு அது மறந்து போகப்பட்டது.

தொடரும் விதிமீறல்களையும், அவை உடனுக்குடன் மறந்து போகப்படுவதையும் பார்க்கும் போது மிகுந்த அச்சம் ஏற்படுகிறது. லஞ்சம் வாங்குங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை. குறைந்தபட்சம், உயிருக்கு உலை வைக்கும் விவகாரங்களில் மட்டுமாவது நேர்மையாக இருக்கக்கூடாதா?

0

Share/Bookmark

மதுமிதா : சில குறிப்புகள்

$
0
0

girl-silhouette351 

மதுமிதாவின் ஹேண்ட் பேகிலிருந்த‌ வஸ்துக்கள்…

காலியான‌ மினி வெல்வெட் பௌச், கண்ணாடி, சீப்பு, ஹேர் பின், ஹேர் க்ளிப், ரப்பர் பேண்ட், சேஃப்டி பின், ஸ்டிக்கர் பொட்டு, ரோஸ் பௌடர், டியோட்ரண்ட், பெர்ஃப்யூம், லிப் கார்ட், சன்ஸ்க்ரீன் லோஷன், ஃபேஸ் க்ரீம், மாய்ஸ்ச்சரைசர், நெயில் பாலீஷ், ஐ லைனர், வெட் டிஷ்யூ, மௌத் ஃப்ரெஷ‌னர், ஸ்விஸ் சாக்லேட், சூயிங் கம், கந்தர் சஷ்டி கவசம், Hopeless (Colleen Hoover) பேப்பர்பேக், ஐஃபோன் 5, ஐசிஐசிஐ மாஸ்டர் ப்ளாட்டினம் டெபிட் கார்ட், ஹெடிஎப்சி விசா சிக்னேச்சர் க்ரெடிட் கார்ட், சில புதிய இந்திய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள், கிழிந்த‌ விஸ்வரூபம் பட பிவிஆர் டிக்கெட்கள் இரண்டு (10 பிப்ரவரி 2013), மணிப்பால் ஹாஸ்பிடல் கார்ட், பேண்ட் எய்ட், அனாசின், அவில், ஐபில் மாத்திரைக‌ள், பயன்படுத்தப்படாத சோஃபி சைட் வால்ஸ் சானிடரி நாப்கின், ஓர் ஆணின் வேர்வை கர்ச்சீஃப் மற்றும் காமசூத்ரா ப்ளெஷர் காண்டம்கள்.

~0~

மதுமிதாவுக்கு Orkutல் வந்திருந்த‌ Testimonialsலிருந்து…

Senthilnathan – Dec 02, 2011

நான் இதுவரைக்கும் நேர்ல பாத்ததிலயே சூப்பர் ஃபிகரு.

Vidhya S. – Apr 13, 2010

hmm. tym’s not enuf 2 describe tis wonderful frend- but lemme tel u wat it strikes 2 me now. madhu is a happy go lucky person. not much bothered bout nythg in life. kind, jovial, loving, caring, stupid.

 ~0~

மதுமிதாவின் Wardrobeலிருந்த‌ T-Shirtகளிலிருந்து…

Forbidden Fruits, Braille System, HTTP 403, Sample Specimen: Not For Sale, Catch Me If You Can, Click Here To Continue, Biological Inflation, Testers Wanted, Ripen Mangoes, This Is Not Touch-Me-Not.

 ~0~

மதுமிதாவின் ஐஃபோன் Bluetooth Received Filesலிருந்த ஃபோட்டோ…

(இது சென்ஸார் செய்யப்படுகிறது – ஆசிரியர்)

  ~0~

மதுமிதாவின் படுக்கையில் சிதறிக் கிடந்தவை…

11-inch Apple MacBook Air லேப்டாப், The Music Messiah (Ilayaraaja) டிவிடி, காமக்கடும்புனல் (மகுடேசுவரன்) கவிதைத் தொகுப்பு, கரீனா கபூர் படம் போட்ட ஃபிப்ரவரி 2013 VOGUE இதழ், இதய விடிவிலான சிவப்பு நிறத்திலான‌ குட்டி குஷன் தலையணை, கழற்றி எறியப்பட்ட‌ Wonderbra ப்ரேஸியர், Wacoal பேண்டீஸ், சால்வ் செய்யப்பட்ட‌ Rubik’s Cube, ஐஃபோன் சார்ஜர், குடித்து மீந்திருந்த மதுக்கோப்பை – அதில் கிடந்த ஒரு சிறிய‌…

  ~0~

 மதுமிதாவின் Apple MacBook Airலிருந்த‌ திரைப்படங்கள்

 Gangs of Wasseypur – 1 & 2, Inception, நந்தலாலா, The Isle, Love Sex Aur Dhokha, ஆரண்ய காண்டம், ரெட்ட்யூப் வலைதளத்திலிருந்து தரவிற‌க்கப்பட்ட சில பாலியல் படங்கள்.

   ~0~

மதுமிதாவின் ஐஃபோன் Messagesலிருந்து (Sent Items)…

Pappu

03-May-2012 21:09

sorry

 ~0~

மதுமிதாவின்  Yahoo! Messenger உரையாடலிலிருந்து…

———— IM 01 Jun 10:55 ————

Madhumitha : “யாரோ ஒருத்தன் தினம் மெசேஜ் அனுப்பி டார்ச்சர் பண்றான்டி, Idiot”

Saranya : “என்ன Lovable Idiot-ஆ? ;-)

Madhumitha : “ம். இல்ல‌. Sweet Bastard! :-)

Saranya : “அட, வெட்கத்தைப் பாருங்கடா!”

Madhumitha : “ச்சீய், போடி!”

  ~0~

மதுமிதாவுக்கு வந்திருந்த Birthday Cardலிருந்து…

 ம‌துமிதா எனப்படும் 17 வயது தேவதையே,

என் உயிர் குடிக்க‌ நிறைய மார்க்கமுண்டு.

ப்ளீஸ், உன் அழகை அதற்கு வீணாக்காதே!

Infinite more happy returns of the day and night ;-)

உந்தன் பப்பு,

Jul 21, 2012.

   ~0~

மதுமிதாவின் ரெக்கார்டட் Skype சம்பாஷணை ஒன்று…

 “டாடி தந்த‌ பர்த்டே கிஃப்ட் ஓர் அற்புதம். எத்தனை பணக்காரன் என்றாலும் இந்தப் பரிசு கொஞ்சம் ஜாஸ்தி. உடலின் பாகம் மாதிரி அதை எப்போதும் என்னுடனேயே வைத்துக் கொள்ள விரும்புகிறேன். Love you, dad. But பப்பு கார்ட் ஒரு riot. I am having my periods, now. முட்டி வலிக்கிறது. ஆனால் பப்பு மனசுக்கு சுகமாய் இருக்கிறான்.”

 ~0~

மதுமிதா Hopeless நாவலில் அடிக்கோடிட்டிருந்த வரி…

“That moment when your lips touched mine? You stole a piece of my heart that night”

 ~0~

மதுமிதாவின் Facebook தளத்திருந்து…

 Madhumitha Natarajan

August 13, 2012 at 12:09am via mobile ·

காதலில் விழுந்தேன்!

Unlike · Comment · Unfollow Post · Share · Promote

Baskaran Deivasikamani, காயத்ரி சேஷாத்ரி, Victor Antony and 723 others like this.

View all 1026 comments

Victor Antony Who is that lucky guy? Aug 19, 2012 at 2:55am • Like

பார்வதி யமுனா கடைசில நீயும் விழுந்துட்டியா? Aug 20, 2012 at 1:11am • Unlike

Madhumitha Natarajan விழாமலே இருக்க முடியுமா! Aug 20, 2012 at 1:30am via mobile • Like

Write a comment…

~0~

மதுமிதாவின் ஐஃபோன் Messagesலிருந்து (Inbox)…

Pappu

30-Sep-2012 11:27

movie at pvr

 

 ~0~

மதுமிதா blogger வலைப்பதிவிலிருந்து… 

மதுமிதா மனசிலே…

 சில்MISSION

 திரையரங்க மெல்லிருட்டின்

தித்திக்கும் சில்மிஷங்களில்

திட்டித் தீர்க்கின்றேனுன்னை –

அடுத்தடுத்த‌ கட்டங்களுக்கு

அழகாய் அனுமதித்தவாறே.

Posted by மதுமிதா On Sunday, October 06, 2012

 

~0~

மதுமிதாவின் 2012 Personal Diaryயிலிருந்து…

November 5, Monday

எதற்கு பயந்திருந்தேனோ அல்லது எதை விரும்பினேனோ அது நடந்தே விட்டது. பப்பு திருட்டுப் பயல் எப்படித் தான் காண்டம் பாக்கெட் தயாராய்க் கையில் வைத்திருந்தானோ, ஆச்சரியம்தான்! ஒருவகையில் என்னைப்போல் அவனும் இந்நிகழ்விற்கென‌ எப்போதும் தயாராகவே இருந்திருக்கிறான் எனத் தோன்றுகிறது. பழுத்த அனுபவமுள்ள ஒரு டூரிஸ்ட் கைட் தனக்கு மிகப் பரிச்சயமான ஊரினை அலட்சியமாகச் சுற்றிக் காட்டுவதைப் போலத் தான் பப்பு இன்று நடந்து கொண்டான்.

அந்த விசித்திர‌ப் பள்ளத்தாக்குகளுக்கு, அந்த மிக‌ அழகிய மலைமுகடுகளுக்கு எந்தப் பதட்டமில்லாமல் புன்னகையுடன் என்னைக் கை பிடித்தழைத்துச் சென்றான். ஒரே சமயத்தில் ஒரு ராட்சசனைப் போலவும் ஒரு குழந்தையைப் போலவும் மாறி மாறி என்னை ஆக்ரமித்தான். கிட்டதட்ட‌ சாகடித்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

இதன் ஞாபகமாய் பப்புவின் கர்ச்சீஃப்பை எடுத்து வந்து விட்டேன். அது எப்போதும் என்னோடு என் கைப்பையில் இருக்கும். இன்னமும் என் உடம்புக்குள் ஆங்காங்கே இனித்துக் கொண்டிருக்கிறான் ராஸ்கல். கொஞ்சம் வெட்கமாய்க் கூட‌ இருக்கிறது.

எல்லாம் முடிந்து இதை எழுதிக் கொண்டிருக்கும் இக்கணம் மிகச் சந்தோஷமாக உணர்கிறேன். காரணமேயில்லாமல் உப்புக்கண்ணீர் கன்னங்களில் பிசுபிசுக்கிறது.

Anyway, Virgin Mary turned into Bloody Mary, today. Let me celebrate it with a sip of Diva Vodka!

~0~

மதுமிதாவின் ஐஃபோன் Messagesலிருந்து (Draft)…

Shit, that’s not enough. I need you again and again, da.

 ~0~

மதுமிதாவின் blogger வலைப்பதிவின் draftலிருந்து…

மதுமிதா மனசிலே… · Post · காதல் காதல் காதல் · Publish · Save · Preview · Close

Compose | HTML

இந்த பப்பு ராட்சசன். மூன்றாம் முறைக்கு காண்டம் தீர்ந்து விட்டது. ஐபில் என்று ஏதோ ஒரு மாத்திரை இருக்கிறதாம், இன்று வாங்கி வ‌ருகிறேன் என்று சொல்லி இருக்கிறான். 36 மணி நேரத்துக்குள் போட்டுக் கொண்டால் எந்தப் பிரச்சனையும் இல்லையாம். இந்தப் பப்புவுக்கு எப்படித் தான் எல்லா விஷயமும் தெரிகிறதோ!

  ~0~

மதுமிதாவின் ஐஃபோன் Facetime உரையாடல் ஒன்று…

Pappu

15-Dec-2012 20:47

“அப்பாவிடம் சொல்லி விடப் போகிறேன்!”

“அதுக்கு என்ன அவசரம், அவசியம் இப்போ?”

“பொய் சொல்ல முடியல, பப்பு. சல்ஸா க்ளாஸ், ப்யானோ க்ளாஸ், ஜேஈஈ களாஸ் எல்லாம் கட் பண்றேன். ஃப்ரெண்ட்ஸ் கூட காஃபி டே, க்ரூப் ஸ்டடி, கெட்டுகெதர்னு அப்பாகிட்ட பொய் சொல்லிட்டு உன்கிட்ட வந்து படுத்துக்கறேன். And I really feel guilty.”

“:-(“

 ~0~

மதுமிதாவின் Gmail – Sent Itemsலிருந்து…

from   Madhumitha N. <madhumitha1995@gmail.com>

to    “Natarajan Muthuraman” <mail2natarajan@gmail.com>

date   Sat, Dec 22, 2012 at 11:28 PM

subject            Help me, daddy!

டியர் டாடி,

எல்லாவற்றையுமே உங்களுடன் நேரிலேயே பேசிப் பழக்கப்பட்ட எனக்கு இதை மட்டும் உங்கள் முகம் பார்த்துச் சொல்ல முடியவில்லை. பயமோ, தயக்கமோ, வெட்கமோ காரணம் என்று நான் சொன்னால் நீங்கள் வழக்கம் போல் வீடதிரச் சிரிப்பீர்கள் எனத்தெரியும். நான் முதன் முதலில் இருமியபடி புகைப்பிடித்ததும், மெலிதாக மதுவ‌ருந்தியதும் உங்களுடன் தான். அம்மா தவறிய பின் இத்தனை ஆண்டுகளில் நீங்கள் எப்போதும் என்னை மகள் என்று போலி மரியாதை காட்டித் தள்ளி வைத்துப் பார்த்ததாய் நினைவில்லை. நானும் அப்படியே – always your friend.

ஆனால் இவ்விஷயம் ச‌ற்று வேறு மாதிரியானது. இதிலெல்லாம் ஒரு முடிவெடுக்க எனக்கு புத்தி வந்து விட்டதா என உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இருக்கட்டும்.

நான் கேட்டதெல்லாம் வாங்கித் தந்தீர்கள் என்று சொன்னால் கூட அது உண்மை திரித்ததாகி விடும். எந்தப் பொருள் என்றாலும், எவ்வளவு விலை என்றாலும் நான் கேட்க நினைக்கும் முன்பே அது என் கைகளில் இருந்தே பழகி விட்டது. கடந்து என் பிறந்த நாளுக்கு நீங்கள் தந்த பிறந்த நாள் பரிசு ஒரு மிகச்சிறந்த உதாரணம்.

இப்போது நான் கேட்கவிருப்பது அதையெல்லாம் விட மதிப்பானது; விலை மதிப்பே இல்லாதது என்று சொல்வது தான் சரியாக இருக்கும் – அது உங்கள் கௌரவம்.

ஆம். கோடீஸ்வரரான உங்கள் மகள் எந்த வசதியும் இல்லாத, இப்போதைக்கு நிரந்தரமாக ஒரு வேலை கூட அற்ற ஓர் ஆசாமியைக் காதலிக்கிறாள் என்பது உங்களுக்கு நிச்சயம் அகௌரவம் தான். பப்பு என்ன ஜாதி என்பது கூட எனக்கு இன்று வரைக்கும் தெரியாது. அவனுக்கே தெரிந்திருக்குமா என்பதும் சந்தேகம் தான்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் எனக்குத் தெரியும். பப்பு திட்டமாய் நல்லவன் – உங்களை விட, என்னை விட‌. மற்றதெல்லாம் என் கண்ணுக்கு தெரியவில்லை. அவனைப் பார்த்துப் பேசினால் உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும். மயக்கி விடுவான்!

பதினெட்டு வயது கூட ஆகாத‌ எனக்கு என்ன அவசரம் என இப்போதும் உங்களுக்குத் தோன்றலாம். இதை உங்களிடமிருந்து மறைக்க மறைக்க அடிக்கடி பொய் சொல்ல வேண்டியிருக்கிறது; நிறைய கள்ளம் செய்ய‌ வேண்டியிருக்கிறது. எல்லாம் புதிதாய் இருக்கிறது. எனக்கே என்னைப் பிடிக்கவில்லை. அதையெல்லாம் நிறுத்த வேண்டும்.

இதைப் படித்துக்கொண்டிருக்கும் இக்கணம் உங்களுக்கு எத்தனை அதிர்ச்சியாக இருக்கும் என்பதைக் துல்லியமாக உணர்கிறேன். ஆனால் எனக்கு வேறு மார்க்கம் இல்லை. நீங்கள் ஒப்புக்கொண்டால் அதை இந்தப் புத்தாண்டுப் பரிசாகக் கொள்வேன்.

காத்திருக்கிறேன்.

Cheers,

மது

 ~0~

மதுமிதாவின் Twitter தளத்திருந்து…

மதுமிதா @madhumitha140                               Dec 31, 2012

பிடிக்காத கல்யாணத்தில் வாழ்வதை விட பிடித்த‌‌ காதலுக்காக சாகலாம்.‌

Expand

Sowmya @arattaigirl                                          Dec 31, 2012

குழந்தைகள் திரும்ப வாங்கி விடக்கூடிய பொருட்களையே போட்டு உடைக்கின்றன.. பெரியவர்களைப் போல மனங்களை அல்ல!

Retweeted by மதுமிதா

Expand

மதுமிதா @madhumitha140                               Dec 31, 2012

@writercsk பெத்த பொண்ண விட மத்ததெல்லாம் முக்கியமாப் போச்சா?

View conversation

மதுமிதா @madhumitha140                               Dec 31, 2012

Money, status, caste and blah-blah.. #love #fuck-off

Expand

 ~0~

மதுமிதாவின் Gtalk – Chat Historyயிலிருந்து…

from   பப்பு பப்பு <pappuinlove@gmail.com>

to    madhumitha1995@gmail.com

date   Fri, January 11, 2013 at 10:15 PM

subject            Chat with பப்பு பப்பு

பப்பு: மது

me: sollu pappu

பப்பு: என்ன ஆச்சு?

me: no change. still same. வேற மாப்பிள்ளை பாக்கறார்.

பப்பு: முடிவா என்ன சொல்றார்?

me: அவரு முருங்கை மர‌ வேதாளம்டா பப்பு.

பப்பு: so?

me: let us wait.

பப்பு: எவ்வளவு நாள்?

me: days, months or may be years too.

பப்பு: ஒத்துக்குவார்னு இன்னமும் நம்புறியா?

me: what to do, then?

பப்பு: சரி, விடு.

me: dai, chellam, kovama?

பப்பு: இல்ல‌.

me: இல்லன்னு சொல்றதுலயே கோவம் தெரியுதே.

பப்பு: கோபம் தான். ஆனா உன்னால என்ன பண்ண முடியும்?

me: true. am helpless. ஆனா hopeless இல்ல‌.

பப்பு: பாக்கலாம்

me: எதுவுமே முடியலைனா அதான் எப்பவுமே கையில வச்சிருக்கிறனே. அதை…

பப்பு: ச்சீ. என்ன எப்பப் பாத்தாலும் இதே பேச்சு. சரி, வெயிட் பண்ணலாம், மது.

me: I love you da, pappu.

பப்பு: ம்.

me: goodnight.

 ~0~

மதுமிதாவின் unofficial மரணவாக்குமூலத்திலிருந்து…

டியர் பப்பு,

இந்நாள் நமக்கு முதல் வேலண்டைன்ஸ் டே மட்டுமல்ல; கடைசியானதும் கூட‌!

இதை நீ படிக்கும் நேரத்தில் நிச்சயம் நான் உயிருடன் இருக்கப்போவதில்லை. நீ எண்ணிக் கொண்டிருந்தாயா தெரியாது – இக்கணம் நீ களைத்துறங்கக் காரணமான கலவி எண்ணிக்கையில் நூறாவது. இந்த நூறில் ஒவ்வொன்றையுமே தனித்தனியே அதனதன் பிரத்யேக அடையாளங்களுடன் எனக்கு நினைவு கூரவியலும். எப்போதும் வற்புறுத்தி அணியச் செய்யும் நானே இன்று காண்டம் வேண்டாம் என்று சொன்னது ஆச்சரியமாய் இருந்திருக்கலாம். அல்லது எப்போதுமே ‘அதற்கு’ மட்டும் மறுத்து விடுபவள் இன்று தானாக‌ முன் வந்ததும் விசித்திரமாகத் தோன்றியிருக்கலாம்.

கடிதம் மட்டுமல்ல, கலவி கூட இதுவே கடைசி. அணுஅணுவாய் அனுபவித்த இன்பத்துக்கெல்லாம் இறுதி நாள். ஆம். நான் செத்துக்கொண்டிருக்கிறேன். கொஞ்ச கொஞ்சமாய், ஆனால் வேக‌ வேகமாய். இன்று நீ களித்துக் கிடந்த என் தேகம் உண்மையில் அரைப்பிணம். வரும் போதே அதை விழுங்கி விட்டுத்தான் வந்தேன்.

எப்போதும் கைப்பையில் வைத்திருக்கும் என் அப்பா தந்த‌ பரிசே எனக்கு எமனாய் விடியும் என்று அவர் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார். தெரியும் போது மிக வருத்தப்படுவார். தலையிலடித்துக் கொண்டு தேம்பி அழுவார். அம்மா இறந்த போது அப்படித்தான் செய்தார் – எனக்குத் தெரிந்து அது தான் அவர் கடைசியாக அழுததும் கூட. ஒத்துக் கொண்டிருக்கலாமோ என்று கூட அப்போது யோசிப்பார். பாவமாய் இருக்கிறது. என்னை அவர் புரிந்து கொள்ளாதது போல் நானும் அவரை சரியாய்ப் புரிந்து கொள்ளாமலேயே மரித்துப் போவதற்காய் உச்சமாய் வருந்துகிறேன்.

ஆனால் இப்போது அப்பா நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார் என்பது எனக்குத் புரிந்து விட்டது. வீட்டில் இப்போதெல்லாம் நிறைய கண்டிஷன்கள். போகும் இடம் சொல்ல வேண்டும், திரும்பும் நேரம் சொல்ல வேண்டும். எட்செட்ரா எட்செட்ரா. இப்போது கூட ஏரோபிக்ஸ் க்ளாஸ் போவதாகப் பொய் சொல்லித் தான் வந்திருக்கிறேன். லேட்டாகி விட்டது. ஏற்கனவே ஆங்காங்கே தேட ஆரம்பித்திருப்பார்கள். தேடட்டும்.

அப்பா எனக்கு கல்யாணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கிறார். ஐரோப்பிய மாப்பிள்ளை. நிரம்பப் படித்திருக்கிறான். பெரிய வசதிக்காரன். பிஸ்னஸில் மகாபுத்திசாலி. அதை விட‌ முக்கியமாய் எங்கள் ஜாதிக்காரன். கொஞ்சம் நாள் போனால் எனக்கே அவனைப் பிடித்து விடுமோ என்று பயமாய் இருக்கிறது. நான் உனக்குக் கிடைக்கமாட்டேன் என்பது ஏமாற்றம் தான். ஆனால் துரோகத்தை விட ஏமாற்றம் தரும் வலி குறைவு தான். வேறொரு ஆணுடன் கலந்து நான் உனக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை.

என் அப்பாவிற்குப்பின் நீ தான் என் வாழ்க்கையில் முக்கியமான ஆசாமி. ஒரு கட்டத்தில் அவரை விடவும் நீ முக்கியமானவனாகத் தோன்றப் போய், இப்போது உயிரை விடுவது வரை வந்தாயிற்று. நினைத்தபடி வாழவியலாவிடில் வாழ்ந்தென்ன லாபம். ஓர் அரசியை போல் கம்பீரமாய் இறந்து போவதே சௌக்கியம், சௌகரியம்.

ஃப்ராஸ்டின் “Miles to go before I sleep” நினைவுக்கு வந்து சங்கடப் படுத்துகிறது. எத்தனை கனவுகள், எத்தனை ஆசைகள் எல்லாம் சற்று நேரத்தில் பூஜ்யமாகப் போகிற‌து. எல்லாவற்றிலுமே எனக்கு அவசரம் என்பார் அப்பா – இப்போது சாவிலும்.

உண்ட சங்கதி தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது, பப்பு. உன்னிடத்தில் உன் மடியில் தான் உயிரை விட வேண்டும் என்ற பாழாய்ப் போன செண்டிமெண்ட் தான் என்னை இங்கே இழுத்தது. இதையே எனது Dying Declaration ஆக‌ போலீஸில் சேர்ப்பித்து விடு – உயிரற்ற உடலையும். பின் உனக்கு ஒரு தொந்தரவும் வராது.

இன்னுமொரு உதவி. கடைசி ஆசை என்று கூட சொல்லலாம் – Autopsy முடிந்தபின் சாத்தியமான என் அத்தனை உடற்பாகங்களையும் தானம் செய்ய விரும்புகிறேன்.

ஐ லவ் யூ டா, பப்பு. See you சொல்ல முடியாது; அதனால் Bye மட்டும்.

Cheers,

மது.

14/02/2013

 ~0~

 தினத்தந்தி (பெங்களூர் பதிப்பு, 15-02-2013) நாளிதழிலிருந்து…

அனாதைப் பெண் பிணம் – மர்ம நபர் வெறிச்செயல்

போலீஸ் தீவிர விசாரணை

பெங்களூர், ஃபிப்.14–

ஈஜிபுரா அருகே இன்னர் ரிங் ரோடை ஓட்டியிருக்கும் ஆர்மிக்கு சொந்தமான காட்டுப் பகுதியில் நேற்று அடையாளம் தெரியாத 18வயது மதிக்கத்தக்க பெண் பிணம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. மிகக்கொடூரமான நிலையில் வயிறு கிழித்து கொலை செய்து அடையாளம் காண முடியாத அளவில் முகம் சிதைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோரமங்களா இன்ஸ்பெக்டர் ப‌சவப்பா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

 ~0~

மதுமிதாவின் Post-Mortem Reportலிருந்து…

“கூர்மையான துருவேறிய ஆயுதத்தினால் (உதா: பேனாக்கத்தி‌) வயிற்றுப் பகுதி 3 இஞ்ச் ஆழத்துக்கு கிழிக்கப்பட்டு, பெருங்குடல் முழுக்க சேதாரமான‌தால் உடனடி மரணம். தவிர உணவுக்குழாய்ப்பாதை முழுக்கவும் ஆழமான‌ சிறுசிறு கீறல்கள்.”

  ~0~

மதுமிதாவின் அப்பா நடராஜனின் வாக்குமூலத்திலிருந்து…

“அந்த காலியான‌ மினி வெல்வெட் பௌச்சில் இருந்திருந்தவை பிறந்தநாள் பரிசாக நான் கொடுத்த ரூ. நூறு கோடி மதிப்புள்ள பதினேழு தென்னாப்பிரிக்க‌ வைரங்கள்!”

  ~0~

 (மதுமிதா கொலை வழக்கின் போலீஸ் விசாரணைக் குறிப்புகளிலிருந்து)

girl-silhouette351

Share/Bookmark

ஸ்பார்டகஸ் : நான் யாருக்கும் அடிமையில்லை!

$
0
0

புரட்சி / அத்தியாயம் 2

spartacusவிக்டோரியன் காலத்து இங்கிலாத்தில் ‘கன்ஃபஷன்ஸ்’ என்னும் பெயரில் சுருக்கமான வினா விடைகளைத் தயாரித்து தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் வழக்கம் மக்களிடையே பிரபலமாக இருந்தது. பிடித்த நிறம், பிடிக்காத விஷயம், பிடித்த தொழில், பிடிக்காத செயல் போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு ஓரிரு வார்த்தைகளில் பதிலளிக்கவேண்டும் என்பது நியதி. 1865ல் கார்ல் மார்க்ஸும் இப்படிச் சில கேள்விகளுக்கு பதிலளித்தார். அதிலொரு கேள்வி : உங்கள் கதாநாயகன் யார்? ஸ்பார்டகஸ் என்று பதிலளித்தார் கார்ல் மார்க்ஸ். (அவர் முன்னிறுத்திய மற்றொருவர், ஜெர்மானிய வானவியல் அறிஞர் ஜொஹனஸ் கெப்ளர்). உங்களைப் பொருத்தவரை மகிழ்ச்சி என்பது என்ன என்னும் கேள்விக்கு மார்க்ஸ் ஒரே வார்த்தையில் பதிலளித்தார். போராட்டம்.

ஸ்பார்டகஸ் (பொது யுகத்துக்கு முன்பு 109-71) பற்றி மிகக் குறைவான வரலாற்றுப் பதிவுகளே காணக்கிடைக்கின்றன. அவ்வாறு கிடைத்திருக்கும் பதிவுகளும்கூட பல சமயங்களில் ஒன்றோடொன்று பொருந்தாமல், தனித்தனி கதைகளைச் சொல்வதாக அமைந்துள்ளன. அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டு போரிட்ட மாவீரன் என்றும் விடுதலை வேட்கையின் சின்னம் என்றும் புகழப்படும் ஸ்பார்டகஸ் குறித்து ஏன் குறைவான பதிவுகள் என்பதற்கும் ஏன் முரண்பட்ட கருத்துகள் என்பதற்குமான விடைகளை நாம் கண்டுபிடித்தாகவேண்டும். அதற்கு முன்னால் கிடைத்திருக்கும் விவரங்களின் அடிப்படையில் ஸ்பார்டகஸ் குறித்த சுருக்கமான ஒரு சித்திரத்தை உருவாக்க முயற்சி செய்யலாம்.

ரோமில் அடிமைமுறை மிகப் பரவலாக இருந்த காலகட்டம் அது. ரோமில் மட்டுமல்ல பண்டைய நாடுகள் ஒவ்வொன்றிலும் அடிமைமுறை வேறூன்றியிருந்தது. ஆனால், ரோம சாம்ராஜ்ஜியத்தின் அடிமைகள் பிற நாடுகளில் இருந்தவர்களைக் காட்டிலும் பல மடங்கு கீழான நிலையில் இருந்தனர். மனிதர்களாக அல்ல, உடைமைகளாகவே அவர்கள் கருதப்பட்டனர். என்னிடம் இவ்வளவு நிலம் இருக்கிறது என்பது போல் இத்தனை அடிமைகள் இருக்கிறார்கள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதம் கொண்டவர்களாக குடிமக்கள் இருந்தனர். தங்கள் இல்லங்களுக்குத் தேவையான பொருள்களோடு சேர்த்து கைவினைஞர்கள், கவிஞர்கள், தத்துவ ஆசிரியர்கள், கட்டுமானக் கலைஞர்கள் ஆகியோரையும் இயல்பாகச் சந்தையில் வாங்கி சென்றனர். இந்த அடிமைகளை வைத்து வீடுகளும் தோட்டங்களும் அரண்மனைகளும் உருவாக்கிக்கொண்டார்கள். கவிதைகள் இயற்றச் சொல்லியும் விவாதங்கள் நடத்தச் சொல்லியும் மகிழ்ந்தார்கள். சில சமயம் வயதில் இளையவர்களை வாங்கிச் சென்று அவர்களை ஒரு துறையில் பயிற்றுவித்து (ஒரு குதிரையைச் செய்வதுபோல்) வாழ்நாள் முழுவதும் உபயோகப்படுத்திக்கொள்வதும் உண்டு.

ரோம சாம்ராஜ்ஜியம் அதன் வீழ்ச்சியை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த சமயத்தில் அடிமைமுறை மேலும் மோசமடைந்தது.கொடூரமான முறையில் அடிமைகள் சித்திரவதை செய்யப்பட்டனர். விலங்குகளிடம் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ளக்கூட அவர்கள் ஆயுதங்கள் வைத்திருக்க மறுக்கப்பட்டனர். ஒருவேளை, விலங்குகள் தாக்கி உயிரிழந்தால் அதே விலையில் வேறு அடிமைகளா இல்லை சந்தையில்? அதனால்தான், தவறிழைக்கும் அடிமைகளைச் சர்வசாதாரணமாக சிலுவையில் அறைந்து கொன்றார்கள்.

ஸ்பார்டகஸ் திரேஸ் (Thrace) என்னும் பகுதியில் (இன்றைய பல்கேரியா) ஒரு சுதந்தர மனிதனாகப் பிறந்தான். பிறகு, ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டு அடிமையாக விற்கப்பட்டான். அப்போதே அவனுடைய உடல் வலிமையைக் கண்டு திகைத்த எஜமானர்கள், பிற அடிமைகளைப் போல் அவனை வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. ஒரு அடிமை வீரனாக (கிளேடியேட்டர்) முறைப்படி அவனை வளர்த்தெடுப்பதே அதிக பலன் தரும் என்னும் நம்பிக்கையுடன் கேப்புவா (இன்று தெற்கு இத்தாலியின் ஒரு நகரம்) என்னும் இடத்தில் உள்ள ஒரு பயிற்சிக்கூடத்தில் ஸ்பார்டகஸைச் சேர்த்துவிட்டார்கள்.

பயிற்சி முடிந்ததும் வீரர்கள் திறந்தவெளி மைதானத்தில் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு சாவார்கள். அதைக் கண்டு மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்து மகிழும். அடிமைகளோடு சேர்த்து குற்றவாளிகளும் இவ்வாறு கிளேடியேட்டராக மாற்றப்படுவார்கள். ஓர் அடிமை வீரனாக இருக்க விரும்பாத ஸ்பார்டகஸ் சக அடிமைகள் சுமார் எழுபது பேரோடு சேர்ந்து அங்கிருந்து தப்பியோடினான். தன்னைப் போன்ற இன்னொரு அடிமையை எதிர்ப்பதற்குப் பதில் அடிமை முறையை எதிர்த்துப் போரிட விரும்பினான். எப்படியும் போகப்போகும் உயிரை, நம் அடிமைச் சங்கிலிகளைத் தகர்த்து எறியும் போராட்டத்துக்கு அர்ப்பணித்தால் என்ன என்று அடிமைகளிடம் உரிமையுடன் கோரினான். ஸ்பார்டகஸின் படைப்பலம் பெருகத் தொடங்கியது. அனைவருக்கும் போர்ப் பயிற்சிகள்அளிக்கப்பட்டன. ரோம சாம்ராஜ்ஜியத்தை எதிர்ப்பதற்குத் தோதாதான ஓர் வலுவான படையை ஸ்பார்டகஸ் உருவாக்கினான். அடிமைகள் ஸ்பார்டகஸை தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டார்கள்.

மவுண்ட் வெசுவியஸ் என்னும் இடத்தில் பொது.யு.மு 73ல் முதல் கட்டப் போர் தொடங்கியது. தங்களுக்கு எதிராக ஆர்ப்பரிக்கும் அடிமைகளையும் அதன் தலைவனையும் சுலபத்தில் வீழ்த்திவிடலாம் என்று அலட்சியத்துடன் போரிட்ட ரோம ராணுவம், எதிர்பார்த்ததைவிட நீண்ட காலத்துக்கு மோதல்கள் நீடித்ததைக் கண்டு திகைத்துப்போனது. ஸ்பார்டகஸ் திறமையாக இந்தப் போரை தொடர்ந்து நடத்தியபடி முன்னேறிச் சென்றான். மடிந்து விழும் வீரர்களின் இடத்தில் புதியவர்கள் உடனுக்குடன் நியமிக்கப்பட்டார்கள். முன்னேறும் திசையெங்கிலும் பறிமுதல்கள் நடைபெற்றன. தங்களைப் பிணைத்து வைத்த சங்கிலிகளையே ஆயுதமாக மாற்றிக்கொண்டார்கள் வீரர்கள். அணிந்துகொள்ள ஆட்டுத் தோலும் எறுமைத் தோலும் உதவின.கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை வைத்து மேலும் தங்களை பலப்படுத்திக்கொண்டார்கள்.

மூன்றாண்டுகள் போர் தொடர்ந்தது. ஒவ்வொரு நாளும் படையின் வலிமை அதிகரிப்பதை ரோம் உணர்ந்தது. அடிமைகளின் எழுச்சி தம்மை நேரடியாகப் பாதிக்கும் என்பதை அவர்களைச் சுரண்டி வாழ்ந்து வந்த உயர் குடி மக்கள் உணர்ந்தனர். அடிமைகளால் சொத்துகள் பறிமுதல் செய்யப்படுவதை அறிந்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களில் ஒருவனும் பெரும் செல்வந்தருமான லிசினியஸ் கிராசஸ் (Licinius Crassus), ஸ்பார்டகஸை வீழ்த்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். ஆயிரக்கணக்கான அடிமைகளை வழியெங்கும் கொன்றபடி ஸ்பார்டகஸை நோக்கி முன்னேறினான் கிராசஸ்.

சிலாரஸ் ஆற்றுக்கு அருகில் லுவாமியா என்னும் இடத்தில் பொ.யு.மு 71ல் கடைசிக் கட்டப்போர் நடைபெற்றது. முதல் வரிசையில் இருந்தபடி போரிட்ட ஸ்பார்டகஸ் ஈட்டி வீச்சில் காயமடைந்தான். ரோம ராணுவத்தின் பலம் இப்போது முன்பைவிட பல மடங்கு அதிகரித்திருந்தால், அடிமைப் படையால் தாக்குப்பிடிக்கமுடியவில்லை. குவிந்திருந்த வீரர்களின் உடல்களுக்கு மத்தியில் ஸ்பார்டகஸின் உடலும் கண்டெடுக்கப்பட்டது. எல்லாம் முடிந்து அவருடைய முகாமுக்குச் சென்றபோது, மூவாயிரம் சொச்சம் ரோம வீரர்கள் உயிருடன் சிறைபிடிக்கப்பட்டிருந்ததை ரோம் ராணுவம் கண்டுகொண்டது. அடிமைகளின் எழுச்சி அடக்கப்பட்டுவிட்டது. ஆனால், விடுதலைக்கான ஒரு குறியீடாக ஸ்பார்டகஸ் மாறியிருந்தார்.

ஸ்பார்டகஸ் விடுதலையின் குறியீடு அல்ல, அவன் ரோமை எதிர்த்துப் போரிடவும் இல்லை. அடிமைகளை ரோமிடம் இருந்து மீட்டு தப்பவைப்பதில் மட்டுமே அவன் கவனம் செலுத்தினான் என்கிறார்கள் இன்னொரு சாரார். அவர்கள் வரிசைப்படுத்தும் நிகழ்வுகள் இப்படி இருக்கின்றன.

அடிமைகளின் தலைவனாக உருபெறுவதற்கு முன்னால் ஸ்பார்டகஸ் ரோம ராணுவத்தில் சிறிது காலம் பணியாற்றிவிட்டு பிறகு அதிலிருந்து வெளியேறிவிட்டான். அவ்வாறு வெளியேறியபிறகு சிறையிடிக்கப்பட்டு கிளேடியட்டராக விற்கப்பட்டான். அங்கிருந்தும் தப்பிச் சென்றான். ஸ்பார்டகஸுடன் சேர்ந்து எழுபது வீரர்கள் வெளியேறி, மவுண்ட் வெசுவியஸில் தஞ்சமடைந்தனர். அதையே ஒரு தளமாக மாற்றிக்கொண்டு பிறருக்கும் பயிற்சியளித்தனர். தொடக்கத்தில் ஸ்பார்டகஸின் படையை ரோம் குறைத்தே மதிப்பிட்டது. தன்னை எதிர்நோக்கி வந்த முதல் நான்கு படைகளை ஸ்பார்டகஸின் வீரர்கள் எதிர்கொண்டு வீழ்த்தினார்கள். அப்போது ஸ்பார்டகஸின் படை பலம் 90,000 முதல் 1,20,000 வரை இருந்தது. ஆல்ப்ஸ் பகுதியைக் கடந்து சென்றுவிட்டால் ரோமப் படைகளிடம் இருந்து வெகு தொலைவுக்குச் சென்றுவிடலாம், அப்போது அச்சுறுத்தல்கள் இருக்காது என்று ஸ்பார்டகஸ் கருதினார்.ஆனால் அவருடைய கமாண்டரான கிரிக்சஸ் ரோமை நேரடியாக எதிர்கொண்டு போரிட விரும்பினார். 30,000 வீரர்களுடன் சென்ற இந்தப் பிரிவு ரோமால் அழிக்கப்பட்டது. அடுத்தடுத்து மூன்று முறை வென்ற ஸ்பார்டகஸின் படையை இறுதியாக லிசினியஸ் கிராசஸ் வீழ்த்தினான். ஸ்பார்டகஸ் கொல்லப்பட்டான் ஆனால் அவன் உடல் கிடைக்கவில்லை.

ஆக, ஸ்பார்டகஸ் அடிமைகளை மீட்டெடுத்தான் என்பதை இந்த இரு தரப்பினரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஸ்பார்டகஸ் ஒரு திறமையான போர் வீரன் என்பதையும் படைத் தலைவன் என்பதையும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் அடிமைகளை அவன் தப்ப வைத்தானா அல்லது அவர்களைக் கொண்டு ரோம சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்துப் போரிட்டானா என்பதில் வேறுபாடுகள் எழுகின்றன.

ஸ்பார்டகஸுக்கு ஆதரவான இன்னுமொரு தரப்பும் இருக்கிறது. இவர்கள் ஸ்பார்டகஸின் வலிமையையும் திறனையும் பல மடங்கு உயர்த்திக் காட்டுகிறார்கள். அசாத்திய திறமையும் அற்புதங்கள் நிகழ்த்தும் ஆற்றலும் கொண்டவனாக ஸ்பார்டகஸை இவர்கள் முன்னிறுத்துகிறார்கள். ரோம சாம்ராஜ்ஜியத்தைக் கிடுகிடுக்கச் செய்த மாபெரும் தலைவன் என்றும் கடவுளுக்கு நிகரானவன் என்றும் ஸ்பார்டகஸ் இவர்களால் உருவகப்படுத்தப்படுகிறான்.

தொகுத்துப் பார்க்கும்போது சில விஷயங்கள் பிடிபடுவதில்லை. ஸ்பார்டகஸ் அடிமைகளைத் திரட்டி அவர்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டி, ரோமப் படைகளுக்கு எதிராகப் போரிட்டான். அவனது கலகம் அடக்கப்பட்டுவிட்டது. இதில் மேலதிகம் சிலாகிக்க என்ன இருக்கிறது? எதிரிகளின் கரங்களில் விழுந்துபட்ட ஒரு தலைவனை ஒரு மகத்தான வீரனாக வேண்டுமானால் முன்னிறுத்தலாம், ஒரு புரட்சியாளராக எப்படி உயர்த்த முடியும்? ரோம வரலாற்றில் ஸ்பார்டகஸுக்கு முன்பாகவே பல எழுச்சிகள் நடைபெற்றுள்ளன. ஸ்பார்டகஸின் எழுச்சி எந்த வகையில் இவற்றிலிருந்து மாறுபட்டது? எந்த அடிப்படையில் ஸ்பார்டகஸ் தனித்துவத்துடன் திகழ்ந்தான்? எதனால் அவன் விடுதலையின் சின்னமாக அறியப்படுகிறான்?

இடதுசாரி அரசியல் விமரிசகரும் எழுத்தாளருமான ஆலன் உட்ஸ் எழுதுகிறார். ‘மகத்தான புரட்சியாளரும் பண்டைய வரலாற்றின் சிறப்புமிக்க படைத் தலைவராகவும் திகழ்ந்த ஸ்பார்டகஸ் என்னும் மனிதன் குறித்து நமக்கு அதிகம் தெரியவில்லை என்பது உண்மைதான். வரலாறு வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுகிறது. உலகம் முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறுகளும்கூட நமக்கு வெற்றி பெற்றவர்கள் வாயிலாகவே தெரியவருகின்றன. அடிமைகளின் குரல் அவர்களுடைய எஜமானர்கள் மூலமாகவே நமக்குக் கேட்கக் கிடைக்கிறது. (ஸ்பார்டகஸ் விஷயத்தில்) அடிமைகள் பற்றி நமக்குக் கிடைத்திருக்கும் சிற்சில விஷயங்களும்கூட அவர்களுடைய எதிரிகளால் எழுதப்பட்டவை என்பதை நாம் மறக்கக்கூடாது. அடிமைகள் பற்றி ரோம வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய பதிவுகள் வன்மத்துடன் எழுதப்பட்டவை. எனவே அவை முரண்பட்டு நிற்கின்றன.’

அவர் மேலும் தொடர்கிறார். ‘வெற்றி பெற்றவர்களால் உருவாக்கப்படும் வரலாறு அவர்கள் நலன் சார்ந்தவையாக இருக்கின்றன. அவர்களுடைய உளவியலை, அவர்களுடைய விருப்பங்களைப் பிரதிபலிப்பவையாக இருக்கின்றன.ஆளும் வர்க்கத்தின் தரப்பையே இந்தப் பதிவுகள் முன்வைக்கின்றன. ஸ்பார்டகஸை இத்தகைய பதிவுகள்மூலம் புரிந்துகொள்ள முயல்வது ரஷ்யப் புரட்சியை எதிர்க்கும் பூர்ஷ்வாக்களிடம் இருந்து லெனினையும் ட்ராட்ஸ்கியையும் புரிந்துகொள்ள முயல்வதற்குச் சமமானது.’

ஸ்பார்டகஸ் மட்டுமல்ல இனி நாம் காணவிருக்கும் அனைத்து நாயகர்களுக்கும் பொருந்தக்கூடிய பொது விதி இது. ஒடுக்கப்பட்டவர்களையும் அவர்களுக்குக் குரல் கொடுத்தவர்களையும் வெற்றி பெற்றவர்கள் எழுதி வைத்த குறிப்புகளில் இருந்தே நாம் புரிந்து வைத்திருக்கிறோம்.இந்தக் குறிப்புகளின் அடிப்படையிலேயே அவர்களைப் பற்றிய ஒரு மதிப்பீட்டை உருவாக்கி வைத்திருக்கிறோம். உடைந்தும் சிதைந்தும் முரண்பட்டும் நிற்கும் இந்தப் பதிவுகளில் இருந்து கிடைக்கக்கூடிய பிம்பங்களை அப்படியே ஏற்றுக்கொள்வதில் பல அபாயங்கள் இருக்கின்றன.

இதற்கு மாற்று, வெற்றியாளர்களின் பதிவுகளை முற்றிலுமாக மறுதலிப்பது அல்ல. மாறாக, அப்பதிவுகள் மீள்ஆய்வு செய்யப்படவேண்டும். புகழ்ச்சி, இகழ்ச்சி இரண்டையும் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். சறுக்கல்கள், வெற்றிகள் இரண்டையும் ஆராய்ந்திட வேண்டும். விடுபடல்களை எச்சரிக்கையுடன் தேடியெடுக்கவேண்டும். அழுந்தி கிடக்கும் குரல்களை மேலே கொண்டுவரவேண்டும். ஒடுக்கியவர்களின் வரலாற்றுக்கு மாற்றாக, ஒடுக்கப்பட்டவர்களின் வரலாற்றைக் கட்டமைத்து முன்வைக்கவேண்டும்.

ஸ்பார்டகஸை இந்தப் பின்னணியில் மீள்வாசிப்பு செய்யும்போது முற்றிலும் வேறுபட்ட ஒரு சித்திரம் கிடைக்கிறது. அவரை ஏன் புரட்சியாளர் என்று அழைக்கவேண்டும் என்பதற்கான வலுவான காரணங்கள் இதில் கிடைக்கின்றன.

(அடுத்த பாகம் – ஸ்பார்டகஸ் : பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதி)

Share/Bookmark

‘பாட்டா? அதெல்லாம் உனக்கு வராது!’

$
0
0

ஜெயிப்பது நிஜம் / அத்தியாயம்  4

musicநான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது நடந்த இன்னொரு சம்பவம் இது.

எங்களுக்கு மியூசிக் பாடம் உண்டு. அதில் எக்ஸாமும் உண்டு. கர்நாடக சங்கீதம்,
ஹார்மோனியம் வாசிப்பது, வாய்ப்பாட்டு உள்ளிட்ட பல விஷயங்களை சொல்லித் தருவார்கள்.

ஒரு முறை இன்டெர்னல் எக்ஸாமுக்காக நாங்கள் எல்லாரும் தயாராகிக் கொண்டிருந்த போது, எனக்கு ஆவேரி ராகம் பாட வேண்டும் என்று ஆசை எழுந்தது. அதை சொல்லிக் கொடுக்கச் சொல்லி நான் எங்கள் வாத்தியாரிடம் கேட்டபோது அவர், ‘என்னது ஆவேரி ராகமா? அதெல்லாம் உனக்கு வராது. இந்த ஆசையே வேண்டாம் விட்டுடு’ என்று கூறிவிட்டார்.

எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.இதற்காக நான் அவர் வீட்டுக்கேகூட சென்று கற்றுக்கொள்ளத் தயாராக இருந்தேன். ஆனால் அவர் எனக்கு அந்த ராகம் வராது என்பதில் உறுதியாக இருந்தார். அதைவிட அந்த ராகத்தை எனக்கு சொல்லித் தரக்கூடாது என்பதில் மேலும் உறுதியாக இருந்தார்.

ஆனால், என்னைவிடச் சுமாராக இசையறிவு கொண்ட பையன் ஒருவனுக்கு அவன் வீட்டுக்கே போய் சொல்லிக்கொடுத்தார். அதற்கொரு காரணம் இருந்தது. ஆனால் நான் அதை இங்கே சொல்ல விரும்பவில்லை.

வாத்தியார் ஆவேரி கற்றுக்கொடுக்க மறுத்து விட்டபோதும் என் ஆர்வம் குறையவில்லை. எப்படியாவது அதைக் கற்றுக்கொண்டு பாட வேண்டுமென்று ஆசை மிகுந்தது.

ஒரு நாள் டாக்டர். பால முரளி கிருஷ்ணா அவர்கள் ‘ஆல் இந்தியா ரேடியோ’ வில் (அகில பாரத வானொலி) மேற்படி ஆவேரி ராகத்தில் கீர்த்தனைகள் பாடுவதைக் கேட்டேன். நான் வீட்டில் இருக்கும்போது ரேடியோவில் அவருடைய பாடல்களை விடாமல் கேட்பது வழக்கம்தான். அன்று அவர் ஆவேரி பாடியபோது நான் அதை அப்படியே என்னுடைய டேப் ரெக்கார்டரில் ரெக்கார்ட் செய்து வைத்துக்கொண்டேன். அதை டேப் தேய்கிற அளவுக்கு திரும்பத் திரும்பப் போட்டுக் கேட்டு ப்ராக்டீஸ் செய்தேன். எத்தனைமுறை எத்தனை நாள் என்று கணக்கே இல்லை. அத்தனைமுறை போட்டுக் கேட்டேன்.

இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பில் லோயர் கிரேட் எக்ஸாம்  வந்தது. இன்டெர்னலுக்காக வேறொரு ஸ்கூலுக்கு எங்கள் ஆசிரியர்களோடு போயிருந்தோம். எல்லோரும்
அவரவர் முறைக்காகக் காத்திருந்தோம். எங்களுக்கு எக்ஸாமினராக
வந்தவர் அறைக்கு ஒவ்வொரு மாணவராகப் போய் டெஸ்ட் அட்டென்ட் செய்து வந்துகொண்டிருந்தோம். உள்ளே அவர் சொல்கிற ராகத்தில் பாடவேண்டும். நான் என்னுடைய முறைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். கொஞ்சம் படபடப்பாகவும் தவிப்பாகவும் இருந்தது.

என்னோட முறை வந்தது. உள்ளே போனேன். அங்கே ஒரு பெரியவர் நாற்காலியில்
உட்கார்ந்திருக்கார். அவர் என்னை ஏதாவது பாடச் சொல்கிறார். எனக்கு நல்லா தெரிஞ்ச
பாட்டுகள் சிலவற்றைப் பாடினேன். பிறகு அவர் கேட்டார். ‘ஆவேரில உனக்கு ஏதாவது
தெரியுமா?’

பழம் நழுவி பாலில் விழும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கே பஞ்சாமிருதத்தில்
விழுந்தது போல இருந்தது எனக்கு.

உடனே பாடினேன். பாடி முடித்தும் ஒரே பின் டிராப் சைலண்ட். அவரிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. பதினைந்து நொடிகளுக்குப் பிறகு அவர் தன் சீட்டில் இருந்து எழுந்து வந்தார்.

நான் கீழே அமர்ந்திருந்தேன். வந்தவர் என் தோளைத் தட்டி ‘சபாஷ்… நல்லா பாடினேப்பா… வெரி குட்! வெரி குட்!’ என்றார்.

எனக்கு தலைகால் புரியவில்லை. காற்றில் மிதப்பது போல் இருந்தது.

வெளியில் பல பள்ளிகளைச் சேர்ந்த வாத்தியார்கள் காத்திருந்தார்கள். உள்ளே சென்ற தன் மாணவன் எப்படி பாடுகிறான் என்பதை அவர்களால் வெளியில் இருந்தபடியே கேட்க முடிந்தது.

என்னுடைய வாத்தியார் சுப்ரமணியமும் வெளியில்தான் இருந்தார்.

நான் வெளியே வந்ததும், ‘நீ எப்போடா கத்துக்கிட்டே ஆவேரியை? நல்லா பாடினேடா’
என்று சர்டிபிகேட் கொடுத்தார். அதற்கு மேல அவரால் பேசமுடியவில்லை.

என் இசைப்பயணம் எங்கே சென்று முடிந்தது தெரியுமா?

நான் லயோலாவுல படிக்கும் போது ஃபிலிப்ஸ் நிறுவனம் நடத்திய லைட் மியூசிக்
போட்டியில் கலந்துகொண்டு அகில இந்திய அளவில் முதல் பரிசு வாங்கினேன்.

சில வருடங்களுக்கு முன் சன் டிவி.யின் அப்துல ஹமீது சார் நடத்திய பாட்டுக்கு
பாட்டு நிகழ்ச்சியில் ஜட்ஜாக கலந்துகொண்டேன்.

இப்பொழுது நான் சொந்தமாக ஒரு ம்யூசிக் ட்ரூப் வைத்திருக்கிறேன்.  என்னால்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, உள்ளிட்ட 2000 பன்மொழிப் பாடல்களை ராகங்களோடு முழுவதுமாகப் பாடமுடியும்.

மாபெரும் சாதனைகள் வலிமையால் நிகழ்த்தப்பட்டவை அல்ல. விடாமுயற்சியினால் என்று ஆங்கிலத்தில் ஒரு மேற்கோள் உண்டு. எத்தனை அருமையான ஆழமான கருத்து!

எந்த ஒரு செயலையும் அது எத்தனை கடினமாக இருந்தாலும் விடாமுயற்சியுடன் பயிற்சி செய்து வந்தால் அது நிச்சயம் ஒருநாள் சாத்தியப்படும்.

 

Share/Bookmark


வேதங்களில் சாதி

$
0
0

vedaபறையர்கள் / அத்தியாயம் 4

தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் சாதிகள் மிகவும் வலிமையுடன் இருப்பதற்கு அடிப்படையாக அமைந்தவை வடநாட்டில் ஏற்பட்ட தொடர்ந்த படையெடுப்புகள்தாம். வடமேற்கு எல்லைப்புற மாநிலங்களின் அதாவது சிந்து, பஞ்சாப் பகுதிகளின் வழியாக நடந்த படையெடுப்புகளால் இந்தியாவில் நிலவி வந்த வர்ணப்பாகுபாடு சிதைந்தது. பார்ப்பனர்களின் வேள்விப் பண்பாடும் சமூகத் தலைமையும் கேள்விக்குட்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படைவீரர்கள் இந்தியப் பெண்களோடு கொண்ட மண உறவுகளும் புதிய சமூகம் உருவாகக் காரணங்களாயின.

வெளிநாட்டுப் படையெடுப்புகளால் ஏற்பட்ட சமூகமாற்றம் ஒரு புறமும் கி.மு. ஆறாம் நூற்றாண்டளவில் இந்தியாவில் தோன்றிய அறிவுப்புரட்சி மறுபுறமுகமாகப் பார்ப்பனிய மேலாண்மையை அலைக்கழித்தன. இந்த அறிவுப் புரட்சிக்குப் பெரிதும் காரணமாக இருந்தவர் கவுதம புத்தர். இவர் தோற்றுவித்த பௌத்த சமயம், பார்ப்பனியத்தின் அனைத்து முனைகளையும் மழுங்கடித்தது. பார்ப்பனர்களின் அறிவுத்துறை வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்ததும் வேதக் கல்வியின் மையமாக விளங்கியதுமான தட்சசீலம் வெளிநாட்டுப் படையெடுப்புகளாலும் பண்பாட்டுத் தாக்குதல்களாலும் சிதைவடைந்தது.

இதனால் பார்ப்பனர்கள் தங்களின் பாதுகாப்புக்காக நல்லதொரு புகலிடத்தைத் தேட வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாயினர். இவற்றைத் தொடர்ந்து இஸ்லாமியரின் படையெடுப்புகள் பார்ப்பனியத்தின் அடிப்படைகளைத் தகர்க்கத் தொடங்கின. ஆசீவகம், உலகாயதம், பௌத்தம் ஆகிய மனித நேயக் கோட்பாடுகளை வன்முறையில் சிதைத்தொழித்த பார்ப்பனியத்தை இஸ்லாமும் வன்முறையில் சந்தித்தது. அத்த்துடன் பார்ப்பனியம் கையாண்ட வஞ்சகத் தன்மைக்கு மாறாக இஸ்லாம் பின்பற்றிய சகோதரத்தன்மை – அனைவரையும் சமமாக நடத்திய சமத்துவம் – மக்களிடையே இஸ்லாத்துக்கு நல்லதொரு செல்வாக்கு ஏற்படவும் வழி வகுத்தது.

இதனால் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளான பார்ப்பனர்களின் முழுக்கவனமும் தென்னாட்டுப் பக்கம் திரும்பியது. தென்னாடு வந்த பார்ப்பனர்களுக்கு குப்தப் பேரரசு, பல்லவப் பேரரசு இவற்றை அடுத்து வந்த பிற்காலப் பாண்டிய சோழப் பேரரசுகள் ஆகிய அனைத்தும் பார்ப்பனியத்தின் காவல் அரண்களாகத் திகழ்ந்தன. இவ்வாறு தென்னகம் வந்து குடியேறிய பார்ப்பனர்கள் சிதறிக் கிடந்தனர். அவர்களை, சிதறிக் கிடந்த பார்ப்பனியத்தை ஒரு கட்டுக்குள் ஒன்றிணைத்தவர் ஆதிசங்கரர் ஆவார்.

இந்த ஆதிசங்கரர் மனுதர்மத்தை எழுதிய மனுவைவிட ‘சூத்திரனை’ இழிவுபடுத்தியவர் ஆவார். சூத்திரன் ஒருவன் வேதம் படித்துவிட்டால் அவனை நெஞ்சைப் பிளப்பது, நாவை அறுப்பது; வேதத்தைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது, கண்ணைத் தோண்டுவது போன்ற செயல்களைச் செய்ய அறிவுரை வழங்கியவர்தான் ஆதிசங்கரர் ஆவார். சங்கராச்சாரியார் இப்படி சூத்திரர்களைத் துன்புறுத்தி அடக்குவதற்கு எடுத்துக் கொண்ட சான்றுகள் குப்த அரசர்கள் காலத்திய ‘கௌதம சூத்திரம்’ முதலிய நூல்களில் இருக்கின்றன. அதாவது சமுத்திர குப்தனுடைய காலத்தில் (கி.பி. நான்காம் நூற்றாண்டில்) ஆரம்பித்து சங்கராச்சாரியாரின் காலம் (கி.பி. 9வது நூற்றாண்டின் ஆரம்பம்) வரைக்கும் நம்முடைய பார்ப்பன முன்னோர்கள் சூத்திரர்களை அமுக்கி வைத்துத் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்த இடைவிடாமல் முயன்று வந்தவர்கள் என்று தெரிகிறது.

0

இந்தியாவில் தொன்று தொட்டு சாதிக் கொடுமையும், சமயச் சண்டைகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவ்வப்போது அறிவுடையோர், சாதிக் கொடுமையையும், சமய ஊழல்களையும் ஒழிக்க வேண்டுமென்று சொல்லியும் எழுதியும் வந்திருக்கிறார்கள். எழுதிக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை வைதீகர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள். இந்த வைதீகர்கள் சாதிக்கு ஆதாரமாகக் காட்டுவது மத நூல்களையே. மதநூல்களில் அந்தந்தக் காலத்தில் இருந்த பழக்கவழக்கங்களே சொல்லப்பட்டு இருந்தாலும் அதற்கு மிகுந்த சிறப்பை ஏற்றி வைத்திருக்கிறார்கள். மத நூல்கள் யாவும் கடவுள் தன்மை பொருந்தியதாகவும், கடவுளும் அதன் அவதாரங்களாகிய கடவுள்களும் நேரில் வந்து உபதேசித்ததாகவும் சொல்லுகிறார்கள்.

வேதத்திலும், உபநிடதங்களிலும், இதிகாசங்களிலும், ஸ்மிருதிகளிலும், இன்னும் மற்ற மத நூல்களிலும் சாதியைப் பற்றி சொல்லி இருப்பதாலும், சாதி நாட்டில் தொன்று தொட்டே இருந்ததாலும், அதனை விடாது கைப்பற்றி ஒழுகல் வேண்டுமென்பது வைதீகக் கொள்கை.
ஆய்வாளர்கள் கண்டறிந்த விஷயங்கள் இவை. மிகப் பழைய நூலாக இருக்கும் வேதத்தின் முதல் ஒன்பது மண்டிலங்களிலும் சாதி வேற்றுமையைப் பற்றிய குறிப்பு ஒன்றுமே காணப்படவில்லை. பிராமணன் என்னும் சொல் வேள்வி வேட்கும் முனிவனையும், பதிகங்கள் பாடும் புலவனையும் குறிக்கின்றனவே தவிர, பார்ப்பன வகுப்பினைக் குறிக்கவில்லை. ஏனைய மூன்று வகுப்பினரின் பெயர்களான சத்திரியன், வைசியன், சூத்திரன் என்னும் சொற்களும்கூட அந்த ஒன்பது மண்டிலங்களிலும் காணப்படவில்லை. இதனால் அவை எழுதப்பட்ட காலங்களில் மக்கள் எல்லோரும் ஒரே வகுப்பினராக இருந்தனர், நால்வேறு வகுப்பினராகப் பிரிந்திரிக்கவில்லை என்பது புலனாகும்.

இருக்கு வேதத்தின் (ரிக் வேதம்) பத்தாம் மண்டிலத்திலுள்ள புருஷ சூக்தம் நால்வகை மக்கள் பிரிவை உணர்த்துகிறது. ஆனால் அதிலும், இந்த நான்கு பிரிவினருக்குள் உயர்வு, தாழ்வு இல்லாமல் வாழ்க்கைக்கு முதன்மையாக வேண்டப்படும் நால் வகைத் தொழில்களைச் செய்து கொண்டு உண்ணல் கலத்தல்களில் வேறுபாடின்றி ஒருமித்து வாழ்ந்து வந்ததாகவே சொல்லப்படுகிறது. மேலும், ரிக், யஜுர், சாமம் உள்ளிட்ட மூன்று வேதங்கள் இயற்றப்பட்ட காலங்களிலும் மக்கள் பாகுபாடு இல்லை என்று சொல்லலாம்.

சுக்கில யஜுர் வேதத்தின் முப்பதாம் இயலில் பல்வேறு தொழில்களைச் செய்யும் பல்வேறு மக்கள் கூட்டத்தின் பெயர்கள் மட்டுமே காணக்கிடைக்கின்றன. சாதி வேறுபாடுகளும், உயர்வு தாழ்வுகளும் பேசப்படவில்லை. வேத காலத்தில் சாதி வேற்றுமையின் பொருட்டு பூணூல் அணியும் வழக்கம் காணப்படவில்லை. அக்காலத்தில் கடவுள் நம்பிக்கை அதிகமாக இருந்ததால், கடவுளைத் தொழிலில் புகுத்திருப்போர் தொழிலில் புகாதார் தம்மை அணுகாமல் விலகிப் போவதற்கு ஓர் அடையாளமாக அதனை அத்தொழில் இயற்றும் நேரங்களில் மட்டும் அணிந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

புராணங்கள், இதிகாசங்கள், பிற்பட்ட உபநிடதங்கள் தோன்றிய காலத்திலேதான் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு வகுப்புகள் பிரிந்தன. இக்கால அளவுகளில் சூத்திரன் சமையல் செய்த உணவைப் பார்ப்பனன் அருந்தும் முறை பழைய கற்ப சூத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. வாயு புராணத்தில் கிருத யுகத்தில் சாதிகள் இல்லை என்றும் பிறகு தொழில்களுக்கு ஏற்ப மக்கள் நான்காகப் பிரிந்தார்களென்றும் சொல்லப்பட்டிருக்கிறது. வைதீகர்கள் ஐந்தாம் வேதமாகக் கொண்டுள்ள மகாபாரதம் சாந்தி பருவத்தில் மேற்கூறிய நால்வகை சாதியாரில் ஒழுக்கத்தால் மிக்கவரே உயர்ந்த சாதியாரெனவும், ஒழுக்கமில்லாதவரே தாழ்ந்த சாதியாரெனவும் சொல்லப்பட்டிருக்கிறது. அக்காலங்களில் உண்மை பேசுதலே மிகச் சிறந்த ஒழுக்கமாகவும், அதனையுடையோரே பிராமணராகவும் கருதப்பட்டனர்.

0

இந்தியாவில், ஒவ்வொரு சாதியும் தன்னுடைய இருப்பை உணர்ந்தே இருக்கிறது. அதன் இருத்தல் தத்துவமானது முதலும் முடிவுமாக தன்னை காத்துக் கொள்வதேயாகும். சாதிகள் ஒரு கூட்டமைப்பாகக் கூட ஆகவில்லை. இந்து – முஸ்லிம் கலவரம் ஏற்படும் நேரங்களில் தவிர்த்த மற்ற நேரங்களில், மற்ற சாதிகளோடு தம் சாதிக்கு உறவு உண்டு என்று எந்த சாதியினரும் எண்ணுவதில்லை. மற்ற நேரங்களில் எல்லாம், ஒவ்வொரு சாதியும் பிற சாதிகளில் இருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும், வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளவுமே முயல்கிறது.

சமூகவியலாளர் கூறும் குழு உணர்வு, இந்துக்களிடம் அறவே இல்லாத ஒன்று. நாம் அனைவரும் இந்துக்களே என்னும் உணர்வு அவர்களிடம் இல்லை. ஒவ்வொரு இந்துவிடமும் சாதிய உணர்வுதான் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் இந்துக்களை ஒரு சமூகமாகவோ, தேசமாகவோ கொள்ள முயலவில்லை. இந்தியர்கள் ஒரே தேசத்தவராக இல்லை. அவர்கள் தமக்கென ஒரே சீரான அடையாளத்தைப் பெறாத கும்பலாகவே உள்ளனர். ஆனால் இந்தியர்கள் பலர், நாட்டுப்பற்று காரணமாக இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

நாடுகள் எப்படி தம் சுயநலன் கருதி தனித்து வாழ முற்படுகின்றனவோ, அது போலவே பல்வேறு சாதிகளும் தன்னலங்கருதி தமக்குள் உறவின்றி தனித்து வாழ முற்படுகின்றன. இந்தத் தன்மைதான் சாதிகளிடம் உள்ள சமூக விரோத மனப்பான்மையாக இருக்கிறது. இந்தத் தன்னல மனப்பான்மை, அனைத்துச் சாதிகளிலும் இருக்கிறது. பார்ப்பனர் அல்லாதவருக்கு எதிராக தங்கள் ‘சொந்த நலன்களைக்’ காத்துக் கொள்வதே பார்ப்பனர்களின் அக்கறையாக இருக்கிறது. அதுபோலவே, பார்ப்பனர்களுக்கு எதிராகத் தங்கள் ‘சொந்த நலன்களை’க் காத்துக் கொள்வதே – பார்ப்பனர் அல்லாதோரின் அக்கறையாக இருக்கிறது. எனவே, இந்துக்கள் பல்வேறு சாதிகள் சேர்ந்த கதம்பமாக மட்டும் இருக்கவில்லை. தன் சொந்த நலன்களுக்காக மட்டுமே வாழும் – பரஸ்பரம் போட்டி மனப்பான்மை கொண்ட கூட்டங்களாகவும் உள்ளனர்.

சாதியினால் இந்துக்களின் தர்ம நெறிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையைப் பார்க்க பரிதாபமாக உள்ளது. பொது நலன் என்கிற உணர்ச்சியையே சாதி கொன்றுவிட்டது. உதவும் உணர்ச்சியையும் அது அழித்துவிட்டது. மக்களிடையே பொதுக் கருத்து ஏற்படுவதற்கும் வழியில்லாமல் இருக்கிறது. இந்து மதத்தவன் ‘பொது மக்கள்’ என்று கருதுவது தன் சாதியினரையே; தன் சாதிக்கு மட்டுமே அவன் பொறுப்பாளியாக இருக்கிறான். தன் சாதிக்கு மட்டுமே அவன் விசுவாசம் உள்ளனவாக இருக்கிறான்.

நல்ல இயல்புகளைச் சாதி அடக்கி விடுகிறது. பொது ஒழுக்கம் என்பதாக அல்லாமல், இங்கு சாதி ஒழுக்கமே இருக்கிறது. தர்ம உணர்ச்சி இருக்கிறது. அது தம் சாதியினரோடு தொடங்கி, தம் சாதியினரோடு முடிந்து விடுகிறது. இரக்க உணர்ச்சி இருக்கிறது. அது மற்ற சாதி மனிதர்களிடம் காட்டப்படுவதில்லை. நல்லவரும் உயர்ந்தவருமான பிற சாதியைச் சேர்ந்த ஒருவரை இந்து அங்கீகரிப்பானா?

சாதி என்ற அடித்தளத்தின்மீது எதையுமே உங்களால் கட்டமுடியாது. ஒரு தேசத்தை உங்களால் உருவாக்க முடியாது. உயர்ந்த நெறிகளையும் உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக்கக் கொண்டு நீங்கள் உருவாக்கும் எல்லாமே உருக்குலைந்து போகும்.

0

Share/Bookmark

நெகடிவ் எண்ணங்கள்

$
0
0

autoபேசு மனமே பேசு / அத்தியாயம் 4

நாம் அனைவரும் தினமும் பலமுறை, எண்ணற்ற பல விஷயங்களுக்காக, நமக்குள் பேசிக்கொண்டே இருக்கிறோம்.

நண்பர்கள் யாராவது அருகில் வந்து, ‘என்னய்யா, அப்போதிலிருந்து கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன்…. கண்டுக்கவே இல்லியே?…’ என்றோ, ‘என்னப்பா, எதிரே வந்தாக்கூட கண் தெரியாத மாதிரி போற. என் மேல ஏதாவது வருத்தமா?’ போன்ற கேள்விகளுக்கு, ‘ அடடா அப்படியெல்லாம இல்லப்பா. நான் கவனிக்கலே, ஏதோ நெனச்சிக்கிட்டிருந்தேன்… அதான்…’ என்று சங்கடமாக பதில் சொல்வோம்.

இந்த அனுபவங்களுக்கு ஆளாகாதவர்கள் யாருமே இருக்க முடியாது. நாம், நமக்குள் ஆழ்ந்து, ஏதோ ஒரு காரியத்தைப் பற்றியோ, முக்கிய விஷயங்களையோ, சிந்தித்துக் கொண்டிருப்போம். அதாவது நமக்குள்ளே பேசிக்கொண்டு இருந்திருப்போம். இதற்குக் காரணம், பிரச்னைகளோ, கனவுகளாகவோ இருக்கலாம். சில சமயங்களில், தெருக்களில், சிலர் தமக்குள்ளே பேசிக்கொண்டு (வெளியில் கேட்கும் அளவுக்கு) போவதை பார்த்திருப்போம். அந்த அளவுக்கு சுற்றுப்புறத்தையே மறந்து குறிப்பிட்ட சூழலில் அல்லது பிரச்னையில் அவர் மூழ்கியிருக்கிறார் என்று சொல்லலாம். இவ்வாறு நமக்குள் நடக்கும் உரையாடல்கள்தான், நம்மிடம் நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்களை உருவாக்குகின்றன.

‘என்னால், இது முடியாது..’ ‘எங்கே முடியப் போகிறது’, ‘முடிந்தால் நன்றாக இருக்கும்’, போன்ற  எண்ணங்களின் நேரடி அர்த்தம், ‘என்னால் முடியாது’ என்பதுதான். இதுபோல ‘முடியாதுகள்’ ‘காலையில் சீக்கிரமாக எழுந்திருப்பது முதல் திட்டமிட்டபடி நடப்பது பற்றிய சந்தேகம்’ வரை பல விதங்களில் இருக்கும். இவைதவிர, நேரடியாக முடியாது என்பது ஒரு வகையான எதிர்மறைப் பதிவு.

இதைத் தவிர, நிறைவேறாத எதிர்பார்ப்புகள் மற்றும் சந்தேகங்கள் ஆகியவையும் இந்த வகையைச் சார்ந்ததுதான்.

‘நான் மட்டும் அப்படிச் செய்திருந்தால்’ ‘எனக்கு மட்டும் அதிர்ஷ்டம் இருந்திருந்தால்’… ‘வாய்ப்பு கிடைத்திருந்தால்’… ‘பணக்காரனாகப் பிறந்திருந்தால்…’ – இன்னும் இதுபோன்ற கணக்கற்ற ‘இருந்தால்கள்’ எல்லாமே நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ளும் வேகத் தடைகள்.

‘எனக்கு நேரம் சரியில்லை’… ‘அதிர்ஷ்டம் இல்லை’… ‘என்னால் அந்த மாதிரி நடந்துக்க முடியாது’… போன்ற சுய தடைகள் மனத்தில் எதிர்மறை எண்ணத்தை உருவாக்கும் வழிகள். இதன் மூலம் நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் செய்தி, ‘எதற்கும் முதலில் தயங்க வேண்டும்… சந்தேகப்பட வேண்டும்…! இதன் மூலம் நமக்குள் உள்ள திறமைகளைக்கூட நாம் வெளியே வர அனுமதிப்பதில்லை. புதிய திறமைகளைப்பற்றி நினைத்துப் பழக மறுப்பது போன்றவையும் இதனால் இயல்பாக நிகழும்.

அதே சமயம் வாழ்க்கையில் பிரச்னைகள் ஏற்பட்டால் அவற்றை எதிர்கொண்டு, ‘வெற்றி பெற்றால் நல்ல வாழ்க்கை, இல்லாவிட்டால் பார்த்துக்கொள்ளலாம்’ என்கிற ரீதியிலாவது முயற்சிப்பவர்கள், நேர்மறை எண்ணங்களை மனத்தில் புகுத்தத் தயாராக இருக்கிறார்கள் என்று அர்த்தம். இதற்கு மிகவும் படித்திருக்கவோ, இயல்பிலேயே பல திறமைகளை வளர்த்தவர்களாகவோ இருக்க வேண்டிய அவசியமே இல்லை. சாதாரண குடும்பத்தில் பிறந்து, அங்கேயும் நிலைக்க முடியாமல், பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர்கள் ஏராளமான பேர்கள் இருக்கின்றனர். இவர்களில் வாழ்க்கையை சவாலாக எடுத்துக்கொண்டவர்கள் வெற்றியே பெறுகிறார்கள். தொடர்ந்து பிரச்னைகள் வந்தாலும், நேர்மறை எண்ணங்கள் மூலம் எதிர்கொண்டு, அதன் பாதிப்பிலிருந்து வெளியே வருகிறார்கள். முயற்சியைத் தொடர்கிறார்கள். அதனால் வெற்றி பெறுகிறார்கள்.

சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் அப்படிப்பட்ட பெண்மணியின் வாழ்க்கைச் சித்திரம் வெளியாகியிருந்தது. காதல் திருமணம் செய்து கொண்ட நிர்மலா என்ற அந்தப் பெண்ணுக்கு, அடுத்த வருடத்திலேயே மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. தன்னை மணந்து கொண்டவன், ஏற்கெனவே மணமாகி இரு குழந்தைகளுக்கும் தகப்பன் என்பதுதான் அது. அதற்குள் ஒரு பெண் குழந்தையும் பிறந்து, வறுமையைப் பங்கு போட்டுக்கொள்ள ஆரம்பித்தது. இதன்கூடவே, தெரிய வந்த உண்மையை வைத்து தினமும் சண்டை, பிரச்னை. நிர்மலாவுக்கு இவை நடந்தபோது வயது 20 மட்டுமே. ஏற்கெனவே வறுமை பழக்கமாகிவிட்டிருந்தாலும், குழந்தையோடு சண்டை, தகராறு என்பது தாங்க முடியாமல் இருந்ததால், அம்மாவின் வீட்டுக்கே வந்துவிட்டார். அங்கேயும் மனமுவந்த வரவேற்பில்லை என்பது வேறு விஷயம். சிறு வயதிலேயே மூன்று சக்கர வண்டியை ஓட்டப் பழகியிருந்த நிர்மலாவுக்கு ஆட்டோ ஓட்டிப் பிழைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் எழுந்தது.

ஆனால் அவரது குடும்பத்தில், தமக்கையைத் தவிர அனைவரும் நிர்மலாவின் இந்த முடிவை எதிர்த்தனர். என்றாலும், வாழ்வதற்கு ஏதாவது செய்துதானே ஆகவேண்டும். குழந்தையை நல்ல விதத்தில் வளர்க்க வேண்டும் என்கிற அவரது ஆழ்ந்த விருப்பம், மனத்தில் நம்பிக்கையை, உறுதிப்பாட்டை உருவாக்கியது. ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்ட ஆரம்பித்தார். வீட்டில், வெளியில் பல்வேறு விதமான பேச்சுக்கள் எதிர்ப்புகள் எழுந்தன. ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் நிர்மலா உழைக்க ஆரம்பித்தார். பல நாட்கள் அம்மா வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு ஆட்டோவில் தங்கிய நாட்களும் இருந்தன. ஆனால் மற்றவர்களை நிலைகுலையச் செய்யும் சம்பவங்களும், பேச்சுக்களும், நிர்மலாவை உறுதிப்படுத்தின. இந்த உறுதிப்பாடு நிலைத்ததால், அவரை மற்றவர்களும், வெளியுலகிலும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தனர். இந்த விதத்திலேயே தன் உழைப்பையும், மன உறுதியையும் நம்பி தொடர்ந்து செயல்பட்டதால், அவர் வெற்றி பெற்றார். தனது பெண்ணை ஆங்கில வழிக் கல்வி பயிலும் தரமான பள்ளியில் படிக்க வைத்து வருகிறார்.

நிர்மலாவின் உதாரணம், மிகச் சாதாரணமான பின்னணியைக் கொண்ட, நேர்மறை எண்ணங்களால், அது குறித்த தொடர்ந்த உள் உரையாடல்களால் வெற்றி பெற்ற பெண்மணியைப் பற்றியது. இது போன்ற நமக்குத் தெரிந்தவர்களும் இருப்பார்கள். ‘ஏதோ அவனால் முடிந்தது, ஆயிரத்தில் ஒரு உதாரணம், இதையே எல்லோரும் செய்தால் வெற்றி பெற முடியுமா?’ என்று நினைத்தால், தோல்விக்காக உறுதியான களம் அமைத்துக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.

எதிர்மறை எண்ணங்களை பலர் ‘சமாதானமாக’ வெளிப்படுத்துவார்கள். ‘நமக்கேன் வம்பு’… அவனவன் விதி… ‘எதுக்கு ரிஸ்க் எடுக்கனும்’… ‘இப்படித்தான் வாழ்க்கைன்னு ஆயிடுச்சி’… உள்ளதும் போச்சுன்னா என்ன செய்யறது…’ ‘நம்ப ஜாதகம் அப்படி’… இவற்றுடன் கூட அப்பாவியான முக பாவனை, பயந்த முக பாவனை, தயக்கமான முக பாவங்கள், நடத்தைகள், ‘ரெடிமேட் சிரிப்பு’, எதற்கும் முதலில் ‘ஸாரி’ சொல்லும் மனோபாவம்…, நன்றாக அடியோ, பேச்சோ வாங்கிவிட்டு, அதுவும் அதற்கு ஏற்றார்போல பெரிய தப்பு ஏதும் செய்யாமலே, மேற்படி விஷயங்களை அனுபவித்துவிட்டு, என்ன வருத்தமா? வலிக்குதா என்று கேட்டால் காமெடி நடிகர் வடிவேலு பாணியில் ‘லைட்டா வலிக்குது’ போன்றவை எதிர்மறை மனப்பான்மையின் சமாதானமான அல்லது சாத்விகமான வெளிப்பாடுகள்.

இவற்றை மாற்ற வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற, நியாயமான முறையில் போராடவும், நமது திறமைகள் அனைத்தையும் சோதித்துப் பார்க்கவும் தயாராக இருந்தாலே எதிர்மறை உரையாடல்கள் வலுவிழந்து போகும். அந்த இடத்தில் நேர்மறை உரையாடல்கள் நிகழ ஆரம்பிக்கும். இவை தாம் எண்ணங்களாக, நம்பிக்கைகளாக வெளிவந்து நம்மைக் காப்பாற்றும். முன்னேற்றும்.

0

Share/Bookmark

ச்சே என்றொரு நச்சுப்பாம்பு

$
0
0

psychoஒரு கனவின் வரைபடம் / அத்தியாயம் 4

ச்சே இறந்துவிட்ட செய்தி கிடைத்ததும் பலர் போன்போட்டு மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். ஆனால், எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. எப்படி இறந்தான் என்று கேட்டேன். இயற்கை மரணம் என்று சிலரும் தற்கொலையாக இருக்கலாம் என்று சிலரும் சொன்னார்கள். என் வருத்தம் மேலும் அதிகரித்தது. ச்சேயின் மரணம் மிக மிகக் கொடூரமானதாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். உடம்பை எடுத்துப்போடக்கூட ஆளில்லாமல் மாநகராட்சியின் குப்பை  வண்டியில் அநாதைப் பிணத்தைப்போல் தூக்கிப்போட்டு எடுத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டியவனுக்கு இயல்பான நல்லடக்கம் நடந்தது என்றால் எப்படி அதை ஏற்றுக்கொள்ள முடியும்?

வேறென்ன… தான் நட்ட மரத்தின் கனிகளை ஒருவன் புசிக்கக்கூடாதா என்று கேட்டவன் உடல் புழுத்து அழுகி அல்லவா இறக்கவேண்டும். ஆயிரம் பேர் கூடியிருக்க கோவில் தீப ஆராதனைத் தட்டில் சிகரெட் பற்ற வைத்தவனுக்கு இயற்கை மரணம் என்றால் எப்படி என் மனம் ஆறும். மசூதியின் பாங்கொலியை இழவு வீட்டு ஒப்பாரியுடனும் நரியின் ஊளையுடனும் ஒப்பிட்ட ஒருவனுக்கு இயற்கை மரணம் எப்படி ஏற்படலாம்? ஓவியக் கண்காட்சி என்ற பெயரில் நிர்வாணப்படங்களை அடுக்கிவைத்த ஒருவன் தற்கொலை செய்துகொண்டிருந்தால்கூட எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? கருவறைக்குள் தமிழ் நுழைய முடியாதது குறித்த விவாதத்தில் அரபி மொழியில் நடக்கும் ஐந்து நேரத் தொழுகையைத் தமிழில் மாற்றப் போராடுங்களேன் என்று எள்ளி நகையாடியவனுக்கு இப்படியான ஒரு மரணம் ஏற்பட்டதை எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும்? நச்சுப் பாம்புகளுக்கு நல்ல சாவு கிடைக்கக்கூடாது.

என் கவிதைத் தொகுப்புக்கு அரசின் பரிசு கிடைத்ததைக் கொண்டாடும் கூட்டத்தில் அவன் நடந்துகொண்டவிதம் இன்னும் என் மனதில் ஆழப்பதிந்திருக்கிறது. அவனும் அவனுடைய அல்லக்கைகள் கூட்டமும் கடைசி வரிசையில் நாற்காலிகளை வட்டமாகப் போட்டுக்கொண்டு தனியாக ஒரு கூட்டத்தை நடத்தினர். மேடையில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளும் அமைச்சர் பெருமக்களும் தொழிலதிபர்களும் என் கவிதையை ரசித்து ரசித்து பேசிக் கொண்டிருக்க இந்த ச்சே எதையும் பொருட்படுத்தாமல் கெக்கலி கொட்டிச் சிரித்துக்கொண்டிருந்தான். நான் எழுதுபவை கவிதைகள் இல்லையாம். லட்சக்கணக்கில் என் புத்தகங்கள் விற்பதில் ஏற்பட்ட பொறாமைக்கு நான் எப்படிப் பொறுப்பேற்க முடியும். அவனைப் போல் ரகசியக் கூட்டத்துக்கு நான் எழுதவில்லை. புரியாத மொழியில் எழுதுவதும் யாராலும் சீண்டப்படாமல் இருப்பதும்தான் கலை என்றால் அந்தக் கலை எனக்குத் தேவை இல்லை.

என் சமூகம் என்னைத் தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறது. ஒவ்வொரு காதலனும் காதலியும் முதல் முதலாக எழுதும் காதல் கடிதம் என் கவிதைகள் இன்றி ஆரம்பிப்பதில்லை. முடிவதும் இல்லை. நான் காலத்தின் கவிஞன். நான் தீ என்று எழுதினால் காகிதம் பற்றிக் கொள்ளும். மலர் என்று எழுதினால் காகிதம் மணம் வீசும். புரட்சிப் போராளிகளின் வீர முழக்கமாக என் பாடல்களே இருக்கின்றன. வணிகப் பெரு நிறுவனங்களின் முத்திரை விளம்பர வாசகமாகவும் என் கவிதைகளே இருக்கின்றன. என் சமூகத்தின் திருமணச் சடங்குகளில் ஒலிப்பதும் என் பாடல்களே. இழவு வீட்டில் ஒலிக்கும் ஒப்பாரிப் பாடல்களும் என் பாடல்களே. என் சமூகத்தின் சம்மதத்தோடு நான் கர்வமாக இருக்கிறேன். அவனால் ஒரு காலத்திலும் எட்டியிருக்க முடியாத சிகரத்தில் என் கொடி பறந்துகொண்டிருந்தது. கோபுரத்தின் மேல் போய் உட்கார்ந்த குப்பையுடன் என்னை ஒப்பிட்டுப் பேசிய அவன் இன்று இல்லை. கூமுட்டைகளை மட்டுமே இட்ட ஒரு கோழி அவன். நானோ பொன் முட்டையிட்டு வரும் வாத்து.

இறந்த ச்சேயின் உடலை அவனுடைய விருப்பத்துக்கு மாறாக எரித்துவிட்டார்களாம். உண்மையில் அவனுடைய உடலை காலாகாலத்துக்கும் பாதுகாத்துவைத்திருக்கவேண்டும். பெருந்தலைவர்களுக்கும் வழிகாட்டிகளுக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்திவிட்டுப் போவதுபோல் இவனுக்கும் ஒரு சமாதி கட்டி வருவோர் போவோர் கையில் எல்லாம் செருப்பும் விளக்கமாறும் கொடுத்து அடிக்கச் சொல்லியிருக்கவேண்டும். ஒருவேளை அத்தனை செருப்பும் விளக்கமாறும் ஏற்பாடுசெய்வது சிரமம் என்று கருதிவிட்டார்களோ என்னவோ. ஆனால், அந்தக் கவலை தேவையற்ற ஒன்று. மக்கள் கோவில்களில் பூஜைக்கு பழம், தேங்காய் வாங்கிக் கொண்டுவருவதுபோல் ச்சேவுக்கான பூஜைப் பொருட்களை கையோடு பையில் எடுத்துவர தயாராகவே இருப்பார்கள். கலகக்காரனுக்குத் தரப்படும் மரியாதையும் கலகமாகத்தானே இருக்கமுடியும். இப்போதும் எதுவும் கெட்டுவிடவில்லை. இப்படி ஒரு சமாதியைக் கட்டிவைத்தால் அதற்கு ஆகும் மொத்தச் செலவையும் நானே ஏற்றுக்கொள்கிறேன்.

என் சக கவிஞரின் மறைவின்போது அவன் நடந்துகொண்ட விதம் உங்களுக்கு நினைவிருக்கும். இறந்தவர்களைப் பற்றி இழிவாகப் பேசக்கூடாது என்ற மரபுகூடத் தெரியாமல் அவ்வளவு வெறுப்பைக் கக்கியிருந்தான். மரணத்தினால் ஒருவருடைய படைப்புகள் மேம்பட்டுவிடுவதில்லை. உயிருடன் இருக்கும்போது சொல்லும் வார்த்தைகளையேதான் மரணத்துக்குப் பிறகும் சொல்வேன் என்று எக்காளமிட்டான். உன் நண்பனின் அஞ்சலிக் கூட்டத்தில் ஒருவர் இப்படிப் பேசினால்தான் உனக்கு உறைக்கும்.. உன் அஞ்சலிக் கூட்டத்தில் அப்படிப் பேசினால்தான் உன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு அது உறைக்கும் என்று சொன்னேன். என் அஞ்சலிக் கூட்டத்திலும் வந்து நீங்கள் உங்கள் கருத்துகளை அப்படியே பேசிக்கொள்ளுங்கள். இது உங்களுக்கான என் உயில் வாசகம் என்று சொன்னான். இதோ உங்கள் முன்னால் நான் நிற்கிறேன்.

ச்சேயின் மீதான என் வார்த்தைகள் உண்மையில் என்னுடையவை மட்டுமே அல்ல. இறக்கும் தறுவாயில் இருப்பதாக மனைவிக்குப் போன் போட்டுச் சொன்னபோது இன்னும் உயிர் இருக்குல்ல… செத்தப் பெறகு சொல்லுங்க… கட்டிக்கிட்ட தோஷத்துக்கு தலைல தண்ணி ஊத்தி முழுகிக்கறேன்னு சொன்னார்களாம். அந்த மாதரசியை நான் இங்கிருந்தே வணங்குகிறேன்.

அவனுடைய அம்மாவின் உடலை வீட்டின் கூடத்தில் கிடத்தி வைத்திருந்தார்கள். டில்லி, பம்பாய் பக்கம் இருந்த மகன், மகள்களெல்லாம் வந்து சேர்ந்துவிட்டனர். பக்கத்து ஊரில் இருந்த இவன் போயிருக்கவில்லை. கடைசியாக ஒருமுறை இவன் வந்து முகத்தைப் பார்க்கவேண்டும் என்று இரண்டு நாட்கள் அந்தத் தாயின் உடலை நடுக்கூடத்தில் கிடத்தியிருந்தார்களாம். இவன் போகவே இல்லை. ஒருவேளை அந்தத் தாயும் நான் செத்தாலும் என் முகத்தில் முழிக்காதே என்று சொல்லியிருக்கக்கூடும். ஈடிபஸின் இருண்ட நிழல் எங்கெல்லாம் கவிழ்ந்திருக்கும் என்பது யாருக்குத் தெரியும்?

இதையெல்லாம் விடுங்கள். சுவாமிஜி எவ்வளவு பெரிய மகான். அவருடைய கொள்கைகளோடு எனக்கு மாறுபாடு இருந்தாலும் அவரைக் கண்டால் நான் எழுந்து மரியாதை தருவதுண்டு. என் ஆசான் எனக்குக் கற்றுக் கொடுத்த பாடம் அது. ஆனால் இந்த ச்சே என்ன செய்தான்… சுவாமிஜி பங்கேற்ற ஒரு விழாவுக்கு இவனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. சுவாமி அரங்குக்குள் நுழைந்ததும் மேடையில் இருந்தவர்கள், அரங்கில் இருந்த பார்வையாளர்கள் என அனைவரும் எழுந்து நின்று வரவேற்புக் கொடுத்தனர். மேடையில் அமர்ந்திருந்த இவனோ அதுவரையில் வெறுமனே உட்கார்ந்திருந்தவன் அவர் நுழைந்தது தெரிந்ததும் காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்தான். எவ்வளவு திமிர். இதுவா நாகரிகம். இதுவா நம் பண்பாடு?

அரசு கொடுக்கும் ஒரு விருது உனக்குப் பிடிக்கவில்லையென்றால் நீ என்ன செய்யவேண்டும்? விருதுக் குழுவினர் உன்னிடம் தனிமையில் அதைச் சொல்லும்போதே வேண்டாம் என்று மறுத்திருக்கவேண்டும். மாண்புமிகு முதலமைச்சர் விருது கொடுக்கும்போது அதை வாங்கி, அவருக்கு முன்னாலே அதைக் கீழே வீசி எறிந்துதான் மறுப்பைத் தெரிவிக்கவேண்டுமா? என்னவொரு அராஜகம் இது? உன் கலை உனக்கு இதைத்தான் கற்றுத் தந்திருக்கிறது என்றால் அதன் பெயர் கலை அல்ல; காட்டுமிராண்டித்தனம்.

அதிலும் அந்த விருதை மறுத்ததற்கு சொன்ன காரணங்களில் ஒன்று என்ன தெரியுமா..? அரசு சாராயத்தை விற்று சம்பாதித்த காசில் தரப்படும் விருது இது; எனவே இதை நான் மறுக்கிறேன் என்று சொன்னான். சாத்தான் வேதம் ஓதுவது என்பதைச் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அன்று நேரில் பார்த்தேன். மாதந்தோறும் பவுர்ணமியன்று குடிகாரர்களை அழைத்துவந்து கூட்டம் நடத்திய ஒருவன் சொல்கிறான், அரசு சாராயத்தை விற்பது தவறாம். அந்த மாதாந்திரக் கூட்டத்துக்கு வருபவர்களுக்கு வாசலிலேயே கையில் மல்லிகைப் பூவைக் கட்டிவிட்டு கள்ளோ சாராயமோ கொடுத்துத்தான் அனுப்புவார்களாம். அதாவது தனி மனிதன் குடிக்கலாமாம். அரசு சாராயத்தை விற்கக்கூடாதாம். இதே ச்சே, மது ஒழிப்பு மாநாட்டில் குடித்துவிட்டு குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்துபவர்களைப் பற்றி ஒரு காந்தியவாதி வயிறெரியத் திட்டியபோது, குடிக்காதவங்க மட்டும் குடும்பத்தைத் தலைக்குமேல தூக்கி வெச்சுக் கொண்டாடறாங்களாக்கும் என்று கேலி பேசியவன், மாண்புமிகு முதல்வரை சாராய வியாபாரி நேருக்கு நேராக நின்று ஏசினான். இவன் இத்தனை நாள் உயிருடன் இருந்ததே எனக்குப் பெரிய ஆச்சரியம்.

psycho2இவன் இன்னொரு ஓவியக் கண்காட்சி நடத்தினான். மனித குமாரனுக்கு மட்டுமல்ல… சாத்தானுக்குமே தலை சாய்க்க இடம் கிடையாது என்பது அன்று உறுதியானது. இங்கிலந்து அரசி ஏழை இந்தியன் ஒருவனுக்கு கால் அமுக்கிவிடுவதுபோல் ஒரு படம் வரைந்திருந்தான். சங்கராச்சாரியார் தலித் ஒருவருக்கு கால் கழுவி பாத பூஜை செய்வதுபோல் இன்னொரு படம். இப்படி ஒவ்வொரு விஷயத்துக்கும் இவனுடைய தீர்ப்பாக வரைந்து தள்ளியிருந்தான். தேவர் பெருமகனாரும் இமானுவேல் சேகரனும் கட்டித் தழுவிக்கொள்வதுபோல் வரைந்தபடம் ஒரு கையை இழப்பதில் போய் முடிந்தது. மோடி மசூதியில் மண்டியிட்டுத் தொழுவதுபோல் வரைந்த படம் இவனுடைய தலைக்குத் தகுதியில்லாத ஒரு விலையை நிர்ணயித்தது. நம் நாட்டிலிருந்தே விரட்டியடிக்கப்பட்ட இவனுக்கு அமெரிக்கா அடைக்கலம் தந்தது. விமான நிலையத்தில் இறங்கியவன் அமெரிக்க சுதந்தர தேவியை அரபு நாடு ஒன்றில் தூக்கிலிடுவதுபோல் வரைந்து கையோடு எடுத்துச் சென்ற ஓவியத்தை அங்கு வெளியிட்டான். அடுத்த விமானத்திலேயே மூட்டைகட்டி அவனை அனுப்பிவிட்டார்கள். எங்கு சென்றாலும் வம்பிழுப்பது… இது ஒன்றுதான் அவனுடைய கலைக் கோட்பாடாக இருந்திருக்கிறது.

அவனுடைய மரணம் எனக்கு பெரிய வருத்தத்தையே தந்திருக்கிறது. இப்படியான கெளரவமான மரணத்துக்குத் துளியும் அருகதை இல்லாதவன். எனக்கு ஏற்கெனவே கடவுள் நம்பிக்கை கிடையாது. இவனுடைய மரணம் எனக்கு கடவுள் இல்லவே இல்லை என்பதை மேலும் உறுதிப்படுத்தவே செய்திருக்கிறது. ச்சே… நீ பிறந்திருக்கவே கூடாது. அதிலும் என் இனத்தில் நீ பிறந்திருக்கவே கூடாது. வெட்கப்படுகிறேன் ச்சே… நீ வாழ்ந்த காலத்தில் நானும் வாழ நேர்ந்தது குறித்து வேதனைப்படுகிறேன்.

இந்தக் கோவிலில் தெய்வம் இல்லை. இந்த பூசாரியிடம் பக்தி இல்லை. இந்த தீபத்தில் ஒளி இல்லை.

0

Share/Bookmark

ஸ்பார்டகஸ் : பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதி

$
0
0

புரட்சி / அத்தியாயம் 3

Plutarch

Plutarch

உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் புளூடார்க் (Plutarch) ஸ்பார்டகஸின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் Life of Crassus  என்னும் நூலில் பதிவு செய்திருக்கிறார்.கிரேக்கத்தில் பிறந்து ரோமில் குடியேறி ரோம் குடிமகமான மாறியவர் புளூடார்க். அலெக்சாண்டர், ஜூலியஸ் சீசர் உள்ளிட்ட பலரின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியவர்.

கபுவா (Capua) என்னும் பகுதியில் கிளேடியேட்டர் பள்ளியில் பயிற்சி பெற்று வந்த ஸ்பார்டகஸ், அங்கிருந்து தப்பி ஒரு பெரும் எழுச்சியைத் தலைமை தாங்கி நடத்தினார் என்கிறார் புளூடார்க். ‘ஸ்பார்டகஸின் யுத்தம் என்று அழைக்கப்படும் கிளேடியேட்டர்களின் எழுச்சியும் இத்தாலியின் வீழ்ச்சியும் நடைபெற்ற தருணம் அது. கபுவாவில் Lentulus Batiatus என்பவர் பல கிளேடியேட்டர்களுக்குப் பயிற்சி அளித்து வந்தார். பெரும்பாலானவர்கள் கால், திரேஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள். ஏதோ குற்றமிழைத்து அதனால் சிறைபிடிக்கப்பட்ட கைதிகள் அல்ல இவர்கள். குரூரமான எஜமானர்கள் வாய்த்ததால், ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு செத்தொழியட்டும் என்று நினைத்து இங்கே சேர்க்கப்பட்டவர்கள். இவர்களில் இருநூறு பேர் தப்பிச்செல்ல திட்டம் தீட்டினர். ரகசியம் வெளியில் கசிந்துவிட்டதால் எச்சரிக்கையடைந்த 78 பேர் கையில் கிடைத்த ஆயுதங்களைத் திரட்டிக்கொண்டு தப்பிச்சென்றனர். நகருக்குள் நுழைந்து மேலும் சில ஆயுதங்களைக் கைப்பற்றினர்.’

புளூடார்க் தொடர்கிறார். ‘ஒரு பாதுகாப்பான பகுதியைச் சென்றடைந்ததும் இவர்கள் (அடிமைகள்) மூன்று பேரைத் தங்களை வழிநடத்தத் தேர்ந்தெடுத்தார்கள். அந்த மூவரில் ஸ்பார்டகஸ்தான் தலைவன். திரேசியனும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவனுமான ஸ்பார்டகஸ் , பலம் பொருந்திய ஒரு நாயகன். என் புரிதலின்படி அவன் மற்றவர்களைக் காட்டிலும் மேலானவனாக, மற்ற குடிமக்களைக் காட்டிலும் உயர்ந்தவனாக, உண்மையான திரேஸியனாகத் திகழ்ந்தான்.’

அரசர்களையும் ஆதிக்கத்தில் இருப்பவர்களையும் வியந்தோதி வரலாறுகள் எழுதிய புளூடார்க், ஸ்பார்டகஸ் என்னும் அடிமையை புகழ்ந்து எழுதியிருப்பது ஆச்சரியமூட்டும் விஷயம் மட்டுமல்ல, முரண்பாடானதும்கூட. ஆலன் உட்ஸின் வார்த்தைகளில் சொல்வதானால், ‘எதிரியாக இருந்தும், ஸ்பார்டகஸ் குறித்து மிக நல்ல அபிப்பிராயத்தை புளூடார்க் கொண்டிருந்ததற்கான காரணங்களை நாம் கண்டுபிடித்தாகவேண்டும்.’

இரு காரணங்களை உட்ஸ் முன்வைக்கிறார். ஒன்று, எவராலும் மறுக்கமுடியாதபடி ஸ்பார்டகஸின் வெற்றி அழுத்தமானதாகவும் ரோம சாம்ராஜ்ஜியமே ஏற்கும்படி அதிர்ச்சியூட்டும்படியும் இருந்திருக்கிறது. இரண்டாவது, ஸ்பார்டகஸை உயர்த்திக் காட்டுவதன்மூலம் ரோமர்களின் வீழ்ச்சியைச் சற்றே குறைத்துக் காட்ட வரலாற்றாசிரியர்கள் முயற்சித்திருக்கிறார்கள்.

எப்படி என்று பார்ப்போம். சாதாரண அடிமைகள் ஒன்றுசேர்ந்து ரோம ராணுவத்தைக் கதிகலங்க வைத்துவிட்டார்கள் என்பதுதான் வரலாற்று உண்மை. இதுதான் உண்மையில் நடந்ததும்கூட. ஆனால் இதை அப்படியே பதிவு செய்வது ரோம குடிமக்களுக்கு அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருக்கும். இப்படிப்பட்ட ‘உண்மைகள்’ பரவுவது அரச குலத்துக்கும் சாம்ராஜ்ஜியத்துக்கும் அபாயமானது. அதே சமயம், ஸ்பார்டகஸைக் கண்டும் காணாமல் இருந்துவிடவும் முடியாது. ஒரே வழி, ஸ்பார்டகஸை அசாத்திய பலம் கொண்டவராக, அற்புத சக்தி கொண்டவராகச் சித்தரிப்பதுதான். ஒரு சாதாரண அடிமை ரோம சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்திவிடவில்லை, பேராற்றல் மிக்க அபூர்வமான ஒருவீரனே, ‘மற்றவர்களைக் காட்டிலும் மேலான’ ‘மற்ற குடிமக்களைக் காட்டிலும் உயர்ந்தவனான’ ‘உண்மையான திரேசியனான’ ஒருவனால்தான் ரோம் ஆட்டம்கண்டது என்று சொல்வது ஒரு வகையில் ஆறுதல் அளிக்கக்கூடியது.

புளூடார்க் தொடர்கிறார். ‘கத்தி உள்ளிட்ட கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் அடிமைகள் மவுண்ட் வெசுவியஸ் சரிவுகளுக்கு வந்து சேர்ந்தனர். செய்தி கேள்விப்பட்டு கிராமப்புறங்களில் இருந்த அடிமைகளும் கலகக்காரர்களுடன் இணைந்தனர். அவர்களுடைய (அடிமைகள்) பலம் பெருகத் தொடங்கியது. உணவு, உடைமைகள் தேடி அவர்கள் நகரை வலம் வரத் தொடங்கினர். முதலில் சிறிய வெற்றிகளே கிடைத்தன. பிறகு பெரும் வெற்றிகள் தேடி வந்தன… ராணுவ வீரர்களின் சீருடைகளை அவர்கள் அணிந்துகொண்டனர். அவமானத்துக்குரிய தங்களுடைய பழைய ஆடைகளை அவர்கள் துறந்தனர்.’

அடிமைகள், வீரர்களாக உருபெற்ற தருணம் இது. அடிமை உடை அல்ல, படை வீரனுக்குரிய சீருடையே தனக்குத் தேவை; சங்கிலி அல்ல, வாள்களே தேவை என்று அடிமைகள் உணர்ந்தெழுந்த தருணம் என்றும் சொல்லலாம். சிறு வெற்றிகள் தந்த மகிழ்ச்சியில் உத்வேகம் பெற்று பெரும் சவால்களை எதிர்கொள்ள அடிமை வீரர்கள் உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் நடைபோடுகிறார்கள். அவ்வாறு நடைபோடும்போது அவர்கள் முறையான வீரர்களாகவும் போராளிகளாகவும் மாறியிருந்தனர். உன்னதமான உணர்வுகள் அவர்களுடைய உள்ளத்தில் பொங்கியெழுந்திருக்கும்.

ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் ஒருவன் திமிறி எழுந்து அடிமைத்தனத்தில் இருந்து விடுபடும்போது ஒரு வீரனாக உருமாறுகிறான். அதுவரை சாமானியனாக இருந்த அவன், அந்தத் தருணத்தில் அசாத்திய பலம் பொருந்தியவனாக மாறுகிறான். ‘வரலாற்றில் நடைபெற்ற ஒவ்வொரு புரட்சியிலும் ஒவ்வொரு வேலை நிறுத்தத்திலும் இப்படிப்பட்ட உணர்வுகள் மேலேழும்புவதைக் காணலாம்’ என்கிறார் உட்ஸ். ‘சாமானிய தொழிலாளிகள் (அடிமைகளின் வழிவந்தவர்கள்) தங்களுடைய மெய்யான உயரத்துக்குத் தங்களை உயர்த்திக்கொள்கிறார்கள். சுதந்தரமான ஒரு ஆணாகவும் பெண்ணாகவும் நடந்துகொள்கிறார்கள்.’

சாமானியர்களின் போராட்டத்தை ஓர் அரசு இன்று எப்படி அலட்சியமாக மதிப்பிட்டு எதிர்கொள்கிறேதா அப்படியேதான் அன்றும் செய்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் உட்ஸ். அடிமைகளின் எழுச்சியை சாதாரண சட்ட ஒழுங்குப் பிரச்னையாகவே ரோம் கருதியிருக்கிறது. சில காவலர்களை அனுப்பி மக்கள் கூட்டத்தை விலக்க முயல்வதைப் போல் ராணுவத்தின் ஒரு சிறு பகுதியை அனுப்பி அடிமைகளைச் சுற்றிவளைத்துக் கொன்றுவிடும்படி மேலிடம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

அவ்வாறே வெசுவியஸில் வீரர்கள் சுற்றிவளைக்கப்பட்டனர். கடினமான மலைப்பகுதியைக் கடந்துதான் அவர்கள் மாற்று வழியில் செல்லமுடியும், ஆனால் அங்கும் ராணுவம் இருந்தது. அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதை புளூடார்க் விவரிக்கிறார். ‘உயரத்தில் தொங்கிக்கொண்டிருந்த கொடிகளையும் வேர்களையும் அகற்றி ஏணிகளை (அடிமைகள்) உருவாக்கினார்கள். தரைக்குச் செல்லும் வரை வளர்ந்திருந்த அந்த ஏணியைப் பயன்படுத்தி எல்லோரும் கீழே இறங்கினார்கள். ஒருவன் மட்டும் மலை உச்சியில் நின்றிருந்தான். ஆயுதங்கள் அனைத்தையும் கீழே போட்டுவிட்டு அவன் தானும் தப்பித்துக்கொண்டான். எதிர்பாராத திசையில் இருந்து வந்திறங்கிய படையைக் கண்டு திகைத்த ரோமானியர்கள் சுலபத்தில் வீழ்த்தப்பட்டனர். அவர்களுடைய கூடாரம் கைப்பற்றப்பட்டது.’

ராணுவ கமாண்டர் கிளாடியஸ் கிளேபர் தனது கூடாரத்தைப் பாதுகாக்கக்கூட போதுமான படைவீரர்களை நியமிக்கவில்லை. இந்த அலட்சியத்துக்கு அவர் பெரும் விலை கொடுக்கவேண்டியிருந்தது. படுக்கையிலேயே பல வீரர்கள் கொல்லப்பட்டதோடு, அவர்களுடைய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. ஸ்பார்டகஸின் படைபலம் இப்போது பல மடங்கு பெருகிப்போனது. எல்லாவற்றையும்விட, ‘நம்மால் போரிடமுடியும், வெல்லமுடியும் என்னும் உணர்வை வீரர்கள் வென்றெடுத்தார்கள்.’ இதுவே அவர்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்கிறார் உட்ஸ்.

spartacus-representative-of-proletariat-3சாமானியர்களை அல்ல, தவிர்க்கவியலாத ஒரு பெரும் சக்தியை நாம் எதிர்த்துக்கொண்டிருக்கிறோம் என்னும் புரிதல் ரோமுக்கு ஏற்பட்டது இதற்கெல்லாம் பிறகுதான். ஸ்பார்டகஸின் பலம் ஒவ்வொரு நாளும் உயர்ந்துகொண்டிருக்கிறது என்பதையும் அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். ஆனால், இதையெல்லாம்விட அவர்களை அதிகம் அச்சுறுத்திய உண்மை எது தெரியுமா?

ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில், தோட்டத்தில், பண்ணையில் பல நூறு அடிமைகளை அடுக்கி வைத்திருந்தனர். நேற்றுவரை அடிமைகள்தாம். ஆனால் இப்போதோ அவர்கள் வலுவான எதிரிகள். இனியும் அவர்கள் உதிரிகளில்லை. சொல்வதைச் செய்து முடிக்கும் உணர்வற்ற ஜடங்கள் இல்லை. ஒவ்வொரு அடிமையும் ஒரு சக்தி. ஒரு பெரும் படையின் பாகம். மறுக்க மட்டுமல்ல எதிர்க்கவும் அவர்கள் துணிந்துவிட்டார்கள். மட்டுமின்றி, வெல்லவும் ஆரம்பித்துவிட்டார்கள். மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் படைகளை அவர்கள் அநாயசமாக முறிடியத்திருக்கிறார்கள். இனி என்னச் செய்யப்போகிறோம் அவர்களை? அடிமைகளைக் கண்டு எஜமானர்கள் அஞ்சத் தொடங்கியபோது, அதுவரை ஒரு திறமையான படைத் தலைவனாக மட்டுமே இருந்த ஸ்பார்டகஸ், ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் பிரதிநிதியாகவும் மாறியிருந்தார்.

 (அடுத்த பகுதி : ஸ்பார்டகஸ் : பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதி – II)

Share/Bookmark

ஜிம் பாடம்

$
0
0

tumblr_m9nehcJ83D1r566gro1_500ஜெயிப்பது நிஜம் / அத்தியாயம் 5

படிப்பு, இசையில் மட்டும் இல்லை. உடல் நலனிலும் நான் கவனமாகவும் ஆர்வமாகவும் இருந்தேன். எனக்கு sight தான் இல்லையே தவிர vision இருந்தது. (இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பிறகு பார்ப்போம்).

நான் பிளஸ் 1 படிக்கும்பொழுது, எங்களது பள்ளிக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு ஜிம்முக்கு மாணவர்கள் அனைவரும் போவார்கள். ஜிம்முக்கு சென்று வந்து அங்கே நடந்த விஷயங்கள், அவர்கள் ப்ராக்டீஸ் பண்ண சங்கதிகள் பற்றி எல்லாம் பேசும்போது எனக்குப் பொறாமையாக இருக்கும். நாமும் ஏன் ஜிம் போகக்கூடாது என்ற எண்ணம் எனக்கு வந்தது.

ஒரு நாள் என்கொயரிக்காக அந்த ஜிம்முக்கு போனேன். அங்கே ஒரு ஜிம் மாஸ்டர். ரொம்ப அருமையான மனுஷன். அவரைப் போய்ப் பார்த்தேன்.

‘எனக்கு ஏதாவது ஸ்பெஷல் ட்ரெயினிங் கொடுக்க முடியுமா சார்?’ என்று கேட்டேன். கேட்டதுதான் தாமதம், உடனே என்கிட்டே வந்து, தோள்ல ரெண்டு அடி
கொடுத்து… ‘என்ன ஸ்பெஷல் ட்ரெயினிங் உனக்கு? ஹூம்…. நல்லாத்தானே இருக்கே
நீ? அப்புறம் எதுக்கு ஸ்பெஷல் அது இதுன்னெல்லாம்’ என்று அதட்டினார்.

என்னைப் பார்த்துப் பரிதாபப்படுபவஙர்களைவிட என் மேல நம்பிக்கை வைத்து என்னை சராசரி மனுஷனா பார்ப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்கு ஒரே குஷி.

‘தேங்க்யூ சார்… அப்போ நாளைல இருந்து நான் ஜாயின் பண்றேன்’

‘அது என்ன நாளைல இருந்து.. ஏன் இன்னைக்கே ஜாய்ன் பண்ண மாட்டியா?’

‘சரி… சார்… இன்னைக்கே ஜாய்ன் பண்றேன். ஈவ்னிங் வர்றேன்.’

‘ஏன்… ஈவ்னிங்… இப்போ என்ன?’

உடனே ஜிம்மில் சேர்த்துக்கொண்டார்.

உனக்கு எதுக்கு ஸ்பெஷல் ட்ரெயினிங் என்று சொன்னாரே தவிர, நான் அங்கே இருக்கும்
ஒவ்வொரு விநாடியும் என்னுடன்தான் அவர் இருந்தார். ஒவ்வொரு அசைவையும் சொல்லித்
தந்தார். மூன்று நான்கு மாதங்களுக்கு இது தொடர்ந்தது. பிறகு எனக்கு எல்லாம் அத்துப்படியாகிவிட்டது.

அங்கே ஜிம்மில் ஒவ்வொரு செக்ஷனா போவேன். அப்பொழுது எல்லாமே மேனுவல்தான். PULL UPS, DUMP BELL, BAR EXERCISE இப்படி ஒவ்வொன்றிலும் நேரம் எடுத்து, விரிவாகப் பயிற்சி எடுத்துக்கொண்டேன். ஜிம்மில் உள்ள ஒவ்வொருவரும் எனக்கு நன்கு பரிச்சயமாகிவிட்டார்கள்.

ஜிம் அனுபவம் மறக்கமுடியாதது. உடலை fit ஆக வைத்துக்கொள்வதற்கு இந்தப் பயிற்சிகள் நன்கு உதவின. இதுபோன இன்னொரு விஷயத்திலும் இது உதவியாக இருந்தது.

கண் பார்வை இல்லே, இவன்கூட என்னத்தைப் பேசுறதுன்னு என்று என்னுடன் பழகத் தயங்கிய பலர் இருந்தனர். குறிப்பாக, கடைசி பெஞ்ச் மற்றும் குறும்புக்கார மாணவர்கள். என்னுடன் ஜெல் ஆவதில் அவர்களுக்குப் பிரச்னைகள் இருந்தன. ஆனால் ஜிம் செல்ல ஆரம்பித்த பிறகு என்னுடன் பேச ஆரம்பித்தார்கள்.

‘ஹேய் … நல்லா இருக்குடா உன் பாடி. ஆர்ம்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கு. எப்படிடா மெயின்டெயின் பண்றே?’ என்றெல்லாம் பேச ஆரம்பிச்சாங்க. நான் ஹீரோ ரேஞ்சுக்கு அவர்களுக்கு டிப்ஸ் எல்லாம் அள்ளிவிடுவேன்.

சரியாகப் பள்ளிக்குச் செல்வேனோ இல்லையோ, ஜிம்முக்கு ஆஜராகிவிடுவேன். அந்தப் பள்ளியின் Arm Wrestling Champion ஆகும் அளவுக்கு இந்த ஆர்வம் என்னைக் கொண்டுச் சென்றது.

இளங்கோவை இதில் ஜெயிக்கமுடியாதுடா என்று மாணவர்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள். விளையாட்டுகளில் கலந்துகொண்டு சாதிக்கமுடியாததை இதில் சாதிக்க முடிந்தது.

மெடலும் கப்பும் வாங்கிக் குவித்தால்தான் சாதனையா என்ன? நான்கு பேரை ஜெயித்தோம் என்னும் உணர்வு போதாதா? அதைவிட பெரிய மகிழ்ச்சி, அங்கீகாரம் வேறு என்ன இருக்கமுடியும்?

தம் பிள்ளைகளைப் படிக்கச் சொல்லி வற்புறுத்தும் பல பெற்றோர்கள், தங்கள் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைப்பதில்லை.

A sound mind in a sound body என்று சொல்வார்கள். இதன் பொருள் பலருக்குப் புரிவதில்லை.

பிள்ளைகளுக்குப் படிப்பு முக்கியம் தான். அதைவிட முக்கியம் அவர்களுடைய உடல் நலனும் ஃபிட்னஸும். எனவே அவர்களை நன்றாக விளையாட அனுமதிக்கவேண்டும். எதிர்கால சூழ்நிலைகளைச் சமாளிக்க பள்ளிப் படிப்பும் வேலையும் மட்டும் போதாது. லைஃப் ஸ்டைல் நோய்கள் என்று சொல்லப்படும், ரத்த அழுத்தம், இதய நோய், உடல் பருமன் போன்றவற்றை பற்றியெல்லாம் அவர்களுக்கு நல்ல விழிப்புணர்வு அளிக்கவேண்டியது அவசியம்.

அதற்கு முதல் படி, உடல் நலன் பேணுவது.

படிப்பு முக்கியம். ஆரோக்கியம் அதைவிட முக்கியம்.

 

Share/Bookmark

Viewing all 405 articles
Browse latest View live