Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all articles
Browse latest Browse all 405

இளவரசன்-திவ்யா : சாதி காதல் அரசியல்

$
0
0

aazham august wrapper-1ஆழம் ஆகஸ்ட் மாத இதழில் இடம்பெறும் கட்டுரைகள் குறித்து ஒரு சிறிய அறிமுகம்.

கவர் ஸ்டோரி : சாதி, காதல், அரசியல் / வித்தகன்

இளவரசன்-திவ்யா விவகாரம் ஒரு காதலில் தொடங்கி, பெரும் மோதல்களில் வளர்ந்து, திவ்யாவின் தந்தையைப் பலிகொண்டு கடைசியில் இளவரசனின் மரணத்தில் முடிவடைந்திருக்கிறது.
இதில் அரசியலின் பங்கு என்ன? சமூகத்தின் பங்கு என்ன? சாதியத்தின் பங்கு? மூன்று பேட்டிகள்மூலம் இந்த மூன்று கேள்விகளுக்கும் விடை தேட முயற்சி செய்கிறது ஆழம் கவர் ஸ்டோரி.
  1. ‘சாதியம் எல்லா மதங்களிலும் வளர்ந்து வருகிறது!’ - விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமார்
  2.  ‘பா.ம.க.வும் வன்னியர் சங்கமும்தான் காரணம்!’ - மனித உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் – மில்டன்
  3. இளவசரன்-திவ்யா திருமணம் சட்டப்படி செல்லாது! - வழக்கறிஞர் கே. பாலு
தமிழ்நாடு 
 
1) நெருக்கடியில் நெய்வேலி / எஸ். சம்பத்
நெய்வேலியில் ஏன் வேலைநிறுத்தப் போராட்டங்கள் அவ்வப்போது நடைபெறுகின்றன? இந்த முறை பிரச்னை எப்படித் தீர்க்கப்பட்டுள்ளது?
2) நம்பர் 1 தற்கொலை நாடு / முல்லை
தற்கொலைகள் ஏன் பெருகுகின்றன? குறிப்பாக, தமிழ்நாட்டில் தற்கொலைகள் அதிகரிப்பதன் சமூகக் காரணங்கள் என்னென்ன?
3) வாலி : நீங்காத நினைவுகள் / ஆர். முத்துக்குமார்
வாலியின் அரசியல், சினிமா பங்களிப்பை அசைபோடும் ஓர் அஞ்சலி.
இந்தியா 
1)  ஒரு பேரழிவின் கதை / ஆதித்யா
உத்தரகண்ட் மாநிலத்தைப் பற்றியும், இமாலய சுனாமி நடைபெற்ற நிலப்பரப்பையும் விரிவாக ஆராயும் இந்தக் கட்டுரை, சீரழிவு ஏற்பட்டதன் காரணம் இயற்கை விளைவா அல்லது மனிதத் தவறுகளா என்று ஆராய்கிறது.
2)  இயற்கை எரிவாயு : விலையேற்றத்தால் யாருக்குப் பலன்? / ரமணன்
இயற்கை எரிவாயு விலை உயர்த்தப்பட்டது தனியாரின் நலன்களுக்காகவா? இதனால் பலனடையப்போகிறார்கள் யார், பாதிக்கப்படப்போகிறார்கள் யார்?
3) ராகவ்ஜி என்ன தவறு செய்துவிட்டார்? / விஜய்-கோபிகிருஷ்ணா
மத்தியப் பிரதேச பாஜக தலைவர் ராகவ்ஜியை மீடியாவும் அவரது கட்சியும் வெறுத்து ஒதுக்கி வைத்திருக்கிறது. இது சரியா? அவர்மீதான குற்றச்சாட்டு என்ன?
4) அம்மா உணவகம் : குறைகளும் தீர்வுகளும் / கோவை ராஜா
அம்மா உணவகம் குறித்து இதுவரை வெளிவராத புதிய தகவல்களும் பார்வைகளும் கொண்ட விரிவான கட்டுரை.
5) இந்திரா காந்தி பாதையில் மன்மோகன் சிங் / பா. சந்திரசேகரன்
NGEGA குறித்து ஒரு தெளிவான, தீர்மானமான அலசல். இத்திட்டம் யாருக்காக வகுக்கப்பட்டதோ அவர்கள் அதனால் பலன் பெறுகிறார்களா என்னும் ஆதாரக் கேள்வியை ஆராயும் கட்டுரையும்கூட.
கல்வி
  • ‘மெக்காலேயே ஓரங்கட்டிவிட்டு வள்ளுவருக்கு உயிர் கொடுத்துள்ளோம்!’ – தியாகு

கல்விக் கொள்கை, மாற்றுக் கல்வித் திட்டங்கள் ஆகியவை குறித்து பி.ஆர். மகாதேவன் எடுத்து வரும் நேர்காணல்கள் வரிசையில் இந்த முறை தியாகுவின் விரிவான பேட்டி இடம்பெறுகிறது. தாய்த் தமிழ்ப் பள்ளியின் நடைமுறை மற்றும் பாடத் திட்டங்கள் குறித்து ஓர் அறிமுகம்.

உலகம்
  • எகிப்தில் என்ன நடக்கிறது? / சத்யா
  • இந்தியர்களை வெளியேற்றும் சவுதி அரேபியா / ஆரோக்கியராஜ்
  • ஐ.நா. சபையில் மலாலா / ரஞ்சனி நாராயணன்
  • டிஜிட்டல் கண்காணிப்பு / என். சொக்கன்
இலக்கியம்
  • அசோகமித்திரன் : க.நா.சுவின் கடைசி இருபது ஆண்டுகள்
  • வண்ணநிலவன் : திராவிட இயக்கங்களும் இலக்கியமும்
 சினிமா
  • சூப்பர்மேன் 75 / அரவிந்தன் சச்சிதானந்தம்

Share/Bookmark


Viewing all articles
Browse latest Browse all 405

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!