ஷ்ரத்தா என்னும் நாடக அமைப்பினர் எழுத்தாளர் இரா. முருகனின் மூன்று நாடகங்களை அரங்கேற்ற உள்ளனர். ஆழ்வார், எழுத்துக்காரர், சிலிக்கன் வாசல் ஆகிய மூன்றும் இரா. முருகனின் சிறுகதைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை.
சென்னை நாரத கான சபாவில் நவம்பர் 14 தொடங்கும் இவருடைய நாடகங்கள் 16, 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.
நாவல், சிறுகதை, திரைக்கதை, கவிதை, மொழிபெயர்ப்பு என்று பல தளங்களில் இயங்கி வருபவர் இரா. முருகன். இதுவரை 22 புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இவருடைய அரசூர் வம்சம், விஸ்வரூபம் ஆகிய நாவல்கள் கிழக்கு பதிப்பகத்தில் வெளிவந்துள்ளன. கதா, இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட விருதுகள் பெற்றிருக்கிறார். இந்தி, மலையாளம்,ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இவருடைய படைப்புகள் வெளிவந்துள்ளன.
தமிழில் மாந்திரீக யதார்த்தக் கதையாடலாக இவர் எழுதிய அரசூர் வம்சம் நாவல் ஆங்கிலத்தில் ‘கோஸ்ட்ஸ் ஓஃப் அரசூர்‘ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகி இருக்கிறது.
கமல் ஹாசனின் ‘உன்னைப் போல் ஒருவன்’ (2009), அஜீத் குமாரின் பில்லா 2 (2011) ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
இடம் : நாரத கான சபா அரங்கம், ஆழ்வார்பேட்டை
தேதி : நவம்பர் 14, 16, 17 மற்றும் 19.
நேரம் : மாலை 7 மணி.
மேலதிக விவரங்களுக்கு : www.theatreshraddha.org