பெரியார் சுயமரியாதைப் பிரச்சார அரங்கில் நேற்று பொங்கிய பொங்கல் பானை. ராஜிவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன் இணைந்து எழுதிய உடையும் இந்தியா நூலுக்கு கி. வீரமணி எழுதிய மறுப்புரை ‘உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா?’ என்னும் 270 பக்க நூலாக சென்ற ஆண்டே வெளிவந்தது. நேற்றுதான் வாங்கினேன். Breaking India என்னும் ஆங்கில நூல் வெளிவந்தபோது ராம்ஜெத்மலானி ஆற்றிய உரைக்கு அப்போதே பெர்கலி பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் அளித்த மறுப்பு உள்பட ஏராளமான மறுப்புரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
கிழக்கு அரங்கில் புதிதாக வெளிவந்துள்ள தன் நூலுடன் ஜனனி ரமேஷ். கிருஷ்ணா ஆனந்த் எழுதிய நூலின் தமிழாக்கத்தை (இந்திய அரசியல் வரலாறு) ஜனனி ரமேஷ் சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறார். சுதந்தரத்துக்குப் பிறகான இந்திய அரசியல் களத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் இந்நூல் விவாதிக்கிறது. ராமச்சந்திர குஹாவின் இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு (2 பாகங்கள்) இணைத்து வாசிக்கவேண்டிய முக்கியமான பதிவு.
பழைய புத்தகக் கடைகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. பெரும்பாலும் பல்ப் நாவல்களே மூட்டை மூட்டையாக இருக்கின்றன. மற்றவை இனி வரலாம்.
விவாதிக்கவும் பேசவும் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் கையெழுத்து வாங்கவும் வரும் வாசகர்களுடன் ஞாநி.
நேஷனல் புக் டிரஸ்ட் அரங்கம்.
கூட்டம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இடமாற்றத்தால் மைனஸ் எதுவும் இல்லை என்றே பல பதிப்பகங்கள் கருதுகின்றன. இன்றும் நாளையும் மேலும் நல்ல கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
0