ஆசியாவின் மிகப் பெரிய புத்தகக் கண்காட்சி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. சில முக்கிய விவரங்கள்.
- 37வது கொல்கத்தா உலகப் புத்தகக் கண்காட்சி ஜனவரி 26 அன்று ஆரம்பமாகியுள்ளது. வழக்கமாக 12 நாள்கள் நடைபெறும் கண்காட்சி இந்த முறை மம்தா பாணர்ஜியின் ஆலோசனையின்படி 15 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 10 வரை கண்காட்சி நடைபெறும்.
- இடம் மிலன் மேலா மைதானம். முழுமையான வரைபடம் இங்கே.
- சென்ற ஆண்டு விற்பனை 15 கோடி. இந்த ஆண்டு விற்பனை மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள்.
- சென்ற ஆண்டு 14 லட்சம் பார்வையாளர்கள் வந்திருந்தனர். இந்த முறை மேலும் 3 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.
- போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
- நுழைவுக் கட்டணம் இல்லை.
- கொல்கத்தாவின் சில முக்கிய இடங்களில் இருந்து அரங்கத்துக்குச் செல்ல இலவசப் பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புத்தக ஆர்வலர்களைக் கவர்ந்து ஈர்க்கவே இந்தத் திட்டம்.
- கிட்டத்தட்ட 800 பதிப்பாளர்கள் பங்கேற்கிறார்கள்.
- இந்த ஆண்டின் சிறப்பம்சம், பங்களாதேஷ். (சென்ற ஆண்டு இத்தாலி).
- அமர்த்தியா சென், அமிதாவ் கோஷ், சஷி தாரூர், பிகோ ஐயர் உள்ளிட்ட 85 பிரபலங்கள் உரையாடுகிறார்கள். முழு விவரம் இங்கே.
0