“எழுச்சி மிகு எண்ணங்கள் கொண்ட இளைஞர்கள்தான்” இந்தியாவின் இன்றியமையாத தேவை. அம்மாதிரியான இளைஞர்கள் இருந்தால் போதும். வளமான இந்தியாவை உருவாக்கி விடலாம் என்றார் சுவாமி விவேகானந்தர். “‘இந்த நாட்டின் இளைய சமுதாயத்தின் உறுப்பினரான நான், என் கடின உழைப்பாலும், மன உறுதியாலும் தோல்வியைத் தோல்வியடையச் செய்து வெற்றி பெற்று என் நாட்டை வளமான நாடாக்குவேன்’ என்று இளைஞர்கள் உறுதியாக நினைக்க வேண்டும்.” என்கிறார் மாண்புமிகு அப்துல் கலாம்.
இன்றைய தலைமுறை நுகர்வுக் கலாசாரத்தாலும் கவனச் சிதறல்களாலும் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன? அவர்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் தடையாக இருப்பதென்ன?
நுகர்வோர் மனநிலை:
ஏழையான சமூகத்தில், அவர்களுடைய தேவை எளிமையா னது, வெளிப்படையானது, நேர்மையானது. அவை உணவு, உடை, உறைவிடம், நன்னீர், ஆரோக்கிய உடல்நலம் ஆகியவைதான். உள்ளூரில் தயாரிக்கும்/கிடைக்கு ம் பொருட்களைக் கொண்டே தேவைகளை ப் பூர்த்தி செய்து கொள்கிறார்கள். அவற்றைக் கொண்டே தங்கள் வாழ்வியலை நகர்த்துகிறார்கள். நடுத்தக் குடும் பங்களிலும், செல்வ வளமிக்க குடும்பங்களிலும்தா ன் ”தேவைகளைத்”தாண்டி ”விருப்பம்” பிரதானமாகியுள்ளது. நீண்ட நாள் ஆசைகள், திடீர் ஆசைகள், குழப்ப மனநிலை, மயக்க நிலை, அந்தஸ்து என பொருட்களை வாங்கிக் குவிக்கும் நுகர்வோர் மனநிலைக் குள் அவர்கள் தள்ளப்பட்டுள்ளார் கள்.
நடுத்தரக் குடும்பங்களில்தான் பெரும்பாலு ம் பொருட்களை வாங்கிக் குவிப் பதா அல்லது சேமிப்பதா என்று முடிவெடுக்கத் தெரியாமல் தவிக்கிறார்கள். நுகர்வோர் மனநி லைக்கு அடிமையாகிற சமூகத்தில் அவர்களை எது மகிழ்விக்கும் என அறியாமல் குழப்பத்தில் உள்ளனர். செல்வம் சேர்க்க வேண்டும் என்ற பேராசைதான் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு மிக முக்கியக் காரணமாக உள்ளது.
பொருட்களை வாங்கிக் குவிப்பதின் பின்னணியில் தங்களின் ”மகிழ்ச்சி “அடங்கியுள்ளது என்பதைக் காட்டிலும் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் முன்பு தாங்கள் ”வளமிக்கவர்கள்” என்று காட்டுகிற மனப்பாங்கே உள்ளது. அதில்தான் அந்தஸ்து அடங்கியுள்ளது என நினைக்கிறார்கள். எதிர் பாலியலை கவர்வதற்கும் மயக்குவதற்குமாக பொருட்களை வாங் கிக் குவிக்கிறார்கள். இதைத்தான் ” பகட்டான நுகர்வு” என வர்ணிக்கிறார் அமெரிக்காவின் பொருளாதார வல்லுனரும், சமூகவியலாளருமான தோர்ஸ்டீன் வெப்லென் (Thorstein Veblen). மகிழ்ச்சி எனச் சொல்லி பொருட்களை வாங்கிக் குவித்தாலு ம் பெரும்பாலும் அவர்கள் வாங்கிக் குவிக்கிற பொருட்கள் பயனற்று இருப்பதைக் காண இயலும்.
தீர்மானிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் தங்களின் தேவைகளைக் கருதி குறிப்பிட்ட சில பொருட்களை வைத்துக் கொள்வதே சமூக நுகர்வு (Social Consumption ) ஆகும். உதாரணமாக ஒருவர் மோட்டார் பைக் வைத்துக் கொள்ளுதல், மொபைல் போன் வைத்துக் கொள்ளுதல், வீடு வாங்கிக் கொள்ளுதல், தரமான பள்ளிகளில் குழந்தைகளைப் படிக்கச் செய்தல் ஆகியவைதான் சமூக நுகர்வுக்கான காரணிகள்.
சுற்றத்தினருக்கு இணையாக வாழ வேண்டும். தங்களின் சுற்றத்தார் படிக்க வைக்கிற பள்ளிகளிலேயே தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும். இதை நிறைவேற்ற விடுமுறை நாட்களில் கூட பணிபுரிகிறார்கள். ஓய்வு பெறும் நாள் வரை ஓயாது ஓடுகிறார்கள். ஒருவர் ஓடுவதைப் பார்த்து அடுத்தவர் ஓடுகிற சமூகமாகத்தான் நுகர்வு மனநிலை இவர்களை மாற்றியுள்ளது.
உதாரணமாக, ஐரோப்பிய அரசுகள் தன்னல வயப்படுதலில் ( Self Exploitation ) ஒருவர் சிக்காமலிருக்க வருடத் தில் குறைந்தபட்சம் நான்கு வாரங்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் இவர்களின் நுகர்வு மனோநிலையால் பந்தைய குதிரைகளாக உள்ளனர்.
தொழில் நுட்பமும் நுகர்வு மனநிலையும்:
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தை பத்திரிக்கைகளின் காலம் என அழைக்கலாம். அதன் பின்னர் ஏற்பட்ட காலத்தை வானொலி மற்றும் சினிமாக்களின் காலமாகச் சொல்லலாம். இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில்தான் தொலைக்காட்சி ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தையும், தற்போதைய காலத்தையும் கணினி, multimedia மற்றும் டிஜிட்டல் காலம் என வர்ணிக்கலாம்.
இன்று ஏதேனும் ஒரு திரைக்கு முன்னால் பலமணி நேரம் இளைஞர்களும் குழந்தைகளும் அமர்ந்திருக்கிறார்கள்.
தொலைக்காட்சிகளின் வருகைக்குப் பின்னரே பெரும்பாலும் விளம்பரங் கள் மக்களை ஆக்கிரமிப்பு செய் தன. சில பன்னாட்டு நிறுவனங்கள் தங் கள் தயாரிப்புகள் தரமானவை என உறுதி செய்தன. ஆகையால் பன்னாட்டு நிறுவனங்களி ன் பொருட்கள் மீதான மோகம் வளர்ந்தது. தரத்தின் அடிப்படையில் விலை குறித்த கவலையின்றி பொருட்களை வாங்கினார்கள். இவர்களைத் தான் பன்னாட்டு நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள், அதன் அதிகாரிகள் குறி வைத்தார்கள். இதற்கு அவர்கள் தொலைக்காட்சி மற்றும் பிரபல இணையதளங்களான Google, Facebook போன்றவற்றை பயன்படுத்திக் கொண்டார்கள்.
தொலைக்காட்சியும் விளம்பரங்களும்:
இந்தியாவில் தொலைக்காட்சி மற்றும் விளம்பரங்கள் குறித்த சில புள்ளி விவரங்களைக் காணலாம்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் 1990கள் வரை அரசு தொலைக்காட்சி சேவைகள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டு வந்தன. 1990கள் முதல் நூற்றுக்கணக்கான தனியார் தொலைக்காட்சி சேவைகள் உருவாகின. 2011 ஆம் ஆண்டில் தொலைக்காட்சியில் விளம்பரங்களை ஒளிபரப்ப ஏற்பட்ட செலவு 333.88 பில்லியன் இந்தியன் ரூபாய். இது 2010 ஆம் ஆண்டைக் காட்டிலும் 13% அதிகம் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் தொலைக்காட்சி மூலம் விளம்பரம் செய்ய 140.26 பில்லியன் இந்தியன் ரூபாயும் , பத்திரிக்கைகள் மூலம் விளம்பரம் செய்ய 133.02 பில்லியன் இந்தியன் ரூபாயும் செலவழிக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எடுக் கப்பட்ட ஆய்வொன்றில் இந்தியாவில் 47.2% வீடுகளில் (150 மில்லியனுக்கும் மேலாக) தொலைக்காட்சி உள்ளது எனவும், 63 % மக்களின் கைகளில் மொபைல் உள்ளது எனவும் தெரிய வந்துள்ளது. விளம்பரங்களின் மூலம் Google இணையதளம் 2011ஆம் ஆண்டில் 25 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், Facebook இணையதளம் 1.8 பில்லியன் டாலர்களையும் வருமானம் ஈட்டியுள்ளது .
பெரும்பாலும் குழந்தைகளுக்கான உணவு வகைகள், குளிர் பானங்கள், சாக்லேட், மொபைல் போன், அழகு சாதனங்கள் பற்றிய விளம்பரங்களே அதிகமாக இடம் பெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகளையும் இளைஞர்களையும் கவர்வதற்காக விளம்பரங்களை மாடல் அழகிகளைக் கொண்டும் நடிக நடிகையர் மற்றும் விளையாட்டு வீரர்களை வைத்தும் வருமானம் ஈட்டுகின்றன உற்பத்தி நிறுவனங்கள்.
கவனச் சிதறல்களும் விளைவுகளும்:
அமெரிக்காவில் நடந்த ஆய்வொன்றில் குழந்தைகளும் இளைஞர்களும் ஒருநாளில் குறைந்த பட்சம் மூன்று மணிநேரம் தொலைக்காட்சி முன்னால் அமர்ந்திருக்கிறார்கள் என்றும், DVD அல்லது சினிமா பார்ப்பதில் ஒரு மணி நேரமும் , கணினி மற்றும் டிஜிட்டல் மீடியா முன்பாக இரண்டு மணி நேரம் அமர்ந்துள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளது. பெற்றோர்கள் மூன்று மணி நேரத்தை ஒருநாளில் தொலைக்காட்சி முன்பாக செலவிடுவதாக அந்த ஆய் வறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் தொலைக்காட்சியின் முன்பாகவே அதிக நேரத்தை இளைஞர்களும் குழந்தைகளும் செலவழிக்கிறார்கள். அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது சமூக நலனுக்கும் உகந்ததல்ல. தனி நபர் நலனுக்கும் நல்லதல்ல. பெரும்பாலும் இளைஞர்கள் தொலைக்காட்சியும் சினிமாவும் பார்ப்பதால் சிகரெட், குடிக்கு அடிமையாகும் போக்கும், பாலியல் சம்பந்தமான கெட்ட சிந்தனைகளுக்கும் உள்ளாகிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தொலைக்காட்சி மற்றும் சினிமாக் களின் மூலமாக வன்முறை சிந்தனைகளும் வக்கிரச் சிந்தனைகளும் அதிகமாகின்றன.
தொலைக்காட்சியின் வருகைக்குப் பின்னர் ஒரே குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அந்நியப்பட்டுள்ளனர். குடும்பத்துக்குள் கூடிப்பேசுதல் என்பது பெருமளவு குறைந்துள்ளது. குழந்தைகளும், இளைஞர்களும் தங்களைச் சுற்றி நடக்கிற விஷயங்களைக்கூட காணாது தொலைக்காட்சி பார்ப்பதில் மூழ் கிக் கிடக்கிறார்கள் அதிக பணிச் சுமையும் கல்விச் சுமையும் காரணமாக இருந்தாலும் விடுமுறை நாட்களில் விருந்தினரை சென்று பார்ப்பதிலும், வீட்டிற்கு வருகிற விருந்தினர்களை உபசரிப்பதிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொலைக்காட்சியில் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளைக் காணும் பொருட்டு தங்களின் செயல் திட்டங்களைத் தள்ளிப் போடுகிறார்கள். பலருக்கும் குறிப்பிட்ட நிகழ்ச்சி ஆரம்பிக்குமுன்னே வீட்டிற்குள் நுழைய வேண்டும் என்ற எண்ணமும் பெருகி உள்ளதைக் காண இயலும்.
அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பவர்களின் நடத்தையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக இளைஞர்களும் குழந்தைகளும் சினிமா, பாடல், மற்றும் விளையாட்டு ஆகியவற்றை காண்பதில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். பெரும்பாலும் தேவையான விடயங்களை அறிந்து கொள்வதற்குப் பதிலாக பெரும்பாலும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மட்டுமே தங்களின் ஆர்வத்தை செலுத்துகிறார்கள். இன்றைய இளைஞர்களுக்கு இந்தியாவின் மத்திய மந்திரிகளைப் பற்றியோ, மாநில அரசின் அமைச்சர்களைப் பற்றியோ, நாட்டின் பொதுநலம் சார்ந்த பிரச்னைகள் பற்றிய அறிவோ ரொம்பவே குறைவாக உள்ளது அல்லது இல்லை என சொல்லலாம். ஒருவேளை சில மந்திரிகளை தெரிந்து வைத்தாலும் அவர்களின் அமைச்சரவை செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வோ அது குறித்த அறிவோ இல்லை.
அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படும் விளைவுகளை சில புள்ளி விவரங்களுடன் காணலாம்.
அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப் பதற்கும் உடற்பருமனாவதற்கும் தொ டர்புள்ளது என RTL (Radio Television Luxumberg Entertainment channel) மற்றும் OECD (Organaisation for Economic Cooperation and developement) ஆகிய இரண்டும் இணைந்து நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் குழந்தைகள் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் ஓடி விளையாடுவது குறைந்துள்ளது. தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பார்த்து , அதில் காட்டுகிற உணவுப் பொருட்களையும், அதிக கொழுப்புள்ள தின் பண்டங்களை வாங்கி உண்ணுவதாலும், தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே நொறுக்குத் தீனி சாப்பிடுவதாலும்தான் உடற் பருமன் ஆகிறது.
OECD மற்றும் World Values Data Bank Survey ஆகிய இரண்டும் இணைந்து நடத்திய ஆய்வில் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் சமூக நலனில் அக்கறையின்மையும், பொது நலச்சேவை செய்வது பெருமளவு குறைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. Social Trust மிகவும் குறைந்து காணப்படுகிறது. அதே வேளையில் அதிகம் தொலைக்காட்சி பார்க்கிற நாடுகளில் ஊழலும் அதிகமாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.
நரம்பியல் விஞ்ஞானிகள் விளம்பரங்களுக்கும் நுகர்வு மனநிலைக்கும் நாம் ஏன் தள்ளப்பட்டுளோம் என்பதற்கு நான்கு காரணங்களை முன்வைக்கிறார்கள்.
முதலாவதாக மனித மூளையானது சூழ்நிலைக்கேற்றார் போல மாறும் தன்மை கொண்டது. ஆகையால் கேட்கிற, பார்க்கிற விடயங்கள் மூளையில் எளிதாகப் பதிந்து விடுகின்றன. இது போன்ற காரணங்களால் மூளை காலத்துக்கேற்றார் போல தொடர்ச்சியாக புதுப்புது நிகழ்வுகளை பதிவு செய்து கொள்கிறது. தியானம் செய்வது மன அமைதியைத் தரும். ஆனால் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் மன அமைதி கெடும். மேலும் மகிழ்ச்சி இராது என நரம்பியல் விஞ்ஞானிகள் கருத்துரைக்கிறார்கள் .
இரண்டாவதாக பெண்களைக் கவர்ச்சியாகக் காண்பிப்பதாலும் பாலியல் சிந்தனைகளைத் தூண்டிவிடுவதாலும் மனிதர்களின் நடத்தைகளில் மாற்றம் ஏற்படுகின்றன.
மூன்றாவதாக விளம்பரதாரர்களால் அறிமுகம் செய்யப்படும் பொருட்களை மேலும் மேலும் வாங்க வேண்டும் என்ற நுகர்வு மனநிலையை இளைஞர்களிடமும் குழந்தைகளிடமும் விளம்பரங்கள் ஏற்படுத்தியுள்ளன.
நான்காவதாக, பெரும்பாலும் தெளிவற்ற மனநிலையிலேயே நாம் இருக்கிறோம். ஆகையால் நாம் வாங்குகிற பொருள் தேவையா தேவையற்றதா என அறியாத குழப்ப நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள் நரம்பியல் விஞ்ஞானிகள்.
விளம்பரங்களின் மூலமாக ஏற்பட்ட அடிமை நுகர்வு மனப்பான்மையாலும், அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதாலும் மன அமைதி கெடுகிறது. இதிலிருந்து வெளிவர மனதைத் தன்வயப்படுத்த வேண்டும். நுகர்வு கலாசாரத்திலிருந்து விடுபடவேண்டும். ஓய்வு நேரத்தை நல்வழிகளில் உபயோகப்படுத்தக் கற்றுக்கொடுக்க வேண்டும். சிறந்த கல்வி, இயற்கையோடு இயைந்த தன்மை, அடுத்தவர்களோடு ஒருங்கிணைத்து செயல்படுதல் என சிறு வயதிலிருந்தே பள்ளிகளும் பெற்றோரும் இயங்கவேண்டும். வளமிக்க வாழ்வைத் திரும்பப் பெறவும் தங்களை மேம்பட்ட சமூகவாதிகளாக அடையாளப்படுத்தவும் வேண்டுமானால் இளைய சமுதாயத்தின் கனவுச் சிதறல்களைத் தடுத்தாகவேண்டும்.
Sources: