2002 தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களில் சிறப்பாகப் பங்காற்றிய நபர்/ நிறுவனங்களுக்கு துறைவாரி விருதுகள் அறிவித்து வருகிறேன்.
விருதுகளுக்கான விதிமுறைகள்
- தமிழில் நேரடியாக உருவாக்கப்பட்ட திரைப்படமாகவோ, தமிழில் மறுஆக்கம் செய்யப்பட்ட திரைப்படமாகவோ, தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட இந்திய மொழித் திரைப்படமாகவோ இருத்தல் வேண்டும்.
- திரைப்படம் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான தேதிகளில் சென்னையில் வெளியாகி இருத்தல் வேண்டும் (மத்திய திரைப்படத் தணிக்கைத் துறை சான்றிதழ் தேதி கணக்கில் கொள்ளப்படுவதில்லை).
- விருதுகளுக்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. நடுவராகிய நான் திரைப்படத்தை முழுமையாகப் பார்த்து விட்டால் அப்படம் விருதுகளின் அனைத்து பிரிவுகளுக்கும் விண்ணப்பித்ததாகப் பொருள் கொள்ளப்பட்டு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விடும்.
பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட படங்கள்
நான் ஈ * முகமூடி * தடையறத் தாக்க * துப்பாக்கி * பீட்ஸா * நான் * 3 * கழுகு * ஆரோகணம் * மதுபானக்கடை * கலகலப்பு * மாற்றான் * தாண்டவம் * பில்லா 2 * தோனி * மாலைப் பொழுதின் மயக்கத்திலே * சகுனி * சுந்தரபாண்டியன் * போடா போடி * அட்டக்கத்தி * நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் * வழக்கு எண் 18/9 * காதலில் சொதப்புவது எப்படி? * அம்மாவின் கைப்பேசி * கும்கி * நீதானே என் பொன்வசந்தம் * நீர்ப்பறவை * மிரட்டல் * ஒரு கல் ஒரு கண்ணாடி * வேட்டை * அரவான் * நண்பன் * (மொத்தம் – 32)
2012 விருது முடிவுகள்
- சிறந்த திரைப்படம் – நான் ஈ
- சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – துப்பாக்கி
- சிறந்த இயக்குநர் – ராஜமௌலி (நான் ஈ)
- சிறந்த திரைக்கதை – ராஜமௌலி (நான் ஈ)
- சிறந்த வசனம் – சுபா (மாற்றான்)
- சிறந்த கதை – லக்ஷ்மி ராமகிருஷ்ணன் (ஆரோகணம்)
- சிறந்த பின்னணி இசை – கே (முகமூடி)
- சிறந்த ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர் (பில்லா 2)
- சிறந்த படத்தொகுப்பு – ஸ்ரீகர்பிரசாத் (துப்பாக்கி)
- சிறந்த கலை இயக்கம் – எஸ். ரவீந்தர் (நான் ஈ)
- சிறந்த ஆடை வடிவமைப்பு – வாசுகி பாஸ்கர் (பில்லா 2)
- சிறந்த ஒப்பனை – மாற்றான்
- சிறந்த ஒலிப்பதிவு – ஸ்டீஃபன் கோம்ஸ் (பில்லா 2)
- சிறந்த VFX – Makuta VFX (நான் ஈ)
- சிறந்த சண்டை அமைப்பு – Tony Leung Siu Hung (முகமூடி)
- சிறந்த நடன இயக்கம் – ஷோபி (துப்பாக்கி)
- சிறந்த பாடல் இசை – அநிருத் ரவிச்சந்தர் (3)
- சிறந்த பாடல் ஆசிரியர் – மதன் கார்க்கி (அண்டார்க்டிகா – துப்பாக்கி)
- சிறந்த பின்னணி பாடகர் – ப்ரதீப் (ஆசை ஒரு புல்வெளி – அட்டக்கத்தி)
- சிறந்த பின்னணி பாடகி – ஸ்ரேயா கோஷல் (சஹாயனே – சாட்டை)
- சிறந்த நடிகர் – சூர்யா (மாற்றான்)
- சிறந்த நடிகை – ஸ்ருதிஹாசன் (3)
- சிறந்த துணை நடிகர் – பசுபதி (அரவான்)
- சிறந்த துணை நடிகை – ராதிகா ஆப்தே (தோனி)
- சிறந்த குணச்சித்திர நடிகர் – சத்யராஜ் (நண்பன்)
- சிறந்த குணச்சித்திர நடிகை – நந்திதா தாஸ் (நீர்ப்பறவை)
- சிறந்த வில்லன் நடிகர் – சுதீப் (நான் ஈ)
- சிறந்த நகைச்சுவை நடிகர் – சூரி (சுந்தரபாண்டியன்)
- சிறந்த குழந்தை நடிகர் – மாஸ்டர் ஆகாஷ் (தோனி)
- சிறந்த டைட்டில் கார்ட் – துப்பாக்கி
- சிறந்த ட்ரெய்லர் – பில்லா 2
- சிறந்த திரைப் புத்தகம் – கதாநாயகனின் மரணம் (ராஜன்குறை)
- சிறந்த திரை விமர்சகர் – கௌதம சித்தார்த்தன் (தீராநதி)
0
சி.சரவணகார்த்திகேயன்