36வது சென்னை புத்தகக் கண்காட்சி நாளை தொடங்குகிறது.
தேதி : ஜனவரி 11 முதல் ஜனவரி 23 வரை / முகவரி : நந்தனம் ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சிக் கல்லூரித் திடல்.
காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த புத்தகக் கண்காட்சி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளி வளாகத்துக்கு மாற்றப்பபட்டது. இப்போது அங்கிருந்து, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. முந்தைய இரு இடங்களோடு ஒப்பிடுகையில், ஒய்.எம்.சி.ஏ பெரியது என்பது முதல் ப்ளஸ்.
இரண்டாவது ப்ளஸ், இநத இடமாற்றம் காரணமாக இந்துத்துவாவாதிகள் கடும் வருத்தத்தில் இருப்பதாக வந்துள்ள செய்திகள். காயிதே மில்லத், புனித ஜார்ஜ், ஒய்.எம்.சி.ஏ என்று இஸ்லாமிய, கிறிஸ்தவ சிறுபான்மையினத்தவரைத் திருப்திபடுத்தும் நோக்கில் இந்த இடத்தேர்வுகள் நடைபெறுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். போலி மதச்சார்பின்மை பேசும் காங்கிரஸுக்கு இதில் நிச்சயம் பங்கு இருக்கும் என்றும், எதிர்வரும் தேர்தலை மனத்தில் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும் நம்புவதற்குப் போதுமான ஆதாரங்கள் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
புத்தக வாசனை அலர்ஜி கொண்டவர்கள் சைதாப்பேட்டையில் இருந்து மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். மற்றவர்களைப் புத்தகக் கண்காட்சி அன்புடன் வரவேற்கிறது.
0
சாத்தான்